பலவீனத்துக்கு ஓர் உதை!
பள்ளி விளையாட்டு போட்டிக்காக பெயர் கொடுக்குமாறு ஏழாம் வகுப்பிற்கு சுற்றறிக்கை வந்தது. மாணவர்கள் தங்களுக்குப் பிடித்த விளையாட்டுகளுக்கு விருப்பம் தெரிவித்துக் கொண்டிருந்தார்கள். ஆசிரியர் மாணவர்களின் பெயர்களை எழுதிக் கொண்டிருந்தார். கால்பந்து அணிக்கு மதன், சந்துரு, சந்தோஷ் என சிலர் பெயர் கொடுத்தார்கள். “கால்பந்து விளையாட்டுக்கு என் பெயரை எழுதிக்கோங்க சார்” என்று குரல் கொடுத்தான் கார்த்தி. எல்லோரும் சிரித்தார்கள். அந்த வகுப்பிலேயே கார்த்திக்கு ஒல்லியான தேகம். உடல் பலமும் குறைவு. விளையாட்டில் அவனும் பெரிய ஈடுபாடு காண்பித்ததில்லை. ஆசிரியருக்கே ஆச்சரியம்தான். “நீ வேணும்னா செஸ் போட்டில கலந்துக்க கார்த்தி. கால்பந்து கஷ்டம். அடிபடும்” என்று தயங்கினார் ஆசிரியர். “கத்துட்டாவது விளையாடுவேன் சார்” என்றான் பிடிவாதமாக. ஆசிரியர் கார்த்தியின் பெயரை எழுதிக்கொண்டார். சக மாணவர்கள் நகைப்புடன் பார்த்தார்கள். அந்தப் பள்ளியில் ஆண்டுதோறும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள்தான் கால்பந்து சாம்பியன். தங்கவேல் அந்த வகுப்பில் படித்ததுதான் அதற்கு காரணம். தங்கவேல் படிப்பில் சுமார் என்றாலும், விளையாட்டில் முதலிடம் வந்த...