திருக்குறள் :
பால்: பொருட்பால்
இயல்: நட்பியல்
அதிகாரம்: நட்பு
குறள் எண்: 789.
குறள்:
நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனில் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.
பொருள்: நட்புக்குச் சிறந்த பெருமை எதுவென்றால் மனம் கோணாமல், முடிந்த போதெல்லாம் உதவி செய்து தாங்கும் நிலையாகும்.
பழமொழி :
It is easier to destroy than to create
அழிப்பது சுலபம், ஆக்குவது கடினம்
இரண்டொழுக்க பண்புகள் :
1. ஓதாத கல்வி கெடும், ஒழுக்கமில்லா வாழ்வு கெடும். எனவே ஆசிரியர் கொடுக்கும் கல்வி பயின்று ஆசிரியரும் பெற்றோரும் கற்றுக் கொடுக்கும் ஒழுக்க வாழ்வினை வாழ்வேன்.
2. பணத்தால் அமைதி கெடும், கடன் பட்டால் வாழ்வு கெடும் எனவே பண ஆசை இல்லாமல் சரியான முறையில் செலவு செய்து வாழ்வேன்.
பொன்மொழி :
வெற்றி என்பது ஒவ்வொரு முறையும் முதல் இடத்தைப் பெறுவது என்று பொருள் அன்று. வெற்றி பெற்றாய் என்றால் உன் செயல்பாடு சென்ற முறையை விட இம்முறை சிறப்பாக அமைந்துள்ளது என்று பொருள்.
லியோ டால்ஸ்டாய்
பொது அறிவு :
1. தென் ஆப்பிரிக்காவின் முதல் அதிபர் யார்?
நெல்சன் மண்டேலா.
2. இந்தியாவின் பூட்டு நகரம் என்றழைக்கப்படுவது எது?
அலிகார்.
English words & meanings :
Tough cookie - a strong person to deal difficult situations, கஷ்டமான சூழலிலையும் சமாளிப்பவர்.
A white lie - a harmless lie told not to upset someone. மற்றவர்களை காயப்படுத்தாத பொய்
ஆரோக்ய வாழ்வு :
அடிக்கடி சுண்டைக்காய் வற்றலை சமைத்து சாப்பிட்டு வர வறட்சி இருமல் வயிற்று பூச்சி அனைத்தும் குணமாகும். 2. நான்கு வில்வ இலையுடன் நான்கு துளசி இலை கசக்கி அத்துடன் நான்கு மிளகு சாப்பிட்டால் ஆஸ்த்மா கட்டுபடும்ப் கணினி யுகம் :
Ctrl + shift + J - Distribute paragraph.
Ctrl + shift + L - Activate Bullets
டிசம்பர் 07
கொடி நாள் (இந்தியா)
கொடி நாள் என்பது இந்தியாவின் முப்படை வீரர்களின் அரும்பணிகளையும், தியாகத்தையும் போற்றும் நாளாகும். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தின் ஏழாம் நாளை படை வீரர் கொடி நாளாக இந்திய அரசும் இந்திய மாநில அரசுகளும் கடைப்பிடிக்கின்றன. இக்கொடி நாள் 1949ஆம் ஆண்டு டிசம்பர் ஏழாம் நாள் முதல் இந்தியா முழுமைக்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.
நீதிக்கதை
கோபத்தை மறந்த ராமு
கதை :
ஒரு ஊரில் ராமு என்பவன் இருந்தான். அவன் எப்போதும் கோபப்படும் சுபாவத்தை கொண்டவன். ஒரு முறை அவனது நண்பன் அவனிடம் ஆணிகள் நிரம்பிய பையை கொடுத்தான். நீ எப்போதெல்லாம் கோபப்படுகிறாயோ அப்போதெல்லாம் ஒரு ஆணியை இந்த சுவற்றில் அடிக்கவும் என்றான்.
