Posts

Showing posts from October, 2021

கோபம் அனைத்தையும் இழந்து விடும்... குருவின் பாடம் ...!!!!!

 குருவின் பாடம் ...!!!!! யார் எப்படி நடந்து கொண்டாலும்  கோபமே படாதவர் அந்த துறவி ..!!!! அவரை அவமானப்படுத்தினாலும் கூட கண்டு கொள்ள மாட்டார் ...!!!! பலர் எப்படி எப்படியோ முயற்சி செய்தும் அவரைக் கோபப்படுத்தவே முடியவில்லை ...!!! எப்படி இவரால்  இருக்க. முடிகிறது என்று அந்த ரகசியத்தை அறிந்து கொள்வதில் அவரின் ஒரு சிஷ்யருக்கு ஆர்வம் ..!!!! தன் கேள்வியை துறவியிடமே கேட்டு விட்டார் ...!!!! துறவி அவரிடம்  பொறுமையாக தான் யாரிடமும்  கோபமே படாத ரகசியத்தை விளக்கினார் ..!!! ஒரு ஏரியில் காலியான. படகில் அமர்ந்து தியானம் செய்வது என் நெடுநாள் வழக்கம் ...!!! அப்படி ஒருமுறை தியானத்தில் இருந்த போது நான் அமர்ந்திருந்த படகை முட்டியது ஒரு படகு ..!!! என் தியானம் கலைந்தது ... இப்படி அஜாக்கிரதையாகா படகை முட்ட விட்டது யார் என்று கோபமாகக் கண்களைத் திறந்து பார்த்தால் அது ஒரு வெற்றுப் படகு ... காற்றுக்கு அசைந்து அசைந்து வந்து நான் தியானம் செய்த படகு  மீதி மோதியிருக்கிறது ..!!! என் கோபத்தினை அந்தப் படகிடம் காட்டி எதுவும்  பிரயோஜனம் உண்டோ சீடனே ...!!! யாராவது என்னைக் கோபப்படுத்தும் போது ...

போட்டிகள் நிறைந்த உலகம்...!

 இன்றைய போட்டி உலகில் வெற்றி மீது நமக்கு பெரிய விருப்பம் இருக்கிறது. வாழ்க்கையில் வெற்றியையே முதன்மையாகக் கொண்டு செயல்படுகிறோம்... இதைத் தவிர்க்க முடியாதுதான். சூறாவளியாகச் சுழன்று ஓடும் நீரோட்டம் போன்ற இந்த வாழ்க்கைப் பயணத்தில், மற்றவர்களை விட நாம் ஓரிரு படிகளாவது கூடுதலாக முன்னேற வேண்டியது அவசியமாகும்... ஒரு ஜப்பானியரும் ஒரு அமெரிக்கரும் காட்டிற்குச் சென்று வேட்டையாட விரும்பினார்கள், அதற்காக அவ்விருவரும் அருகிலுள்ள அடர்ந்த காட்டிற்குள் சென்றனர்... அந்த அடர்ந்த காட்டில் அவர்களிருவரும் சிறுசிறு விலங்குகளையும் பறவைகளையும் வேட்டையாடிக் கொண்டே சென்று கொண்டிருந்தபோது, அவர்களுடைய துப்பாக்கியில் இருந்த தோட்டாக்கள் தீர்ந்து விட்டதை உணர்ந்தார்கள்... அந்த சூழலில் சட்டென அவர்களுக்கு அருகில் சிங்கம் ஒன்று கர்ஜிக்கும் ஒலியைக் கேட்டனர். அதனைத் தொடர்ந்து இந்நிலையில் தங்களால் அந்த சிங்கத்தை எதிர் கொள்ள இயலாது என தெரிந்து கொண்டார்கள். உடன் இருவரும் அந்த அடர்ந்த காட்டினை விட்டு வெளியேறுவதற்காக வேகமாக ஓட ஆரம்பித்தனர்... ஆனால்!, அவ்விருவரில் ஜப்பானியர் மட்டும் தன் ஓட்டத்தை நிறுத்தி அவரது காலில் அணிந்...

இப்போது என் உடலில் உன் ரத்தம் ஓடுகிறது.

