அதிகம் வெறுக்கும் குணங்கள் என்னென்ன?
1. வித்தியாசம் என்ற பெயரில் கோமாளித்தனம் செய்து அதை தற்பெருமையாக நினைத்துக் கொள்வது.
2. இங்கிதம் தெரியாமல் மனதில் பட்டதை கூறி மற்றவர்களை சங்கடத்திற்கு உள்ளாக்குவது.
3. அடுத்தவர் காரியத்தில் மூக்கை நுழைப்பது.
4. அனைத்தும் தெரிந்துகொண்டே தெரியாததுபோல் அப்பாவித் தனமாக கேள்வி கேட்பது, நடிப்பது.
5. பொறுமையாக விட்டுக்கொடுத்து சென்றால் கோழைத்தனம் என்றும், அடிதடி சண்டை செய்தால் தான் வீரம் என்றும் நினைத்துக் கொள்வது.
6. ஒருவர் மீது உள்ள கோபத்தை அவரிடம் காட்டாமல் தனக்கு கீழ் உள்ள ஆட்களிடம் காட்டுவது.
7. ஒருவர் செய்த தவறை சமயம் கிடைக்கும்போதெல்லாம் ஓயாமல் குத்திக் காட்டுவது.
மேற்கூறிய அனைத்து குணங்களும் அதிகம் வெறுக்கும் குணங்கள்…
Comments
Post a Comment