தொலைக்காட்சி தொடர்களைப் பார்க்கும் பெண்கள் ஏதோ ஒரு வகையில் மனதளவில் பாதிப்படைகிறார்கள்

அப்ப ஆண்கள் !!!!!!!குழந்தைகள் !!!!!



நேர முக்கியத்துவமும் மேலாண்மையும் (Time Management)

"கடந்துவிட்ட காலம் செல்லாத காசோலை. 
எதிர் வரும் காலம் வாக்குறுதிச் சீட்டு. 
நிகழ்காலம் தற்போது நம் கையில் உள்ள பணம் போன்றது" 
என்கிறது ஓர் ஆங்கிலப் பழமொழி. 

நம்மிடமுள்ள பணத்தை நாம் நல்ல முறையில் பயன்படுத்தினால் அதற்குத் தக்கவாறு பலனை அடைந்து கொள்ளலாம். பணத்தை நாம் இழந்துவிட்டாலும் திரும்பப் பெற்றுக்கொள்ள வாய்புகள் உண்டு. ஆனால் காலத்தை நாம் திரும்பப்பெறுவது சாத்தியமில்லாத கூற்று. எனவே காலத்தை செல்வத்தைச் செலவழிப்பதைவிட மேலானதாக நாம் செலவழிக்க வேண்டும்.

நேரம் என்பது வரையறுக்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது. நாளொன்றுக்கு 24 மணிநேரமும், மணிக்கு 60 நிமிடங்களாகவும் அல்லது நாளொன்றுக்கு 86400 வினாடிகளாகவும் வரையறை செய்யப்பட்டுள்ளது. இது எல்லோருக்கும் பொதுவாகவும், சமமாகவும்தான் உள்ளது. சிலருக்கு நேரம் பற்றாக்குறை. சிலருக்கு நேரம் கழிப்பது சிரமம். இதன் காரணம் காலத்தைச் சரியாக கணிப்பீடு செய்து பயன்படுத்தத் தவறுவதே.


டெலிவிஷன் (சின்னத்திரை) அதிகமானோர் நேரத்தைக் கழிக்கப் பெரும்பாலும் பயன்படுத்துவது தொலைக்காட்சியே ஆகும். ரிமோட் பட்டன்களை அழுத்த அலை அலையாய் அலைவரிசைகள், புற்றீசல் போல் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே செல்கின்றன. நேரத்தைப் பாழாக்கும் விஷயத்தில் விஞ்சி நிற்பது டி.வி என்ற மீடியாதான். சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை இதன் ஆக்கிரமிப்பு வியாப்பித்திருக்கின்றது. சிறந்த நிகழ்சிகளும், நல்ல அலைவரிசைகளும் சில இருக்க, அதிகம் விரும்பிப் பார்க்கப்படும் நிகழ்சிகள் என்னவோ ஆடல், பாடல், கவர்ச்சி, நகைச்சுவை, நட்சத்திரங்களின்(?) பேட்டி, திரைப்படங்கள் போன்றவைகளுக்கு முக்கியத்துவம் தந்து தயாரிக்கப்படும் நிகழ்ச்சிகளே. இவையால் பார்ப்பவர்களுக்கு நன்மை உண்டா என ஆராய்ந்தால் நேரத்தை வீணடித்ததுதான் மிஞ்சுகிறது.

அமெரிக்காவில் கணிசமான குழந்தைகள் சராசரியாக வாரம் ஒன்றிற்கு 25 மணிநேரம் தொலைக்காட்சி பார்ப்பதாக சி.என்.என் ஹெல்த் நியூஸ் குறிப்பிடுகிறது. இது நம் நாட்டிலுள்ள குழந்தைகளுக்கும் தகுமாறு உள்ளது. படிக்கின்ற சிறுவர்கள் விரும்பிப் பார்பது கார்டூன் மற்றும் கல்விக்குத் தொடர்பில்லா நிகழ்ச்சிகளேயாகும். இதனால் குழந்தைகளின் கல்வித்தரம் பரவலாகப் பல பள்ளிகளிலும் குறைந்துள்ளது. இன்றைய குழந்தைகள் அதிகமாக காலவிரயம் செய்வது தொலைக்காட்சிகளிலேயே.
பெண்களை எடுத்துக்கொண்டால் வீட்டுவேலை முடிந்ததா டி.வி பார்க்கலாம் என்ற நிலையும் மாறி, டி.வி சீரியல்கள் ஒளிபரப்பு முடிந்துவிட்டதா, இனி வீட்டுவேலைகள் செய்யலாம் என்ற மனோநிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டார்கள். மேலும் திரைப்படைத்தையோ, சீரியல்களையோ தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்கும் போது இடையில் செய்திகள் வந்தால் டி.விக்கு ஒய்வு தருகிறார்கள்.