 ஒரு பெரிய பணக்காரருக்கு இரத்தம் தேவைப்பட்டது.அந்த வகை ரத்தம் மிகவும் அபூர்வம் ஆதலால் அதற்கு விளம்பரப்படுத்தினார்கள். அதைப்பார்த்த அந்த ஊர் கருமி ஒருவன் தன் ரத்தம் அந்த வகையைச்சேர்ந்தது என்பதால் அந்த நோயாளிக்கு ரத்த தானம் செய்வதாக ஒப்புக்கொண்டு ரத்தம் கொடுத்தான். நோயாளி பிழைத்துக் கொண்டார். அவர் தாம் பிழைத்து எழகாரணமாக இருந்த கருமிக்கு அவன் எதிர்பாராத விதமாக ஒரு பங்களா, கார், மற்றும் 100 பொற்காசுகள் பரிசளித்தார். இத்தகைய பரிசை எதிர்பாராத அக்கருமி மிகவும் மகிழ்ந்து போனான். சில மாதங்கள் கழித்து அந்த பணக்காரருக்கு மறுபடியும் உடல் கோளாறு ஏற்படவே, அந்த அரிய வகை ரத்தம் தேவைப்பட்டது. டாக்டர்கள் அந்தக் கருமியை ரத்தம் தர கூப்பிட்டார்கள். அவனும் மிக மகிழ்ச்சியுடன் ரத்தம் தருவதாக கூறி ஆஸ்பத்திரிக்கு வந்து அந்த பணக்கார நோயாளிக்கு ரத்தம் அளித்தான். நோயாளியும் பிழைத்துக்கொண்டார். அந்த நோயாளி கருமியைக்கூப்பிட்டு தன் நன்றியைத்தெரிவித்தார். கருமியும் அவர் ஏதாவது பெரிய பரிசு அளிப்பார் என்று காத்திருந்தார். ஆனால் நோயாளியோ நன்றி என்று மட்டும்கூற, கருமி “ சென்ற தரம் நீங்கள் எனக்கு பெரிதாக நல்ல பரிசுகளை...

*குழந்தைகளுக்கு ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுப்பது எப்படி?*

  வாழ்க்கையில் ஒழுக்கம் என்பது மிக முக்கியமாகும். ஒழுக்கம் என்பது குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் இன்றியமையாதது. ஒழுக்கத்தைப் பற்றி திருவள்ளுவர் "ஒழுக்கமுடைமை" என்ற அதிகாரத்தில் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் என்று கூறியுள்ளார். அதில் ஒழுக்கத்தை உயிரை விட மேலாக பாதுகாக்க வேண்டும் என்று கூறுகிறார். நாம் வாழ்வில் ஒவ்வொரு பருவத்தில் எவ்வாறு ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து வாழவேண்டும் என்று அந்த அதிகாரத்தில் கூறியிருக்கிறார். அதை ககடைபிடித்து வாழ்ந்து , நமது குழந்தைகளுக்கும் அதன் முக்கியத்துவத்தை கற்று தர வேண்டும். ஒழுக்கத்தின் அவசியத்தை வலியுறுத்தல் குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களை ஒழுக்கம் உருவாக்குகிறது. பெரியவர்கள் ஒழுக்கத்தைக் கடைபிடித்து வாழ்வதன் மூலம் சிறியவர்கள் அதைப் பின்பற்றலாம். இறைநம்பிக்கையை ஒழுக்கம் வளர்க்கிறது. ஒரு குறிக்கோளை நோக்கி செல்லும்போது அதை வெற்றிகரமாக எடுத்துச் செல்ல உதவுகிறது. பள்ளியில் கற்பிக்கப்படும் ஒழுக்கம், பள்ளியில் விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் ஒரு மாணவனை நல்ல மாணவனாக திகழவும், நல்ல மதிப்பெண்களைப் பெற வைப்பதோடு அவர்களை கல்வியுடன் சேர்ந்து...

மணமக்கள் வீட்டுக்குள் நுழையும்போது, ஏன் வலது காலை எடுத்து வைத்து வரச் சொல்லுவது ஏன்?...