ராமுவும் அப்படியே செய்து வந்தான். முதல் நாள் அவன் 35 ஆணிகளை அடித்தான். மறு நாள் 30 என்று இப்படியாக குறைந்து கொண்டு வந்தது. சில நாட்கள் கழித்து அவன் கோபப்படுவதை நிறுத்திவிட்டான். அதனால் அவன் ஆணிகளை அடிக்கவில்லை. அதை அவனது நண்பன் பார்த்து பெருமைப் பட்டான். அவனை முழுவதுமாக திருத்த ஆசைப்பட்ட அவன் அவனிடம் அடித்த ஆணிகளை பிடுங்க சொன்னான்.
ராமுவும் அப்படியே செய்தான். அதை பார்த்த அவன் நண்பன் அவனிடம் சொன்னான். நண்பனே நீ நான் சொன்னபடியே எல்லா வேலைகளையும் செய்தாய். இப்போது நீ அடித்த ஆணிகள் பிடுங்கப்பட்டு விட்டன.
ஆனால் ஆணி அடித்த இடங்களில் உள்ள ஓட்டைகளை பார். இந்த சுவர் முன்னால் இருந்த மாதிரி இல்லை. எல்லா இடங்களிலும் ஓட்டைகள் உள்ளன.
அது போலத்தான் நீ கோபத்தில் சொல்லும் வார்த்தைகளும், செயல்களும் ஒரு வடுவை உண்டாக்கி விடும். நீ என்னதான் உன் செயல்களுக்கு மன்னிப்பு கேட்டாலும் அந்த வடு மாறாது, மறையாது. நீ வார்த்தைகளால் உண்டாக்கும் வடுவிற்கும், செயல்களால் உண்டாக்கும் வடுவிற்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை என்றான் ராமுவின் நண்பன்.
நீதி :
எக்காரணத்தினாலும் தீய சொற்களை பயன்படுத்தக் கூடாது.
இன்றைய செய்திகள்
07.12.21
★2021-ம் ஆண்டுக்கான முதலமைச்சர் கணினித் தமிழ் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
★பூசிமலைக்குப்பத்தில் நாயக்கர் காலத்தை சேர்ந்த 2 நடுகற்கள் கண்டெடுப்பு: கி.பி. 15-ம் நூற்றாண்டை சேர்ந்தவை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
★முத்தடுப்பு மருந்து (டிபிடி) விநியோகம் 2023-ல் தொடங்கும் என குன்னூர் பாஸ்டியர் ஆய்வக இயக்குநர் தகவல்.
★ட்ரோன்களை அழிக்கும் தொழில்நுட்பம் இந்தியாவில் தயாராகி வருவதாகவும் அவை விரைவில் ராணுவத்தில் சேர்க்கப்படும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
★இனி வரும் பெருந்தொற்றுகள் கரோனாவைவிட மிகவும் ஆபத்தானதாக இருக்கும்: தடுப்பூசி தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை.
★ஒமைக்ரான் டெல்டா வைரஸைவிட மோசமானது அல்ல; அமெரிக்க அதிபரின் மருத்துவ ஆலோசகர் நம்பிக்கை.
★இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து : ஜாம்ஷெட்பூர்-ஏடிகே மோகன் பகான் அணிகள் மோதல்.
★ஆசிய கோப்பை பெண்கள் ஹாக்கி போட்டியில் தாய்லாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.
Today's Headlines
★ The Government of Tamil Nadu has announced that applications are invited for the Chief Minister's Computer Tamil Award for the year 2021.
🌸 Discovery of 2 monumental stones over Victory belonging to the Nayakar period at Poosimalaikkuppam: Researchers say that they belong to the AD 15th century.
🌸 Coonoor Pasteur Laboratory Director informed that the distribution of vaccine (DTP) will start in 2023.
🌸 The Union Home Minister has said that the technology for destroying the drones is being prepared in India and they will be added to the army soon.
🌸The oncoming epidemics will be more dangerous than the corona: warning by vaccine producers.
🌸 Omicron is not worse than delta virus; American President's Medical Adviser hoped.
🌸 Indian Super League Football: Jamshedpur-ADK Mohan Bagan clash.
🌸 India defeated Thailand in the Asian Cup Women's Hockey Tournament.
Comments
Post a Comment