வாழ வேண்டுமே என்று நினைக்காதீர்கள்...

 இப்படியே கடந்து போய்விடுமோ என்பது உணர்வு. இதையும் கடந்து வந்தோமே என நினையுங்கள் அதுவே சரித்திரம். 


நாளை எல்லாம் நல்லபடியாக மாறிவிடும் என்று நினைப்பது "நம்பிக்கை" மாறவில்லை என்றாலும் சமாளித்து விடலாம் என்பது "தன்னம்பிக்கை". 


நீங்கள் தன்னம்பிக்கையை இழக்காமல் செயல்பட்டால் வாழ்வில் எதையும் சாதிக்கும் வல்லமை வந்து விடும். 


வாழ வேண்டுமே என்று நினைக்காதீர்கள். வாழ்ந்தே ஆக வேண்டும் என்று முடிவு எடுங்கள். துன்பமும் தூசியாய் தெரியும்.


நேரமும், வாய்ப்பும் எல்லாருக்கும் எப்பொழுதும் இருந்து கொண்டேதான் இருக்கின்றன. 


முயற்சி எடுப்பவர்கள் மட்டுமே தாங்கள் நினைத்ததை அடைகின்றனர்.


தடைகளையே உற்றுப் பார்க்காதீர்கள், அதனால் உங்களால் எதையும் செய்யமுடியாமல் போகலாம்.


குறிக்கோளை உற்றுப் பாருங்கள், தடைகள் மறைந்துவிடும் உத்வேகம் தானாக வரும்.


வாழ்க்கை குத்துச்சண்டை போன்றது.விழுந்த போது தோல்வி அறிவிக்கப்படுவதில்லை. எழாத போதுதான் தோல்வி அறிவிக்கப்படுகிறது.

Comments

Popular posts from this blog

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ

உயர்வு

சூழ்நிலை