 மணமக்கள் வீட்டுக்குள் நுழையும்போது, ஏன் வலது காலை எடுத்து வைத்து வரச் சொல்லுவது ஏன்?... மணமக்கள் வீட்டுக்குள் நுழையும்போது வலது காலை எடுத்து வைத்து வரச்சொல்வது இன்றளவும் வழக்கத்தில் உள்ளதை நம்மால் காண முடிகிறது. இதற்கு அறிவியல் ரீதியாக பல காரணங்கள் உள்ளன. இதற்கான விளக்கத்தினை கவிஞர் கண்ணதாசன் இயற்றியுள்ள அர்த்தமுள்ள இந்துமதம் என்னும் நூலின் மங்கள வழக்குகள் என்ற பகுதியின் வாயிலாக அறிந்து கொள்வோம் வாருங்கள். மனோதத்துவ மருத்துவம்... ‘மங்கலம்- அமங்கலம்’ என்று இந்துக்கள் பிரித்தது மூட நம்பிக்கையால் அல்ல. அது மனோதத்துவ மருத்துவம். சந்தோஷச் செய்திகள், வெற்றிச் செய்திகள் கேட்கும்போது, உன் உடல் எவ்வளவு புல்லரிக்கிறது. வாழ்த்துக்கள் ஒரு மனிதனின் காதில் விழுந்து கொண்டே இருந்தால், அவனது ஆயுளும் விருத்தியாகிறது; ஆனந்தமும் அதிகரிக்கிறது. எனவே மங்கல வழக்குகள் அதற்காகவே ஏற்பட்டன. வலப்புறம் ஏன்?... மணமக்கள் வீட்டுக்குள் நுழையும்போது, ஏன் வலது காலை எடுத்து வைத்து வரச் சொல்லுகிறார்கள். மணவறையைச் சுற்றி ஏன் வலம் வருகிறார்கள்? ஊர்வலம் வருவது என்று ஏன் கூறுகிறார்கள்? எல்லாமே வலப்புறம் போவதன் நோக்கம் என...

சாணக்கியர் சிந்தனை

 *மற்றவர்கள் செய்யும் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் எல்லாத் தவறுகளையும் நீங்களே செய்யும் அளவுக்கு உங்களுக்கு ஆயுள் இருக்காது.* *மிகவும் நேர்மையாக இருக்காதீர்கள்; ஏனெனில் நேரான மரங்கள் முதலில் வெட்டப்படும்; நேர்மையானவர்களே முதலில் பழிதூற்றப்படுவார்கள். கொஞ்சம் வளைந்து கொடுங்கள். வாழ்க்கை, லகுவாய் இருக்கும்.* *இங்கு விஷமற்ற பாம்பு கூட தன்னை விஷமுள்ள பாம்பு போல காட்டிக்கொள்ள வேண்டுமாக்கும்.* *உங்கள் இரகசியங்களை எவரிடம் பகிர்ந்து கொள்ளாதீர். அது உங்களை அழித்து விடும். இது தான் மிகப்பெரிய குரு மந்திரம்.* *ஒவ்வொரு நட்புக்கு பின்னாலும் ஒரு சுயலாபம் இருக்கின்றது. சுயலாபம் இல்லாத நட்பே இல்லை. இது ஒரு கசப்பான உண்மையே.* *ஒரு வேலையை செய்யத்தொடங்கும் முன் இந்த மூன்று கேள்விகளையும் கேட்டுக்கொள்ளுங்கள். ஏன் இதை செய்கின்றேன்? இதன் முடிவு என்னவாக இருக்கும்? இதில் நான் வெற்றிபெறுவேனா இல்லையா? என ஆழமாக யோசித்து அதில் நல்ல விடைகள் கிடைத்தால் மட்டுமே அந்த பணியை செய்யத் தொடங்குங்கள்.* *பயம் உங்களை நெருங்கத் தொடங்கும் போதே அதை தாக்கி அழித்து விடுங்கள்.* *ஒரு பணியைச் செய்யத்தொடங்கியப...

The wife got out of the house in anger and a revolutionary invention was made

 *The wife got out of the house in anger and a revolutionary invention was made :-* *The incident happened in 2004. Currently, Google company CEO Sundar Pichai was struggling to make a career in America at that time. Once one of his acquaintances invited him to his house for dinner. Since Sundar had to go with his wife, he made a plan with his wife. Sundar said that if he has to go to the office in the morning, then after office, he will go straight to the invited house for dinner. He asked his wife to reach there directly from home. Meaning that the wife had to go straight for dinner from home and Sundar Pichai had to reach for dinner straight from the office.* *The dinner program was at 8 o’clock in the night. Sundar Pichai’s wife Anjali reached the host’s house for dinner at exactly eight o’clock in the evening in her car. Sundar Pichai also left the office, but he lost his way midway. By the time they reached there, it was almost 10 o’clock. When Pichai reached there, his wife ...