தொலைக்காட்சி பார்ப்பவர்களில் நல்ல பயனுள்ள ஒளிபரப்புகளையும், செய்திகளையும் பார்த்துப் பயனடைபவர்கள் மிகச் சிலர் என்றே கூறலாம்.


தொலைக்காட்சிகள் பல ஆண்டுகளுக்கு முன்பு அறிவு வளர்க்கும் சாதனமாக இருந்தது. ஆனால் 1991ம் ஆண்டுக்குப் பிறகு தனியார் தொலைக்காட்சிகளின் ஆக்கிரமிப்பு காரணமாக தொலைக்காட்சிகள் தொல்லைக் காட்சிகளாக மாறி விட்டது. அதிலும் குறிப்பாக மெகா சீரியல் என்று ஆரம்பித்தார்களோ அன்றில் இருந்து பெண்களை கவரத் தொடங்கி இன்று மெகா தொடர்கள் பார்க்காமல் பெண்களால் இருக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. இதற்கு அடிப்படைக்காரணம் ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை நடுத்தர மக்களை குறி வைத்து மெகா சீரியல்கள் எடுக்கப்படுவதைத் சொல்லலாம். நடுத்தர மக்களின் வாழ்க்கையை மையமாக எடுக்கப்படுகின்ற தொடர்கள் தான் இன்று அதிகமாக வெற்றியடைந்து இருக்கின்றன. அதில் பெண்கள் பாதிக்கப்படும் பொழுது நடுத்தர வாழ்க்கை வாழும் பெண்களினை அற்புதமாக கவர்ந்து விடுகிறது. ஆரம்பகாலத்தில் சினிமாவில் கொடிகட்டிப்பறந்த கே.பாலசந்தர் தான் மெகா சீரியல்களுக்கு பிள்ளையார் சூழி போட்டார். அதன் பின் வந்த அனைத்து தொலைக்காட்சிகளுமே மெகா சீரியல் என்பதை அத்தியாவசிய நிகழ்ச்சியாக மாற்றிவிட்டனர். ஆரம்பகாலக் கட்டங்களில் அரசு தொலைக்காட்சியான பொதிகையில் தான் நாடகங்கள் ஒளிபரப்பாகிவந்தன.அதிலும் சிறிய நாடகங்கள் தான் ஒளிபரப்பபட்டன. அப்பொழுது எல்லாம் ஒளிபரப்பான நாடகங்கள் ஒரு வீட்டிற்குள்ளேயே எடுக்கப்பட்டு ஓரளவுக்கு பார்ப்பதற்கு நன்றாக இருக்கும் வகையில் எடுக்கப்பட்டன. அதன் பின் தமிழக மக்களின் வீடுகளில் கேபிள் மூலம் எட்டிப்பார்த்த தனியார் தொலைக்காட்சிகள் தான் முதன் முதலில் மெகா சீரியல்களை தொடங்கி வைத்தன. அன்று ஆரம்பித்த பார்வையின் ஆக்கிரமிப்புகள் இன்று ஒரு நோயாக மாறிவிட்டது. தனது குடும்பத்தினரின், தனது உறவினரின் நலன்களை பற்றி பெண்கள் இன்று கவலைப் படுகிறார்களோ இல்லையோ நாடகங்களில் வரும் கதாபாத்திரங்களுக்கு அதிகமாக கவலைப்படுகின்றனர். பெண்கள் பாதிக்கப்படுவதாக காட்டி நாடகம் தொடரும் என்று போடப்படும் பொழுது பார்க்கும் பெண்கள் அழுகின்றனர் என்பது ஓர் யாதார்த்த உண்மை. பணத்தை வாங்கிக் கொண்டு நாடகங்களில் நடித்து பெண்கள் தங்களின் கண்களில் கிளிசரின் போட்டுக் கொண்டு அழுகின்றனர். ஆனால் அதனை பார்க்கும் நமது குடும்பத்துப் பெண்கள் கேபிள்காரர்களுக்கு  பணம் கொடுத்து, கரண்ட் பில் கட்டி தங்கள் பணத்தை இழப்பதோடு நாடகங்களை பார்த்து உண்மையிலேயே அழுகின்றனர். அதை விடக் கொடுமை நாடகங்கள் பார்க்கும் பொழுது குடிக்க தண்ணீர் கேட்டால் கூட அது தவறாகி விடுகிறது. 

