இருபது வருடத்திற்கு பிறகு சாப்ட்வேர் நிறுவனங்கள் எவ்வாறு இருக்கும்?

நான் ஒரு பெருநிறுவனத்தில் முதல் பணிக்கு சேர்ந்த போது எனது இயக்குநர் எங்களிடம் coding கின் ஆயுட்காலம் 5 வருடம்தான், அதற்குபிறகு எல்லாமே ஆட்டோமேஷன் ஆகிவிடும் என்றார். இதோ ஓடிவிட்டது 15 வருடங்கள். இன்றுகூட நான் code எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன், வேறு framework, மேம்பட்ட வன்பொருளில்.

பல fiction படங்களில் 2000 இல் பறக்கும் கார் இருக்கும் என்றார்கள். இப்போதுதான் நாம் எலெக்ட்ரிக் கார்களுக்கே வந்துள்ளோம்.






அதுபோல ஓவரா அடிச்சுவிடாம, ஓரளவு நடக்கக் கூடிய விசயங்களை பட்டியலிடுகிறேன்.

அடுத்த 20 ஆண்டுகளில் என் கணிப்பு இவை.

  • Alternate reality வேகமெடுக்கும். இது தொடர்பான சாதனங்கள், மென்பொருட்கள் விற்றுத்தீர்க்கும், Smart phone வழக்கொழிந்திருக்கும், body implanted chip அல்லது VR கண்ணாடி மூலமோ பேசும் வசதி வந்துவிடும். Gaming நிறுவனங்கள், இந்த தொழில்நுட்பத்தால் பெரும் லாபத்தை அடையும். (Pokémon Go ஞாபகமிருக்குல்ல?)
  • இணைய வேகம் அதிகரித்து office space குறைக்கப்படும். வீட்டில் இருந்து வேலை செய்வது சாதாரணமாகிவிடும். சென்னைக்கு மிக அருகில் என பொட்டல்காடுகளில் விற்காத பலமாடி அபார்ட்மெண்ட்களில் தங்க வேண்டியிருக்காது. மதுரையிலோ, நெல்லையிலோ ஜாலியா சுற்றம் உறவோடு இருக்கலாம்.
  • இந்தியா தனது ‘Backoffice’ நிலையைவிட்டு வெளியேறி முதல்தர நிறுவனங்கள், start up கள் என இன்றைய Silicon Valley போல ஆகியிருக்கும். Offshoring என்பது ஆப்பிரிக்கா, கிழக்கு ஐரோப்பா, பிரேசில் ஆகிய நாடுகளில்தான் இருக்கும். ‘இந்தியாவா? costly’ என்பார்கள்.
  • செயற்கை நுண்ணறிவு, இயந்திரக்கற்றல் ஆகியவை administrative துறைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். ‘எங்க காலத்தில HR எல்லாம் மனுசங்களா இருந்தாங்க, Recruiter எல்லாம் phone பண்ணுவாங்க’ என பேசுவார்கள். ஏன்? AI, Resume தேர்வு, Code interview, salary prediction என அனைத்தையும் செய்கிறது இப்போவே! Human interview என்பது கடைசியில் நடத்தப்படுவதாக இருக்கும்.
  • கல்வி மென்பொருட்களின் தேவை அதிகரிக்கும். 400 Engineering கல்லூரிகள் எல்லாம் இருக்காது, ஒருசில பல்கலைக்கழங்கள், மீதியெல்லாம் reading centers என ஆகும், எல்லாரும் online கல்வியை அடைய வாய்ப்புகள் ஏற்படும். (ஆசிரியர்கள் education domain இல் product managerகளாக மாறுவார்கள், பலர் வேலை இழப்பார்கள்)
  • Data Storageக்கு டிமாண்ட் பன்மடங்கு அதிகரிக்கும். தரிசு நிலங்கள் பல data center களாக மாறிவிடும். இதனால் பட்டிதொட்டிகளில் network and storage engineers நிறைய இருப்பார்கள்.
  • கால் சென்டர்களை ‘சிரி’யும் ‘அலெக்ஸா’வும் கபளீகரம் செய்துவிடும். ராமசாமிகள் ‘Hey I am Sam’ என ஃபேக் அக்சென்ட்டில் கடுப்பேற்ற மாட்டார்கள்.
  • Online மூலமே பாங்க்குகள் நடத்தப்படும், பல Branch office மூடப்பட்டு, அனைத்துமே மென்பொருளால் இயக்கப்படும்.fin-tech இன்னும் லாபமீட்டும். The Best Online Banks Of 2020 | Bankrate
  • மருத்துவத்துறைக்கும், bio medical துறைக்குமான தூரம் குறைந்து, Surgery, diagnosis, treatment என அனைத்தையும் மென்பொருட்கள் செய்யும். Medical software industry இன்னும் விரிவடையும். ‘எங்க காலத்தில patient முகத்தை பார்த்தே வியாதி கண்டுபிடிப்போம், இப்பவும் இருக்காங்களே, ஆயிரம் கம்ப்யூட்டர் தேவப்படுது’ என பூர்ணம் விஸ்வநாதன் போல பழைய டாக்டர்கள், புது டாக்டர்களை குறை சொல்வார்கள்.
  • Manufacturing செக்டரில் முழுக்கமுழுக்க IOT, RPA ஆதிக்கம் செலுத்தும்.

மொத்தத்தில் இன்று இருக்கும் அனைத்து vertical களும் 20 ஆண்டுகளில் இருக்கும், தொழில்நுட்பம் மேம்பட்டும், மேம்படாதவர்களை விலக்கியும், மென்பொருள் நிறுவனங்கள் பீடுநடை போடும்.



Comments

Popular posts from this blog

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ

உயர்வு

சூழ்நிலை