வாழ்வில் உயர்த்தும் சோதனைகள்.
இறைவன் கொடுக்கும் சோதனைகளையும், கஷ்டங்களையும் சந்திக்காமல் அவனது அருளைப் பெறவே முடியாதா?' என்று ஒரு மாணவன் தன் குருவிடம் கேட்டான்.
குருவோ ஒரே மாதிரியான இரு ஜாடிகளை மாணவர்களின் முன் வைத்தார்.
'. ஒரே மாதிரியாக இருந்தாலும், இந்த இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது.அது என்ன, என்று உங்களுக்குத் தெரிகிறதா?'என்று கேட்டார். ' தெரியவில்லை' என்று கோரசாக கூறிய மாணவர்களின் முன்னே, ஒரு ஜாடியைக் கவிழ்த்தார். அதில் இருந்து தேன் கொட்டியது.
மற்றொரு ஜாடியை கவிழ்த்த போது அதிலிருந்து சாக்கடை நீர் கொட்டியது. ' பார்ப்பதற்கு ஒன்று போல் இருந்த ஜாடிகளை கீழே தள்ளியதும், அவற்றில் என்ன இருந்ததோ அவை வெளிப்பட்டன.
அதுபோலவே இறைவன் நமக்கு கொடுக்கும் சோதனைகளை சந்திக்கும் போது தான் நம் உண்மையான குணம் வெளிப்படுகிறது.அதன் மூலம் நம்மை நாமே தெரிந்து கொள்ள முடியும்.தெரிந்து கொண்டு நம்மைத் திருத்திக் கொள்ள முடியும். இல்லையெனில், நம் தவறுகளை திருத்திக் கொள்வதற்கான வாய்ப்பு நமக்கு இல்லாமலேயே போய்விடும். காரணமில்லாமல் எந்த காரியத்தையும் இறைவன் நடத்தி வைப்பதில்லை', என்றார் குரு.
Comments
Post a Comment