மன அமைதியை அடைய ஆய்வுகள் பரிந்துரைக்கும் வழிகள் என்னென்ன?

 வாழ்வில் உயர்வும் தாழ்வும்மகிழ்ச்சியும் துக்கமும் சேர்ந்தே வரக்கூடியதுதினசரி புதுப்புது சவால்களை சந்தித்து எதிர் நீச்சல் போடும் நமக்குமன அமைதி அத்தனை எளிதாக கிடைப்பதில்லைஇருந்தாலும் மண்டையை பிளக்கும் வெயிலுக்கு இடையில் மண்பானை தண்ணீர் குடிப்பது போலகீழ்க்கண்ட ஆறு விஷயங்களை கடைபிடித்தால் மனம் அமைதியடைய வாய்ப்பு இருக்கிறது.

1) மனதில் கோபம்வெறுப்பு ஏற்படும்போது யாரிடமும் பேசாதீர்கள்வெறுமனே கண்களை மூடி உங்களை சுற்றியுள்ள சத்தங்களை கேளுங்கள்இல்லையென்றால் ஹெட்போனை மாட்டிக்கொண்டு பறவைகளின் கீச்சுக்குரல்காற்றின் இசைபூனைநாய்களில் சத்தம்மெல்லிய இசை ஆகியவற்றை கேட்கலாம்.

2) மனத்தளர்ச்சி ஏற்படும் போது கண்களை மூடிநான் வலிமையானவன்' ' நான் கோபப்படமாட்டேன்எனக் கூறிக்கொள்ளுங்கள்இது தவறான எண்ணங்களை நோக்கி உங்கள் மனம் செல்வதை தடுக்கும்.

3) மூச்சை இழுத்து விடுவதும் ஒரு தியானம்தான்மெதுவாக மூச்சை இழுத்தபடி ஒன்று முதல் பத்து வரை எண்ணுங்கள்மீண்டும் பத்து முதல் ஒன்று வரை எண்ணியபடி மூச்சை மெதுவாக விடுங்கள்.

4) புதிய காற்றுசூரிய ஒளிதண்ணீர்உணவுகுழந்தைகள்மலர்கள்சாக்லேட்வாழ்க்கைப் பாடங்கள்புத்தகம்செல்ல பிராணிகள்நடை பயிற்சிநடனம்தூக்கம் இவை எல்லாம் உங்களின் மன இறுக்கத்தை போக்கும் அற்புத மருந்துகள்.

5) உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த யாரும் இல்லை என நினைக்கிறீர்களாஅப்படி என்றால் 'மனதுடன் பேசுங்கள்'. 'வாழ்கையில் எனக்கு என்ன தேவை?' என மனதிடம் கேளுங்கள்கேட்கவில்லை என்றால் எதுவும் கிடைக்காது.

6) தோல்வி உங்களுக்குள் எதிர்மறை உணர்வுகளை உண்டாக்கலாம்ஆனால்தோல்வியடையாத மனிதர்களே உலகில் இல்லைதோல்வியே இல்லை என்றால் எப்படி உங்களால் கற்றுக்கொள்ள முடியும்நீங்கள் தோல்வியடைவில்லைஉங்கள் முயற்சிதான் தோல்வியடைந்து என நினைத்துக்கொள்ளுங்கள்.

நன்றி-விகடன் இணையம்.

Comments

Popular posts from this blog

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ

உயர்வு

சூழ்நிலை