இப்போது என் உடலில் உன் ரத்தம் ஓடுகிறது.
ஒரு பெரிய பணக்காரருக்கு இரத்தம் தேவைப்பட்டது.அந்த வகை ரத்தம் மிகவும் அபூர்வம் ஆதலால் அதற்கு விளம்பரப்படுத்தினார்கள். அதைப்பார்த்த அந்த ஊர் கருமி ஒருவன் தன் ரத்தம் அந்த வகையைச்சேர்ந்தது என்பதால் அந்த நோயாளிக்கு ரத்த தானம் செய்வதாக ஒப்புக்கொண்டு ரத்தம் கொடுத்தான். நோயாளி பிழைத்துக் கொண்டார். அவர் தாம் பிழைத்து எழகாரணமாக இருந்த கருமிக்கு அவன் எதிர்பாராத விதமாக ஒரு பங்களா, கார், மற்றும் 100 பொற்காசுகள் பரிசளித்தார். இத்தகைய பரிசை எதிர்பாராத அக்கருமி மிகவும் மகிழ்ந்து போனான்.
சில மாதங்கள் கழித்து அந்த பணக்காரருக்கு மறுபடியும் உடல் கோளாறு ஏற்படவே, அந்த அரிய வகை ரத்தம் தேவைப்பட்டது. டாக்டர்கள் அந்தக் கருமியை ரத்தம் தர கூப்பிட்டார்கள். அவனும் மிக மகிழ்ச்சியுடன் ரத்தம் தருவதாக கூறி ஆஸ்பத்திரிக்கு வந்து அந்த பணக்கார நோயாளிக்கு ரத்தம் அளித்தான். நோயாளியும் பிழைத்துக்கொண்டார். அந்த நோயாளி கருமியைக்கூப்பிட்டு தன் நன்றியைத்தெரிவித்தார். கருமியும் அவர் ஏதாவது பெரிய பரிசு அளிப்பார் என்று காத்திருந்தார். ஆனால் நோயாளியோ நன்றி என்று மட்டும்கூற, கருமி “ சென்ற தரம் நீங்கள் எனக்கு பெரிதாக நல்ல பரிசுகளை கொடுத்தீர்கள். இந்தத்தடவை வெறும் நன்றி மட்டும்தானா” என்று கேட்க,
இவர் சொன்னார்” இப்போது என் உடலில் உன் ரத்தம் ஓடுகிறது.”
Comments
Post a Comment