ஒரு நாட்டின் தலைவிதி வகுப்பறைகளில் தீர்மானிக்கப்படுகிறது

பிலிப் என்கின்ற மன்னனுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. ஊர் மக்களை ஓன்று திரட்டி, தனது உப்பரிகை மேல் நின்று கொண்டு... தங்க நாணயத்தைத் திரண்டு நின்று கொண்டு இருந்த மக்கள் வீது அள்ளி, அள்ளி வீசினான்.

அங்கு நின்று கொண்டு இருந்த கடைசி மனிதன் கையில் நாணயம் கிடைக்கும் வரை வீசிக் கொண்டே இருந்தான்.

அப்போது மக்கள் எல்லாம் மகிழ்ச்சி பொங்க மன்னனின் குழந்தையை வாழ்த்துவது கண்டு மனம் பூரித்தான்.

மன்னனின் அமைச்சர் ஒருவர் சொன்னார். *மன்னர் ஆண் குழந்தை பிறந்த மகிழ்ச்சியை மக்களிடம் தங்கக் காசு கொடுத்து, அதனைத் தெரிவித்து மகிழ்கிறார்* என்று சொன்ன போது,

மன்னன் குறிக்கிட்டுச் சொன்னான்...

*"இல்லை இல்லை எனக்கு ஆண்மகவு பிறந்ததற்காக நான் தங்கக் காசு  கொடுக்கவில்லை."*

*எனக்குப் பாடம் நடத்தி என்னைப் புத்திசாலி ஆக்கிய "ஆசிரியர் அரிஸ்டாட்டில்" இருக்கும் போது.. என் மகன் பிறந்து விட்டான்.*

*அவர் என் மகனை "மிகப் பெரும் அறிவாளியாக" இந்த உலகத்திற்கு உருவாக்கித் தருவார்.. என்ற மகிழ்ச்சியில் தான் இந்தப்  பொற்காசுகளை அள்ளித் தூவுகிறேன்* என்று சொல்லி மீண்டும் அள்ளித் தூவினான்.

அவன் சொன்னபடி பிற்காலத்தில் மிகப் பெரும் அறிவாளியாக உருவெடுத்தவன் தான் பிலிப் என்ற மன்னனின் மகன் தான் *"மாவீரன் அலெக்சாண்டர்."*

ஆம்..,

*"ஒரு நாட்டின் தலைவிதி வகுப்பறைகளில் தான் தீர்மானிக்கப்படுகிறது"* என்பது நூறு சதவீதம் உண்மை. தாய், தந்தையை விட, ஆசிரியரிடம் தான் ஒரு குழந்தை அதிக நேரம் செலவழிக்கிறது.

எனவே தான், ஆசிரியர்கள் *"இரண்டாவது பெற்றோர்"* என அழைக்கப்படுகின்றனர்.

மாணவர்களின் *"அறியாமை எனும் இருளை நீக்கி"* அவர்களது வாழ்வில் ஒளி ஏற்றுகின்றனர்..
 
*மாணவர்கள் "கல்" என்றால், ஆசிரியர்கள் "சிற்பிகள்"* போன்ற பொன்மொழிகள் ஆசிரியர்களுக்கு புகழை சேர்க்கின்றன.

_*"ஒரு சிறந்த ஆசிரியரால் மட்டுமே, ஒருவனை... மிகச் சிறந்த குடிமகனாக உருவாக்க முடியும்."*_

Comments

Popular posts from this blog

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ

உயர்வு

சூழ்நிலை