சாணக்கியர் சிந்தனை

 *மற்றவர்கள் செய்யும் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் எல்லாத் தவறுகளையும் நீங்களே செய்யும் அளவுக்கு உங்களுக்கு ஆயுள் இருக்காது.*


*மிகவும் நேர்மையாக இருக்காதீர்கள்; ஏனெனில் நேரான மரங்கள் முதலில் வெட்டப்படும்; நேர்மையானவர்களே முதலில் பழிதூற்றப்படுவார்கள். கொஞ்சம் வளைந்து கொடுங்கள். வாழ்க்கை, லகுவாய் இருக்கும்.*


*இங்கு விஷமற்ற பாம்பு கூட தன்னை விஷமுள்ள பாம்பு போல காட்டிக்கொள்ள வேண்டுமாக்கும்.*


*உங்கள் இரகசியங்களை எவரிடம் பகிர்ந்து கொள்ளாதீர். அது உங்களை அழித்து விடும். இது தான் மிகப்பெரிய குரு மந்திரம்.*


*ஒவ்வொரு நட்புக்கு பின்னாலும் ஒரு சுயலாபம் இருக்கின்றது. சுயலாபம் இல்லாத நட்பே இல்லை. இது ஒரு கசப்பான உண்மையே.*


*ஒரு வேலையை செய்யத்தொடங்கும் முன் இந்த மூன்று கேள்விகளையும் கேட்டுக்கொள்ளுங்கள். ஏன் இதை செய்கின்றேன்? இதன் முடிவு என்னவாக இருக்கும்? இதில் நான் வெற்றிபெறுவேனா இல்லையா? என ஆழமாக யோசித்து அதில் நல்ல விடைகள் கிடைத்தால் மட்டுமே அந்த பணியை செய்யத் தொடங்குங்கள்.*


*பயம் உங்களை நெருங்கத் தொடங்கும் போதே அதை தாக்கி அழித்து விடுங்கள்.*


*ஒரு பணியைச் செய்யத்தொடங்கியப் பின் தோல்வியைகுறித்து பயம் கொள்ளாதீர். அப்பணியை நிறுத்தவும் செய்யாதீர். தன் பணியை செவ்வனே செய்பவர்களே மிக மகிழ்ச்சியான மனிதர்கள்.*


*மலர்களின் வாசம் காற்று வீசும் திசையில் மட்டுமே போகும்.ஆனால் ஒருவர் செய்யும் தர்மமோ நாலாதிசையும் செல்லும்.*


*ஒருவன் தான் செய்யும் செயல்களாலேயே மகானாகின்றான். பிறப்பினால் அல்ல.*


*உங்கள் குழந்தையை முதல் ஐந்து வருடங்கள் செல்லமாக வைத்துக்கொள்ளுங்கள். அடுத்த ஐந்து வருடங்களும் திட்டி தீர்த்துக்கொள்ளுங்கள்.பதினாறு வயதை எட்டும் போது உங்கள் நண்பனைப் போல நடத்துங்கள். தலைக்கு மேல் வளர்ந்துவிட்ட உங்கள் பிள்ளைகள் தான் உங்களுக்கு உற்ற நண்பர்கள்.*


*குருடர்களுக்கு முகம் பார்க்கும் கண்ணாடி எப்படி உதவாதோ அப்படியே முட்டாள்களுக்கும் புத்தகங்கள் உதவாது.*


*கல்வியே சிறந்த நண்பன். நன்கு கற்றவனுக்கு செல்லும் இடமெல்லாம் மரியாதை உண்டு. கல்வியானது இளமையையும் அழகையும் வீழ்த்திவிடும்.*


*"மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ ஞானிகள் வழிகாட்டுதல் அவசியம்"*


*#சாணக்கியர்*


வாழ்க🙌வளமுடன்


*அன்பே🔥சிவம்*

Comments

Popular posts from this blog

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ

Nothing can compete with The knowledge gained from poor, confidence

EFFECTS OF NEGATIVE THOUGHTS ON YOUR MIND & BODY