எப்போதும் அமைதியாக இருங்கள் ! எதிலும் திருப்தி அடைந்தவராக இருங்கள் !!!

 ஸ்வேதா என்பவர் 


10 கிலோ மீட்டர் தூரத்தை கடப்பதற்கு ஒரு மணி நேரம் வரை எடுத்துக் கொண்டார்.


ஆகாஷ் என்பவர் அதே தூரத்தைக் கடப்பதற்கு இரண்டு மணி நேரம் வரை எடுத்துக் கொண்டார்.


இவர்களில் யார் வேகமானவர் மற்றும் ஆரோக்கியமானவர் என்று கேட்டால் நிச்சயமாக, 

நமது பதில் ஸ்வேதா என்றே தான் வரும்.




இப்பொழுது ஸ்வேதா என்பவர்  சிறிதும் சேதமில்லாத தார் சாலையில்  அந்த தூரத்தைக் கடந்தார் என்றும், 




ஆகாஷ் என்பவர் கரடு முரடான வயல் வெளிப்பாதையில் அதைக் கடந்தார் என்றும் 


நான் சொன்னால், இப்பொழுது நம்முடைய பதில் மாறும் அல்லவா ?




ஆம் ! ?




நிச்சயமாக இப்பொழுது 


ஆகாஷ் தான் வேகமானவர் 


என்றும் சொல்லுவோம் !




மறுபடியும் இப்பொழுது ஸ்வேதாவுக்கு 50 வயது என்றும் ஆகாஷுக்கு 


25 வயது என்றும் கூடுதல் தகவலை தரும் பொழுது...




நம்முடைய பதில் மறுபடியும் மாறும் அல்லவா ?




ஆமாம்,




இப்போது ஸ்வேதா தான் வேகமானவர் என்று சொல்லுவோம்.


மேலும் ஆகாஷ் என்பவருடைய எடை 140 கிலோ என்றும் ஸ்வேதாவின் எடை 65 கிலோ தான் என்று நான் சொல்லும் போது, 


மீண்டும் இந்த பதில் மாறும். 


இப்பொழுது ஆகாஷ் தான் வேகமானவர் என்றும் 

சொல்லுவோம் ! 




இதே போல ஆகாஷ் பற்றியும் ஸ்வேதா பற்றியும், 

நம்முடைய இந்த முடிவானது அவர்களைப் 

பற்றிய கூடுதல் தகவல்கள், 


புள்ளி விவரங்கள் கிடைக்கக் கிடைக்க மாறிக் கொண்டே இருக்கும். 

இது தான் வாழ்க்கையிலும்.  




நாம் ஒவ்வொருவரைப் பற்றியும் மிக வேகமாக நம்முடைய அபிப்பிராயங்களை உருவாக்குகிறோம். 




அவர்களோடும், அவர்களின் செயல்


பாடுகளோடும், நம்மை ஒப்பிடத் தொடங்குகின்றோம்.  




இதனால் 


நாம் நமக்கு நாமே தீங்கை விளைவித்துக் கொள்கின்றோம்.  




வாழ்க்கை என்பது ஒவ்வொருவருக்கும் மாறுபட்டதாகும். 

ஒவ்வொருவருக்கும் கிடைக்கக் கூடிய வாய்ப்புகளும் வேறுபட்டதாகும். 




ஒவ்வொருவருக்கும் கிடைத்திருக்கும் அறிவும், 

பொருளும் வேறாக இருக்கலாம். 




ஒவ்வொருவரும் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் வேறாக இருக்கலாம்.




அதற்கான தீர்வுகள் கூட வேறாக இருக்கலாம் ! 




எனவே வாழ்க்கை என்பது மகிழ்ந்து வாழ்ந்து அனுபவிக்க வேண்டிய 


ஒன்றாகும். 




அதைத் தேவையில்லாமல் மற்றவர்களோடு ஒப்பிட்டு பொன்னான நேரத்தை 


வீணாக்கிக் கொள்ளாதீர்கள்.




நீங்கள் தான் உயர்ந்தவர்கள் !




நீங்கள் தான் சிறந்தவர்கள் !! 


உங்களுடைய முழு சக்தியையும் ஆற்றலையும் பிரயோகிக்கக் 


கற்றுக் கொள்ளுங்கள். 




உங்களுடைய சூழ்நிலைகளுக்கு தகுந்தவாறு முடிவுகளை எடுத்து முன்னேறுங்கள் !! 




எப்போதும் அமைதியாக இருங்கள் ! 

எதிலும் திருப்தி அடைந்தவராக இருங்கள் !!!


புன்னகையைப் படர விடுங்கள் !


இயல்பாக மனம் விட்டு சிரிக்கப் பழகுங்கள் !!

Comments

Popular posts from this blog

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ

Nothing can compete with The knowledge gained from poor, confidence

EFFECTS OF NEGATIVE THOUGHTS ON YOUR MIND & BODY