*குழந்தைகளுக்கு ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுப்பது எப்படி?*

  வாழ்க்கையில் ஒழுக்கம் என்பது மிக முக்கியமாகும். ஒழுக்கம் என்பது குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் இன்றியமையாதது.


ஒழுக்கத்தைப் பற்றி திருவள்ளுவர் "ஒழுக்கமுடைமை" என்ற அதிகாரத்தில் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் என்று கூறியுள்ளார். அதில் ஒழுக்கத்தை உயிரை விட மேலாக பாதுகாக்க வேண்டும் என்று கூறுகிறார். நாம் வாழ்வில் ஒவ்வொரு பருவத்தில் எவ்வாறு ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து வாழவேண்டும் என்று அந்த அதிகாரத்தில் கூறியிருக்கிறார். அதை ககடைபிடித்து வாழ்ந்து , நமது குழந்தைகளுக்கும் அதன் முக்கியத்துவத்தை கற்று தர வேண்டும்.


ஒழுக்கத்தின் அவசியத்தை வலியுறுத்தல்


குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களை ஒழுக்கம் உருவாக்குகிறது.


பெரியவர்கள் ஒழுக்கத்தைக் கடைபிடித்து வாழ்வதன் மூலம் சிறியவர்கள் அதைப் பின்பற்றலாம்.


இறைநம்பிக்கையை ஒழுக்கம் வளர்க்கிறது.


ஒரு குறிக்கோளை நோக்கி செல்லும்போது அதை வெற்றிகரமாக எடுத்துச் செல்ல உதவுகிறது.


பள்ளியில் கற்பிக்கப்படும் ஒழுக்கம், பள்ளியில் விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் ஒரு மாணவனை நல்ல மாணவனாக திகழவும், நல்ல மதிப்பெண்களைப் பெற வைப்பதோடு அவர்களை கல்வியுடன் சேர்ந்து ஒழுக்கத்தைக் கற்பிக்க உதவுகிறது.


குழந்தைகளுக்கு நாம் சிறு வயதில் இருந்தே சுய ஒழுக்கத்தை கற்பிக்கவேண்டும்.


ஒழுக்கமானது குழந்தைகளை பொறுப்பான மனிதனாக மாற்றுகிறது.


ஒழுக்கம் என்பது குழந்தைகளுக்கு உணவு, உடற்பயிற்சி செய்தல், மற்றவரிடம் பேசும் முறை, பள்ளியில், வெளி இடத்துக்குச் செல்லும்போது அங்கு நடந்து கொள்ளும் நிலை போன்ற அனைத்தையும் கற்றுக் கொடுக்கிறது.


ஆதலால் ஒழுக்கம் என்பது வாழ்வியல் நெறிமுறைகளைக் கற்றுத் தருவதற்கு அவசியமானதும், இன்றியமையாததும் ஆகும்.


விளையாட்டின் மூலமாக ஒழுக்கத்தை கற்பித்தல்


குழந்தைகளுக்கு விளையாட்டு மிகவும் பிடித்த செயல். அதன்மூலம் கற்பிக்கும் எந்த ஒரு செயலும் அவர்களின் மூளையின் சிந்திக்கும் திறனை அதிகப்படுத்துவது மட்டுமல்லாமல், அதனை எளிதாக புரிய வைக்கவும் உதவுகிறது.


நீங்கள் உங்கள் குழந்தையுடன் இணைந்து, விளையாட்டின் மூலம் ஒழுக்கத்தை கற்பித்தல் ஒரு நல்ல செயலாகும்.


விளையாட்டின் மூலம் குழந்தைகள் பொறுமை, பழக்கவழக்கங்கள், நியாயமாக நடக்கும் முறை போன்றவற்றை கற்றுக்கொள்கிறார்கள்.


செஸ் விளையாட்டின் மூலம் நேரத்தை எப்படி பயன்படுத்துவது என்று கற்றுக்கொள்ள முடியும். காலம் பொன் போன்றது என்பதை அறிந்து கொள்கிறார்கள்.


கேரம் போன்ற விளையாட்டுகள், வாழ்க்கையில் நமக்கு பல தடைகள் வரும்போது, நமக்கு தேவையானவற்றை தேர்ந்தெடுக்க உதவுகிறது.


கதைசொல்லி விளையாடுவதன் மூலம் அவர்கள் நல்லொழுக்கத்தை பின்பற்றுகிறார்களா என்று தெரிந்து கொள்ள உதவுகிறது.


பல்லாங்குழி போன்ற விளையாட்டின் மூலம் சேமிப்பை பழக்கப்படுத்திக் கொள்ள கற்றுக்கொள்கிறார்கள்.


குழந்தைகளுக்கு விளையாட்டின் மூலம் ஒழுக்கத்தை கற்பிப்பது பெற்றோர்களுக்கு மிகவும் எளிது.

Comments

Popular posts from this blog

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ

உயர்வு

சூழ்நிலை