ஃபோன் பே போல யு.பி.ஐ மூலம் பணம் செலுத்தும் பொழுது நாம் எதையாவது இழக்கிறோமா? ஏதேனும் பிரச்சனைகள் நமக்கு வருமா?

Image
  கண்டிப்பாக இழப்புகள் அதிகம். நீண்டகால நோக்கில் பார்த்தால் பிரச்சினைகள் வரலாம்… இந்த பதில் இணையதள பரிவர்த்தனை களால் ஏற்படும் தொழில்நுட்ப கோளாறுகள் மற்றும் தாக்குதல்கள் சார்ந்த இழப்பு பற்றி அல்ல… பெரும் வணிகத்தின் சிறுசிறு தந்திரங்களால் வீழ்த்தப்படும் நமது உளவியலைப் பற்றியது. அரசாங்கமும் வங்கி மற்றும் நிதித்துறை சார்ந்த தனியார் மற்றும் அரசு அமைப்புகளும் எதற்காக இணையதள வழி பணப் பரிமாற்றங்களை ஊக்குவிக்கின்றன என்பது உங்களுக்கே தெரியும். இந்த முறையில் நாம் எப்பொழுதும் பணத்தைக் கையில் வைத்திருக்க வேண்டிய தேவையில்லை யாரேனும் வழிப்பறி கூட செய்யமுடியாது. அப்படியே நமது திறனபேசியை பிடுங்கி பணப்பரிமாற்றம் செய்து கொண்டாலும் அதை வைத்தே அவர்களை பிடித்து விட முடியும் வெகு தொலைவில் உள்ள ஒருவருக்கு உடனடியாக பணம் அனுப்ப இயலும். இணையவழி பரிமாற்றங்களில் பணம் கொடுத்ததற்கு அதுவே ஆதாரமாக இருக்கும். அரசாங்க வங்கியில் பணம் அச்சிடும் தேவை பெருமளவில் குறையலாம். அதிகாரப்பூர்வமற்ற கறுப்பு பண புழக்கத்தை குறைக்க முடியும். என் தனிப்பட்ட அனுபவத்திலிருந்து சொல்கிறேன் 500 ரூபாய்க்கு கீழே உள்ள செலவையாவது உண்மையான பணத...

வாடகை சைக்கிள்

Image
  உடலை இளைக்க... ஒரு வகை உடற்பயிற்சியாகத்தான் சைக்கிள் ஓட்டுவது நம்மிடையே பரவலாக இப்போது இருக்கிறது. இவ்வாழ்வின் ஓட்டத்தில் நிகழும் வெற்றுப் பெடலிங் சத்தமாகத்தான் அவைகளை நான் காண்கிறேன். பூ மலரும் பெடலின் சத்தம் ஒன்று உண்டு. அது பற்றி தான்... இந்த அசை போடல். சைக்கிள் சார்ந்த பயணம் தன்னையே நகர்த்தி நகர்த்தி நிகழ்த்தும் தூரங்களின் தொடர்பு என்பதை சைக்கிள் ஓட்டுவோர் உணர்வர். உடல் இளைக்க ஓட்டுவோர் பற்றி இல்லை.. இந்த சப்தம். சைக்கிள் தான் பயணக் குருவி என்போருக்கான சப்தம் இது. பிடித்த வளைவுக்கு தானாக அடிக்கும் பெல்லில் மணிச்சத்தம் பிறகு தான். இதய சப்தம் தான் முதலில். பச்சை நிற சைக்கிளில் பழுப்பு நிற காட்டுக்குள் பின்னோக்கி செல்லும் பயணத்தில்... சேருமிடம் பால்யமென்றால்... வாடகை சைக்கிள் என்றொரு கான்செப்ட் இருந்ததை கிராமத்து கால்கள் அறிந்திருக்கும். சைக்கிள் என்றொரு வட்ட நிலா வஸ்து ஆட்டி படைத்த கால கட்டம் ஆறாவது ஏழாவது படிக்கையில்... இருந்தது. சொந்தமாக சைக்கிள் வீதியில் யாரோ ஓரிருவரிடம் மட்டுமே இருக்கும். மற்றபடி எங்களை போன்றோர்களுக்கு ஓட்டமும் நடையும் தான்.. பயண சிறகுகள். அந்த வாரம் முழுக்...

