அம்மா மகள் சமையல்

*அம்மா:*: இப்போவே சமையல் நல்லா கத்துக்கோ இல்லைன்னா கல்யாணத்துக்கு அப்புறம் கஷ்டப்படுவே ன்னு தினமும் சொல்றேன்,என் பேச்சு கேட்டு எப்போதான் சமையல் படிச்சுக்க போறீயா தெரில....

.

*மகள்:* : Cool down மா, நான் கல்யாணத்துக்கு அப்புறமா சமையல் கத்துக்கிறேன்

.

*அம்மா:* கல்யாணம் ஆகி நீ போன பிறகு நான் எப்படி வந்து உனக்கு சமையல் சொல்லிக்கொடுக்கிறது ??

.

*மகள்:* கல்யாணத்துக்கு அப்புறமா சமையல் படிக்கிறேன்னு தான் சொன்னேன்..... உங்க கிட்டன்னு சொல்லவே இல்லையே :P

.

*அம்மா:* புருஷன சமைக்க வைப்பேன் ன்னு மொக்கையா பதில் சொல்லாம, ..... யார் கிட்ட சமையல் கத்துக்குவேன்னு சொல்லுடியம்மா

.

*மகள்:* என் மாமியார் கிட்ட சமையல் கத்துக்க போறேன்

.

*அம்மா:* அடிப்பாவி........ஏன்????

.

*மகள்:* நான் இப்போ நல்ல சமையல் தெரிஞ்சுக்கிட்டு போய் சமைச்சாலும் "அது சரி இல்ல, இது சரி இல்ல" ன்னு தான் அவர் சொல்ல போறாரு. So அவரோட அம்மா கிட்டவே சமையல் கத்துக்கிட்டு சமைச்சா ....... அவர் என் சமையல் ல என்ன குறை சொன்னாலும் "உங்க அம்மா இப்படி தான் சொல்லிக்கொடுத்தாங்கன்னு" சொல்லி தப்பிச்சுக்குவேன் , Also மாமியார் கிட்ட சமையல் கத்துக்கிற நேரத்துல அவங்க கிட்டவும் இன்னும் நல்லா பழக சந்தர்ப்பம் கிடைக்கும்,

" உங்க மகனுக்கு என்ன என்ன பிடிக்கும்? அதெல்லாம் எனக்கு சமைக்க சொல்லி தாங்க மா " அப்படின்னு மாமியார் கிட்ட சொன்னா உருகிட மாட்டாங்களா???

.

*அம்மா:* ஆ ஆ ....ங் 🙃🙃

.

*மகள்:* shockஅ குறைங்க , shockஅ குறைங்க மா, ..... இந்தாங்க ஒரு glass தண்ணீ குடிச்சுட்டு dinner cook பண்ணுங்க, ready ஆனதும் கூப்பிடுங்க சாப்பிட வரேன்......இப்போ என் room க்கு போறேன்....bye my sweet செல்ல மம்மி

.

*அம்மா & மகளின் உரையாடலை கவனித்தும் கவனிக்காத மாதிரி ஹாலில் Tv பார்த்துக்கொண்டிருந்த அப்பா விடம் வந்தார் அம்மா,*

.

*அம்மா:* என்னங்க உங்க பொண்ணு இப்படி பேசிட்டு போறா.........ஆனா அவ சொல்ற ஐடியா வும் நல்லாத்தான் இருக்கு......இதெல்லாம் ஏங்க எனக்கு 22 வருஷத்திற்கு முன்னாடி தோணாம போச்சு

.

*அப்பா:* அதுக்கு நீ ஒரு புத்திசாலி தகப்பனுக்கு மகளா பிறந்திருக்கனும்மா ;)

.

*அம்மா:* 😐😐😐

.

*கச்சேரி இனிதே ஆரம்பம் ஆகியது !!!* 😜

Comments

Popular posts from this blog

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ

உயர்வு

சூழ்நிலை