எனக்கு எல்லாம் தெரியும்...!

 எனக்குத்தான் எல்லாமே தெரியுமே என்பதில் இருக்கும் இன்பம் வேறு எதிலும் இல்லை..

நான் பெரியவன். எனக்கு எல்லாம் தெரியும். என் சொல்லினை எல்லோரும் செவிமடுக்க வேண்டும். என்னை வெல்ல எவரும் இல்லை. எல்லோரும் எனக்குக் கட்டுப்பட்டவர்கள். இது போன்ற ‘’நான்’’ என்ற எண்ணத்தை முதலில் அகற்றுங்கள்...


இந்த உலகத்தில் எல்லாம் தெரிந்தவர் எவரும் இல்லை. எதுவும் தெரியாதவரும் எவரும் இல்லை...


நான் உயர்ந்தவன் என்ற எண்ணம் இருந்தால் அடியோடு அகற்றி விடுங்கள். மனிதனை மதிக்க வேண்டும். அவரது கருத்தையும் செவிமடுத்துக் கேட்க வேண்டும்...


அதில் நல்லவை இருந்தால் எடுத்துக் கொள்வதில் தவறில்லை. எனக்கு கீழ் பதவியில் உள்ளவர் சொல்வதை எல்லாம் நான் ஏன் கேட்க வேண்டும்...?


எனக்குத் தெரியாதது இந்த உலகில் ஏதும் இல்லை!, என்ற சிந்தனையை உங்கள் மனதில் இருந்தால் முதலில் அதை அகற்றி விடுங்கள்...

கற்றது கை மண்னளவு ,கல்லாதது உலகளவு என்ற ஔவையாரின் வாக்குப்படி, வாழ்க்கையில் கற்க வேண்டும் என்ற வேட்கை இருக்க வேண்டும். அப்போதுதான் நாம் தெரியாததை கற்றுக்கொள்ள முடியும்...


கற்பதற்கும் பெறுவதற்கும் நம்மிடம் வெற்றிடம் இருக்க வேண்டும்...!


*எனக்கு எல்லாம் தெரியும் என்று நினைப்பவா்களால் எதையும் கற்றுக் கொள்ள முடியாது...!*


*தனக்கு தெரிந்ததுதான் முழுமையானது என்று எண்ணுபவரால் அறிவைப் பெற முடியாது...!!*


*எனக்கு எல்லாம் தெரியும் என்ற குழப்பத்தில் இருப்பவர்களைக் காட்டிலும்,எனக்கு எதுவும் தெரியாது என்று இருப்பவர்கள் தெளிவாக இருப்பார்கள்..*


*எனக்கு எல்லாம் தெரியும் என்பது ஆணவத்தின் உச்சம்..*


*எனக்கு இதுபற்றி தெரியாது என்பது தன்னடக்கம்*✍🏼


வாழ்க🙌வளமுடன்


*அன்பே🔥சிவம்*

Comments

Popular posts from this blog

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ

உயர்வு

சூழ்நிலை