அதிர்ச்சியூட்டும் வாழ்க்கை தத்துவம்!!!
ஒருவர் எல்லோருக்கும் நல்லவனாக இருக்க முடியாது. இதில் அதிர்ச்சி என்ன?
“It's impossible to satisfy everyone, and I suggest we all stop trying.”
--Jennifer Aniston
நாம் ஒதுங்கி போனாலும் பகை என்ற ஒன்று இருக்கவே இருக்கும்.….
நமக்கு ஒத்து வராது என்று மனதில் தோன்றும் ஒருவரோடு எவ்வளவு தான் நல்ல முறையில் பழகினாலும் அவர்கள் நமக்கு நல்ல நண்பர்கள் ஆக மாட்டார்கள்.
அவர் குணம் அப்படி; நமது குணம் இப்படி. இரண்டும் சேர்ந்து ஒத்து போகாது. ஆகவே எல்லோரிடமும் நல்ல பெயர் வாங்க முயற்சிகள் மேற்கொள்வது சரியல்ல. அது பலன் தராது.
குறிப்பாக நமது உள்மனம் நம்மிடம் சொல்லும் விஷயத்திற்கு மதிப்பு கொடுத்து கேட்டு கொள்ள வேண்டும்.
சில எழுத்தாளர் இதை " பட்சி சொல்லியது" என்று எழுதுவது உண்டு.
நம்மிடம் பழகக்கூடியவர்களில் சில சிறந்த மனிதர்கள் நிச்சயமாக உண்டு. அந்த நல்ல இதயங்கள், பொருளாதார நிலை மற்றும் சமுதாய மதிப்பீடு போன்றவற்றில் நாம் தாழ்ந்து போனாலும் அதை பொருட்படுத்தாமல் எப்போதும் போல நம்மிடம் இனிமையாகவே பழகி வருவார்கள்.
"கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே" என்பது அவர்களின் கருத்து.
"சங்கு சுட்டாலும் வெண்மை தரும்" என்பதை புரிந்து கொண்டவர்கள்.
"பணம் என்றால் பிணமும் வாயை திறக்கும் " என்பதை மிகவும் அத்தியாவசியமான உண்மையாக கருதும் இந்த கலி காலத்தில்,
கிரகித்துக் கொள்ள மிகவும் அதிர்ச்சி தரும் ஒரு வாழ்க்கை தத்துவம் தான் இது.
இது, நமது தமிழ் மூதாட்டி ஔவை பிராட்டியார் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொன்னது:
Comments
Post a Comment