எண்ணத்தின் வலிமையும் சிறப்பும்,,,,

 ஒரு முனிவர் தினந்தோறும் கடற்கரை அருகே அமர்ந்து

தியானத்தில் மூழ்கி இருப்பார்..


தியானத்தின் போது அவரின் உடல் மேல் பறவைகள் வந்த

அமர்ந்து செல்லும்..


இதை சில நாட்களாக கவனித்த ஒரு சிறுவன், முனிவரே,

நாளை உங்கள் மீது வந்து அமரும் பறவையில் ஒன்றை எனக்கு

பிடித்து தருவீர்களா? நான் பறவை வளர்க்க ஆசைப்படுகிறேன்”

என்று கேட்டான்..


முனிவரும் சம்மதித்து, ”நாளை பிடித்து தருகிறேன்” என்றார்..


அடுத்த நாள் முனிவர் பறவையைப் பிடிப்பதற்காக, தியானத்தில்

ஆழ்ந்து இருப்பதைப் போன்று போலியாக அமர்ந்திருந்தார்.


வழக்கம் போல பறவைகளும் வந்தன. ஆனால், என்ன ஆச்சர்யம்,

இன்று எந்த பறவையும் அவரின் மேல் அமரவில்லை.


எல்லா பறவைகளும் பத்து அடி தூரத்திலையே பறந்துவிட்டு

சென்று விட்டன..


நம்முடைய எண்ண அலைகளுக்கு அந்த அளவில் சக்தி உண்டு.

நமது எண்ணங்களின் வழியில்தான் நம் வாழ்க்கை பயணிக்கிறது..

நமது எண்ணங்களின் தாக்கம்வாழ்விலும்எதிரொலிக்கும்.


எண்ணம் எழும் இடமோ சிறு புள்ளி

விரிந்து முடியும் இடமோ அகண்டாகாரம்,,,

Comments

Popular posts from this blog

சூழ்நிலை

எந்த சூழ்நிலையிலும் இறைவன் கைவிட மாட்டார்..!

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