குடும்ப அமைப்பிற்கு எதிரான அத்தனை அம்சங்களையும் கொண்ட ஓர் சமூக சீர்கேடுகள் தான் தொலைக்காட்சி நாடகங்கள் என்றால் அதில் தவறே இல்லை


திரைப்படங்கள் ஆக்ஷன் என்ற பெயரில் வன்முறையைத் தூண்டியும், நகைச்சுவை என்ற பெயரில் காமத்தை அள்ளித்தூவியும், கவர்ச்சி என்ற பெயரில் கலாச்சாரத்தை அழித்தும், பாடல் என்ற பெயரில் இரட்டை அர்த்தங்களைப் புனைந்தும் மனிதனை சீரழிவின் பக்கம் கொண்டு செல்கிறன. இதைப் பார்ப்பதற்குத்தான் எத்தனை 3 மணிநேரங்களை நாம் எடுத்துக் கொள்கிறோம். இவர்கள் பின் கொடிதூக்கி நடக்கிறோம். திரைப்படம் தொடர்பான செய்திகளை விருப்பிப் படிக்கிறோம். இதில் வீணடிக்கப்படும் நேரத்தை ஒரு கணம் சிந்திப்பீர். திரைப்படங்களை முற்றிலும் தவிர்ப்பீர்.

கம்ப்யூட்டர் மற்றும் இண்டர்நெட் இந்நூற்றாண்டில் மனித அறிவின் முதிர்ச்சி என அடையாளம் காட்டவேண்டுமானால் கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் துறையைச் சொல்லாம். உலகத்தையே சுற்றி வளைத்து உங்கள் விரல் நுனியில் தந்துள்ளது இண்டர்நெட். கல்வி, வியாபாரம், வர்த்தகம், விளம்பரம், தகவல் தொடர்பு, வேலைவாய்ப்பு, மருத்துவம், இராணுவம் மற்றும் ஆராய்சி என பல்வேறு உபயோகமான துறைகளில் இது பயன்பட்டாலும் பலர் இதை சாட்டிங்கும், டேட்டிங்கும் செய்யப் பயன்படுத்துகிறார்கள். காதல் என்ற போர்வையில் எதிர்முனையிலிருப்பவரிடம் இன்ப அரட்டை அடித்து நேரத்தை வீணடிக்கிறார்கள். நல்ல சாப்ட்வேர்கள் பல இருக்க சி.டி கேம்களையும், சாலிடரையும் (Solitaire) சலிப்பின்றி விளையாடி நேரத்தைக் கழிக்கின்றனர். கம்ப்யூட்டர் மற்றும் இண்டெர்நெட் எந்த அளவிற்கு மக்களுக்கு உபயோகமாக இருக்கின்றதோ அதைவிட அதிகமான அளவிற்கு நேரத்தை வீணடிக்கவும் உபயோகிக்கப்படுகிறது. இனி இவை இரண்டில் எதை நீங்கள் தேர்வு செய்யப்போகிறீர்?
 

Comments

Popular posts from this blog

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ

உயர்வு

சூழ்நிலை