திருமண வாழ்க்கையைப் பற்றி யாரும் பேசாத ஒரு அம்சம் என்ன?

 சட்டியும், கலமும்

தட்டியும் முட்டியும் தான் இருக்கும்.

சட்டி, கலம் இரண்டும் இருப்பது ஒரே சமையலறையில். இரண்டும் முட்டிக்கொள்ளாமல் அங்கே புழங்க முடியாது. ஆனால் உடைந்துவிடும்படி முட்டிக்கொண்டால் இரண்டுமே காலி.

வெவ்வேறு சூழ்நிலையில் வளர்ந்த இருவர், ஒன்றாக வசிக்கும் பொழுது பழக்கவழக்கங்களில் முரண்பாடுகள் இருக்கும்தான்.

பார்த்து பழகிய நான்கு தினங்களில்
நடை, உடை, பாவனை மாற்றிவிட்டாள்

சினிமாவில் பாடினால் ரசிக்கலாம். நிஜத்தில் நான்கு வருடங்கள் கூட போதாது.

திருமணத்திற்கு முன் ஹாஸ்டலில் நான்கு பேரோடு ஒரே அறையில் தங்கி இருந்தேனே? ஏன் இவருடன் மட்டும் நம்மால் ஒத்துப்போக முடிவதில்லை என்ற எண்ணம் பலருக்கும் வரலாம்.

காரணம் ஒன்றுதான், நண்பர்களை அப்படியே ஏற்றுக் கொள்கிறோம். எனக்காக உன் பழக்கவழக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கட்டாயப் படுத்துவதில்லை.

பல வருடங்களாக காதலித்து திருமணம் செய்தவர்கள் கூட முதல் ஓரிரு வருடங்களிலேயே மனக்கசப்பு கொள்வதும் 'தனக்கேற்றவராக மாறவேண்டும்' என்ற எதிர்பார்பினால் தான்.

1950 களில் 19, 13 வயதில் திருமணம் செய்தவர்கள் வேண்டுமானால் தன்னுடைய குணங்களை ஒருவருக்கு ஏற்றாற்போல் மற்றொருவர் மாற்றிக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது.

தற்போது 25+ திருமணம் செய்து கொள்ளும் பொழுது நன்றாக ஊறிப்போன பழக்கவழக்கங்களை எப்படி மாற்றிக் கொள்ள முடியும்?

வாழ்க்கைத் துணையிடம் முதல் எதிர்பார்ப்பே, எனக்காக நீ மாறனும் என்று இருவரும் எதிர்பார்ப்பதே.


கணவன் மனைவி உறவுபோல எளிமையான உறவு வேறு இல்லை.

அதைப்போல சிக்கலாக ஆக்கிக்கொள்ளப்படுவதும் இல்லை. 

Comments

Popular posts from this blog

சூழ்நிலை

எந்த சூழ்நிலையிலும் இறைவன் கைவிட மாட்டார்..!

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