மனம் இல்லாத பணக்காரர்களை எப்பொழுதும் நம்பாதீர்கள்
இதைப் பார்த்ததும் அவர் வியப்புற்று டிரைவரிடம் காரை நிறுத்தக் கூறுகிறார்.
பின் அந்த இருவரின் அருகில் சென்று," நீங்கள் ஏன் இப்படி புற்களை உண்கிறீர்கள் எனக் கேட்கிறார்.
உடனே அவர்களில் ஒருவன்," எங்களிடம் உணவு சாப்பிடுவதற்கான பணம் இல்லை, எனவே நாங்கள் புற்களை தான் உண்ண வேண்டும் என்கிறார்.
உடனே அந்த மேனேஜர், சரி நீங்கள் என் வீட்டிற்கு வாருங்கள், நான் உங்களுக்கு உண்ண கொடுக்கிறேன் என்கிறார்.
உடனே அந்த ஏழை," ஐயா.. எனக்கு ஒரு மனைவியும் ஐந்து குழந்தைகளும் இருக்கிறார்கள், அதோ அந்த மரத்தடியில் இருக்கிறார்கள் என்கிறார்.
உடனே பணக்காரர்," அவர்களையும் அழைத்து வா எனக் கூறி விட்டு, பக்கத்தில் நின்றிருந்த மற்றொரு ஏழையிடம்.. "நீயும் இவர்களுடன் வரலாம் " என்கிறார்.
உடனே அந்த மற்றொரு ஏழை," ஐயா.. எனக்கு ஒரு மனைவியும் ஏழு குழந்தைகளும் இருக்கிறார்கள் என்கிறார்.
உடனே அந்த பணக்காரர்," சரி அவர்களையும் அழைத்து வா" என்கிறார்.
இவர்கள் அனைவரையும் அந்த பெரிய காரில் அமர்த்தி அந்த மேனேஜர் அவர் வீட்டை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்.
அப்பொழுது அந்த ஏழைகளில் ஒருவர், " ஐயா.. உங்களுக்கு மிகவும் இளகிய மனது, எங்கள் எல்லோரையும் உங்களுடன் இப்படி அழைத்துக் கொண்டு செல்கிறீர்களே" என்கிறான்.
பணக்காரர் உடனே," இது எனக்கு மிகவும் சந்தோஷத்தை கொடுக்கின்றது, உங்களுக்கு என் வீடு அமைந்துள்ள இடம் மிகவும் பிடிக்கும். ஏறத்தாழ அங்கே உள்ள புற்கள் ஒரு மீட்டர் அளவிற்கு வளர்ந்து இருக்கின்றது என்றார்.
#நீதி : மனம் இல்லாத பணக்காரர்களை எப்பொழுதும் நம்பாதீர்கள்.....!!!🤣🤣🤣🤣😜😜
Comments
Post a Comment