The book of lies... [பொய் புத்தகம்...]

 இன்று எங்கு பார்த்தாலும் போலிகள், ஊழல்கள், மோசடிகள், எதிலும் பொய் மற்றும் நேர்மை இல்லாத தன்மைப் பெருகி விட்டது.. 


அமெரிக்காவின் எழுத்தாளர் மேரிலேன்ட் மாகாணத்து ஆளுநருமான ஹிர்ஷ் கோல்ட்பெர்க் “The book of Lies” என்ற புத்தகம் எழுத, இவர் செய்த ஆய்வு இவரை இதற்குத் தூண்டியது.


இந்தப் புத்தகம் எழுத இவர் சுமார் நான்கு வருடங்கள் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் ஒரு நாளைக்கு சுமார் 200 முறை மனிதர்கள் சாதாரணமாக பொய்களை உதிர்க்கிறார்கள் என்று கண்டு அறிந்தார்.. 


இந்த நிலை நீடித்தால் பொய் என்பது வாழ்வியல் முறை என்றாகி விடும். நேர்மை என்ற ஒரு கோட்பாடு அழிந்து விடும் என்று அவர் கருதினார்.


நேர்மை என்ற கோட்பாடு பாதுகாக்கப்பட வேண்டுமானால், வருடத்தில் ஒரு நாளாவது நேர்மையை நினைவு கூறுவது அவசியம் என்று அவர் கருதினார். 


இதனால் முட்டாள்கள் தினம் அனுசரிக்கப்படும் ஏப்ரல் மாதத்தின் கடைசி நாள் நேர்மை தினமாக அனுசரிக்கப்பட வேண்டும் என விரும்பினார்.


இந்த நாளை அனுசரிக்கப் பல ஆலோசனைகளும் கோல்ட்பெர்க் தருகிறார். 


உலகின் மிக மோசமான ஊழல்கள் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது, நேர்மை பற்றி உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர்கள் என்ன கூறினார்கள் என்று அவரவர் வீட்டில், தெருவில், அலுவலகத்தில் பகிர்ந்து கொள்வது,


இன்று ஒரு நாள் எக்காரணம் கொண்டும் பொய் பேசாமல், நேர்மையாக இருப்பேன் என்று தனக்குத் தானே உறுதிமொழி எடுத்துக் கொள்வது என்று நீண்டு கொண்டே போகிறது அந்தப் பட்டியல்.


அதே நேரம் நேர்மைப் பற்றி உலகப் பெருந்தகை தன்னுடைய திருக்குறளில் அய்யன் வள்ளுவர் என்ன சொல்கிறார் என்றால்.,


''கேடும் பெருக்கமும் இல் அல்ல; நெஞ்சத்துக்

கோடாமை சான்றோர்க்கு அணி''.,


இதன் கருத்து என்னவென்றால்..,.,


பொருட்செல்வத்தைக் காட்டிலும், நேர்மை தான் சான்றோரின் விலை உயர்ந்த அணிகலன் என்பது.


இன்னொரு குறளில்..,.


''வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்

தீமை இலாத சொலல்.''


மற்றவரை வருத்தப்படுதாத எந்தச் சொல்லும் வாய்மையாகக் கருதப்படும்.


*ஆம்.,தோழர்களே..,*


*நாம் சொல்லும் சொல் , நாம் பயணிக்கும் பாதை நேர்மையாக இருந்தால் வெற்றிகள் நம்மைத் தேடி வரும்...*


*வாழ்க்கையில் நேர்மையாக இருக்க முயல்வதும் ஒரு போராட்டம் தான்*


*உண்மையும் நேர்மையும் நம்மைப் பாதுகாக்கும், நேர்மை ஒரு போதும் வீண் போகாது.* 


*நேர்மையை விதையுங்கள்..,*  


*பதவியும் பணமும் உங்களை நாடி தேடி வரும்...*

Comments

Popular posts from this blog

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ

Nothing can compete with The knowledge gained from poor, confidence

EFFECTS OF NEGATIVE THOUGHTS ON YOUR MIND & BODY