எனக்கு எல்லாம் தெரியும்...!

 எனக்குத்தான் எல்லாமே தெரியுமே என்பதில் இருக்கும் இன்பம் வேறு எதிலும் இல்லை.. நான் பெரியவன். எனக்கு எல்லாம் தெரியும். என் சொல்லினை எல்லோரும் செவிமடுக்க வேண்டும். என்னை வெல்ல எவரும் இல்லை. எல்லோரும் எனக்குக் கட்டுப்பட்டவர்கள். இது போன்ற ‘’நான்’’ என்ற எண்ணத்தை முதலில் அகற்றுங்கள்... இந்த உலகத்தில் எல்லாம் தெரிந்தவர் எவரும் இல்லை. எதுவும் தெரியாதவரும் எவரும் இல்லை... நான் உயர்ந்தவன் என்ற எண்ணம் இருந்தால் அடியோடு அகற்றி விடுங்கள். மனிதனை மதிக்க வேண்டும். அவரது கருத்தையும் செவிமடுத்துக் கேட்க வேண்டும்... அதில் நல்லவை இருந்தால் எடுத்துக் கொள்வதில் தவறில்லை. எனக்கு கீழ் பதவியில் உள்ளவர் சொல்வதை எல்லாம் நான் ஏன் கேட்க வேண்டும்...? எனக்குத் தெரியாதது இந்த உலகில் ஏதும் இல்லை!, என்ற சிந்தனையை உங்கள் மனதில் இருந்தால் முதலில் அதை அகற்றி விடுங்கள்... கற்றது கை மண்னளவு ,கல்லாதது உலகளவு என்ற ஔவையாரின் வாக்குப்படி, வாழ்க்கையில் கற்க வேண்டும் என்ற வேட்கை இருக்க வேண்டும். அப்போதுதான் நாம் தெரியாததை கற்றுக்கொள்ள முடியும்... கற்பதற்கும் பெறுவதற்கும் நம்மிடம் வெற்றிடம் இருக்க வேண்டும்...! *எனக்கு எல்லாம...

ஏன் எனக்கு மட்டும்?

  நமக்குச் சோதனைகள் வந்தால், கஷ்டங்கள் வந்தால், துன்பங்கள் வந்தால் கடவுளிடம் நாம் கேட்பது "ஏன் எனக்கு மட்டும் இப்படிச் செய்கிறாய்?" இந்தக் கேள்விக்கு ஒரு டென்னிஸ் வீரர் மிக அழகாகப் பதில் தந்திருக்கிறார். அந்த டென்னிஸ் வீரரின் பெயர் ஆர்தர் ஆஷ். அவர் விம்பிள்டன் வெற்றி பெற்றவர். 1983 ஆம் ஆண்டில் ஒரு அறுவைச் சிகிச்சை செய்து கொண்டபொழுது ரத்தம் பெற்றுக்கொண்டதன் மூலமாக அவருக்கு எய்ட்ஸ் வந்தது. அவரது ரசிகர்கள் மிகவும் வருத்தமடைந்தார்கள். அப்பொழுது பலரும் அவருக்கு எழுதிய கடிதத்தில் கேட்டது: "உங்களுக்கு கடவுள் ஏன் இப்படிச் செய்கிறார்?" இதை அடிப்படையாகக் கொண்டு அவர் செய்தித்தாளில் ஒரு கட்டுரை எழுதினார். அந்த கட்டுரையின் தலைப்பு: "WHY ME ?" " ஏன் எனக்கு மட்டும்? " கட்டுரையில் அவர் எழுதியது பின்வருமாறு: உலகில் எத்தனையோ மனிதர்கள் இருக்கும்பொழுது ஏன் எனக்கு மட்டும் எய்ட்ஸ் தந்தாய் ? குடிப் பழக்கம் உள்ளவர்கள் எத்தனையோ பேர் இருக்கும் பொழுது அந்தப் பழக்கம் இல்லாத எனக்கு, ஏன் எனக்கு மட்டும் எய்ட்ஸ் தந்தாய் ? சிகரெட் பிடிப்பவர்கள் எத்தனையோ பேர் இருக்கும் பொழுது அ...

