*வாழ்வை சிதைக்கும் அந்த விஷயங்கள்!*

 "வாழ்க்கை ஒரு அழகான பூமாலை. அதனைக் கீழ்கண்ட சில குரங்குகளிடம் கொடுத்து விடாதீர்கள்."

1. கடன்: எந்தச் சூழ் நிலையிலும் கடன் வாங்காதீர்கள். அது நிச்சயம் உங்களை மூழ்கடிக்கக் காத்திருக்கும்.

2. Online சூதாட்டம்: எந்த சூழ்நிலையிலும் உங்கள் கைப்பேசியில் online சூதாட்டத்தில் சிக்கி விடாதீர்கள். அது பண இழப்புக்களைத் தந்து விடும். காலப்போக்கில் உங்களை அடிமையாக்கி விடும்.

3. மது, சிகரெட்: மதுவும், சிகரெட்டும் நம் வாழ்வை அழிக்கத்தான் வந்து உள்ளது. அழகாக்க அல்ல, அதனால் அதனைத் தொடாதீர்கள்.

*உங்கள் வாழ்வு வளம் ஆக, நலன்கள் பல பெற..*

1. நானே பெரியவன் நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்..

2. அர்த்தமில்லாமலும் பின் விளைவு அறியாமலும் பேசிக் கொண்டிருப்பதை விடுங்கள்..

3. எந்த விஷயத்தையும் பிரச்சனையையும் நாசுக்காகக் கையாளுங்கள், விட்டுக்கொடுங்கள்..

4. சில நேரங்களில் சில சங்கடங்களை சகித்துத் தான் ஆகவேண்டும் என்று உணருங்கள்..

5. நீங்கள் சொன்னதே சரி செய்ததே சரி என்று வாதாடாதீர்கள். குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள்..

6. 'உண்மை எது? பொய் எது?' என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும் அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விடுங்கள்..

7. மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வப்படாதீர்கள்..

8. அளவுக்கதிகமாய், தேவைக்கதிகமாய் ஆசைப்படாதீர்கள்..

9. எல்லோரிடத்திலும் எல்லா விஷயங்களையும், அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ, இல்லையோ சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்..

10. கேள்விப்படுகிற எல்லா விஷயங்களையும் நம்பிவிடாதீர்கள்..

11. அற்ப விஷயங்களைப் பெரிது படுத்தாதீர்கள்..

12. உங்கள் கருத்துக்களில் உடும்புப் பிடியாய் இல்லாமல், கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள்..

13. மற்றவர்களுக்குரிய மரியாதையை காட்டவும், இனிய இதமான சொற்களைப் பயன் படுத்தவும் தவறாதீர்கள்..

14. புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் கூட நேரமில்லாதது போல் நடந்துக் கொள்ளாதீர்கள்..

15. பேச்சிலும் நடத்தையிலும் பண்பில்லாத வார்த்தைகளையும் தேவையில்லாத மிடுக்கையும் காட்டுவதைத் தவிர்த்து அடக்கத்தையும் பண்பையும் காட்டுங்கள்..

16. அவ்வப்போது நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்..

17. பிரச்சனைகள் ஏற்படும் போது அடுத்தவர் முதலில் இறங்கி வரவேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சைத் துவக்க முன் வாருங்கள்..

18. செலவைக் குறையுங்கள். முடிந்தால், நிறைய சேமியுங்கள்.

19. சரளமாக ஆங்கிலம் தெரிந்தால் தான் முன்னுக்கு வர முடியும் என்று இல்லை.. பள்ளிக் கூடம் பக்கம் போகாதவர்கள் கூட, ஞானத்தால், உழைப்பால் வெற்றி பெற்று உள்ளனர். அதனால், உங்கள் கைகளில் வாய்த்ததை சரியாகச் செய்யுங்கள்.

Comments

Popular posts from this blog

சூழ்நிலை

எந்த சூழ்நிலையிலும் இறைவன் கைவிட மாட்டார்..!

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