'டிலயேட் க்ராடிபிகேஷன்' (Delayed Gratification)

1960-களில் ஸ்டான்போர்ட் (Stanford) பல்கலைக்கழகத்தில் வால்டர் மிஸ்செல் (Walter Mischel) என்ற ஆய்வாளர், 'தி மார்ஷ்மல்லோ எஸ்பிரிமெண்ட்' (The Marshmallow Experiment) என்ற ஆராய்ச்சியை மேற்கொண்டார். அந்த ஆராய்ச்சியை சுருக்கமான முறையில் இவ்வாறு செய்யலாம்.



அதாவது, ஒரு பூட்டப்பட்ட அறையில் ஒரு சிறுவன்/சிறுமியை உட்காரவைத்து, அவர்களின் முன்பு ஏதாவது ஒரு வகையான இனிப்புப் பொருளை வைக்க வேண்டும் (எ.கா. சாக்லேட்). பின்பு அவர்களுக்கு இரண்டு வகையான தேர்வுகளை கொடுக்க வேண்டும்:

  1. வைக்கப்பட்ட சாக்லேட்டை உடனடியாக சாப்பிடலாம் (அ)
  2. 15 நிமிடங்கள் அந்த சாக்லேட்டை தொடாமல் இருந்தால், இரண்டு சாக்லேட்டுகள் கிடைக்கும்

பின்பு இந்த ஆராய்ச்சியில் பங்கெடுத்த சிறுவர்/சிறுமியரின் வாழ்க்கையை கூர்ந்து கவனிக்க வேண்டும்.

இப்படி செய்யப்பட்ட வால்டர் மிஸ்செலின் ஆராய்ச்சியின் கண்டுபிடிப்பு இதுதான்: 15 நிமிடங்கள் பொறுமையாக இருந்து, இரண்டு சாக்லேட்டுகள் வாங்கும் சிறுவர்/சிறுமியர், சாக்லேட்டை உடனே சாப்பிடும் சிறுவர்/சிறுமியரை விட வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு வந்தனர்.

ஸ்வீடனில் ஒரு பழமொழி உண்டு:

“யார் தனக்கு தேவையற்ற பொருளை வாங்குகிறார்களோ, அவர்களை தன்னிடம் இருந்தே களவாடும் திருடர்கள் ஆவார்கள்.”

“He who buys what he doesn’t need steals from himself.”

நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள்? உங்களிடம் இருந்தே களவாட போகிறீர்களா, இல்லை நல்ல சேமிப்பு பழக்கங்களின் மூலம் உங்கள் எதிகாலத்தை வளப்படுத்த போகிறீர்களா?





Comments

Popular posts from this blog

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ

Nothing can compete with The knowledge gained from poor, confidence

EFFECTS OF NEGATIVE THOUGHTS ON YOUR MIND & BODY