எப்போதும் அமைதியாக இருங்கள் ! எதிலும் திருப்தி அடைந்தவராக இருங்கள் !!!

 ஸ்வேதா என்பவர்  10 கிலோ மீட்டர் தூரத்தை கடப்பதற்கு ஒரு மணி நேரம் வரை எடுத்துக் கொண்டார். ஆகாஷ் என்பவர் அதே தூரத்தைக் கடப்பதற்கு இரண்டு மணி நேரம் வரை எடுத்துக் கொண்டார். இவர்களில்  யார் வேகமானவர் மற்றும் ஆரோக்கியமானவர் என்று கேட்டால் நிச்சயமாக,  நமது பதில்  ஸ்வேதா என்றே  தான் வரும். இப்பொழுது  ஸ்வேதா என்பவர்  சிறிதும்  சேதமில்லாத  தார் சாலையில்   அந்த தூரத்தைக் கடந்தார் என்றும்,  ஆகாஷ்  என்பவர் கரடு முரடான வயல் வெளிப்பாதையில் அதைக் கடந்தார் என்றும்  நான் சொன்னால்,  இப்பொழுது நம்முடைய  பதில் மாறும் அல்லவா ? ஆம் ! ? நிச்சயமாக இப்பொழுது  ஆகாஷ் தான் வேகமானவர்  என்றும் சொல்லுவோம் ! மறுபடியும் இப்பொழுது ஸ்வேதாவுக்கு 50 வயது என்றும் ஆகாஷுக்கு  25 வயது என்றும் கூடுதல் தகவலை தரும் பொழுது... நம்முடைய பதில் மறுபடியும் மாறும் அல்லவா ? ஆமாம், இப்போது ஸ்வேதா தான் வேகமானவர் என்று சொல்லுவோம். மேலும்  ஆகாஷ் என்பவருடைய எடை 140 கிலோ என்றும் ஸ்வேதாவின் எடை 65 கிலோ தான் என்று நான் சொல்லும் போது,  மீ...

தியானம்

  ஒரு சிறுவனுக்கு நெடு நாட்களாய்த் தீராத சந்தேகம். அந்தச் சிறுவனின் பெற்றோருக்கோ சிறுவனுக்குப் புரிந்த மொழியில் சொல்ல முடியாத இயலாமை. ஒருநாள் மூவரும் ரமண மகரிஷியைச் சந்திக்கச் சென்றிருந்த போது சிறுவன் ரமணரை நெருங்கி, தன் கேள்வியை முன் வைத்தான். * தியானம் என்றால் என்ன ?* சிரித்துக் கொண்டே அந்தச்சிறுவனுக்கு இலையில் ஒரு தோசையைப் பறிமாறச் சொன்னார். சிறுவனிடம், *"நான் எப்போ 'ம்' சொல்றேனோ அப்போ சாப்பிட ஆரம்பிக்கணும்.* அதே மாதிரி..... *எப்போ 'ம்' சொல்றேனோ அதுக்கப்புறம் இலையில் தோசை இருக்கக் கூடாது.* புரிஞ்சுதா?" என்றார் சிரித்துக் கொண்டே. சிறுவனுக்கு ஒரே உற்சாகம். சுற்றியுள்ளோருக்குக்கோ ஒரே குழப்பம். சிறுவன் *மகரிஷியின் 'ம்' க்காகத் தோசையில் ஒரு கையை வைத்தபடி தவிப்புடன் அவர் முகத்தைப் பார்த்தபடி இருந்தான்.* சிறுவனை சிறிது காக்க வைத்து சற்றைக்குப் பின் *'ம்'* சொன்னார் ரமணர். அடுத்த சில நிமிஷங்களுக்குள் இரண்டாவது *'ம்'* வந்து விடக் கூடாதே என்ற பதைப்புடன் பெரிய, பெரிய விள்ளல்களாக எடுத்து அவசர அவசரமாகத் திணித்துக் கொண்டே மகரிஷியின் முகத்தைக் கவனிப...