மூடநம்பிக்கை

 1. நாங்க பாக்குற மரத்திலெல்லாம் மஞ்சத் துணிய சுத்தி பூ பொட்டு வச்சிருந்த வரைக்கும் ஒரு பயலும் மரத்த வெட்டாமத் தான் இருந்தான்.

பனைமரம் கிழே பனையடி கருப்பு

ஆலமரம் கிழே ஆலடி கருப்பு

வேப்பமரம் கிழே வேம்படி கருப்பு

மாமரம் கிழே மாவடி கருப்பு

நாவல் மரம் கிழே நாவலடி கருப்பு

இப்படி சொல்லிக் கிட்டே போகலாம்.

என்றைக்கு இதெல்லாம் மூடநம்பிக்கைன்னு கூவ ஆரம்பிச்சானோ அன்றைக்கே இருக்குற மரத்த பூராத்தையும் வெட்ட ஆரம்பிச்சிட்டான்.

2. நாங்க ஆலமரத்துக்கு கீழேயும், அரசமரத்துக்கு கீழேயும் பிள்ளையார வச்சி வழிபட்டுக்கிட்டு இருக்கும் போதெல்லாம் மனுச மக்க சுத்தமான காத்த சுவாசிச்சிட்டு இருந்தான்.

இதையெல்லாம் மூடநம்பிக்கைன்னு என்றைக்கு பினாத்த ஆரம்பிச்சானோ அன்றைக்கே சுத்தமான காத்த தேடி ஓடிட்டு இருக்கான்.

3. நாங்க விளையுற நிலத்த சாமியா நினைச்சு பூஜை பண்ணிட்டு இருந்தப்போ மனுஷ மக்க சுத்தமான இயற்கையான சாப்பாட்ட சாபிட்டுட்டு ஆரோக்கியமா இருந்தான்.

இதையெல்லாம் மூடநம்பிக்கைன்னு என்றைக்கு பொலம்ப ஆரம்பிச்சானோ அன்றைக்கே இரசாயன சாப்பாட சாப்பிட்டுட்டு ஆஸ்பத்திரிக்கு ஓடிட்டு இருக்கான்.

Comments

Popular posts from this blog

சூழ்நிலை

Anger Is The Key To Every Evil

Nothing can compete with The knowledge gained from poor, confidence