கதையல்ல நிஜம்
பொதுவாக நீதிமன்றங்களில் யாரை பெயர் சொல்லி அழைக்கிறார்களோ அவர்கள்தான் உள்ளே போவார்கள் . ஆனால் அன்றைக்கோ வாய்தாவுக்கு வந்திருந்த அனைவருமே கும்பலாக நீதிமன்றத்திற்குள் குழுமியிருந்தார்கள் . நானும் ஒரு வாய்தாவுக்கு ஆஜராகத்தான் போயிருந்தேன் . உள்ளே கூட்டத்தோடு கூட்டமாக எட்டிப்பார்த்தேன் . இது சில வருடங்களுக்கு முன்னால் நடந்த சம்பவம் . அதாவது மதுரையில் ஒரு பெண்ணை ஒரு இளைஞன் கேலி பண்ணுகிறான் . அந்தப் பெண்ணின் அக்காள் மாப்பிள்ளை அந்தப் பையனை கண்டிக்கிறார் . பையனின் மனசில் வன்மம் குடியேறி பழிவாங்கும் வெறியாக மாறுகிறது . தன்னைக் கண்டித்தவரின் இரண்டு வயசு பெண் குழந்தையை கடத்துகிறான் . மதுரையிலிருந்து திருநெல்வேலிக்கு கு...