இக்கலியுலக வாழ்வில் புத்திசாலித்தனமாக வாழ்வது எப்படி?

 சற்று புத்திசாலித்தனமாக இருந்தால்தான் இந்த காலத்தில் நம்முடைய வாழ்க்கையை நளினமாக கொண்டு செல்ல முடியும் அதற்கான எனக்கு தெரிந்த சில வழிமுறைகள்..


இந்த வாழ்க்கை ஒரு மாயை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். இறைவனால் படைக்கப்பட்ட வாழ்க்கை என்னும் நாடகத்தில் ஒரு கதாபாத்திரம் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.


எங்கும் நேர்மை எதிலும் நேர்மை என்று இருக்கக்கூடிய உலகம் கிடையாது. குடும்பத்துக்குள் சொந்த பந்தத்திற்குள் நாம் வேலை செய்யும் அலுவலகத்தில் நம்மை சுற்றி சார்ந்து இருக்கக்கடிய சூழ்நிலையில் என பல இன்னல்கள்சந்திக்க வேண்டிய நிலைமை கலியுகத்தில் மிக அதிகமாகவே காண்கின்றோம்.


ஒரு குழந்தை பசியால் அழுகிறது என்றால் பால் வாங்க பணம் கொடுத்து பசியை ஆற்ற சொல்வது அக்காலம்.. நீங்களே பால் வாங்கிக் கொடுத்து புசியாற்ற வேண்டும் என்பது இக்காலம்.


மிக நேர்த்தியாய் செல்லக்கூடிய புத்திசாலித்தனம், எதிர்கொள்ளக்கடிய தைரியம் , நாளை என்ன நடக்கும் என்பதை முன்கூட்டியே தெரிந்து கொள்ளக்கூடிய அறிவுத்திறன் , அனைத்தும் இருந்தால்தான் இந்த கலியுகத்தில் நாம் நிம்மதியாக வாழ்வதற்கான சாத்தியம் உண்டு.


பாசம் பந்தம் அனைத்திற்கும் ஒரு எல்லை உண்டு என்பதை உட்கொள்ளுங்கள்.


பெற்ற குழந்தை தமக்கு பின்னால் சோறு போடுவான் என்று நினைத்தது அக்காலம் சொந்தப் பிள்ளையே எனினும் நட்பு ரிதியோடு பழக வேண்டும் என்பது இக்காலம்.


சொந்த பந்தம், பெற்ற குழந்தை தான் எனினும் அவர்களுடைய நல்வாழ்க்கைக்கு முடிந்த அளவு உதவி செய்யுங்கள் . அதற்கு முன்பாக உங்களுக்கு என்று சேமித்து வைப்பது என்பது உங்களுடைய கௌரவம் மற்றும் உங்களுடைய நலன் இரண்டிற்கும் நன்மை தரும்.


குழந்தைகளை பணத்தால் வசியம் செய்ய நினைக்காதீர் . நல்லறிவு புகட்டி அவர்களுடைய சொந்தக்காலில் நிற்பதற்கான வழிமுறைகளை ஏற்படுத்தி கல்வி எனும் அறிவு புகட்டி திடமாக அவர்களை தயார்படுத்துங்கள்.


பிறரை எதிர்பார்க்காது வாழ்வதற்கு கற்றுக்கொள்ளுங்கள் . உங்களுடைய உழைப்பு ஒன்று மூலதனமாக வைத்து முன்னேற்றம் கண்டு அதில் வாழ்ந்து மகிழ்வு காணங்கள். எதிர்காலத்திற்கு தேவையான பணத்தை இளம்காலத்திலேயே சேர்த்துவைத்து முதுமையில் ஓய்வெடுங்கள்.


இந்த நடைமுறையை வாழ்க்கையில் நீங்கள் கடைபிடித்தால் இந்த கலியுக காலத்திற்கு ஒரு அமைப்பை உங்களால் ஏற்படுத்திக்கொள்ள முடியும் .


புத்திசாலித்தனமாக வாழ்வதற்கான வழி முறைதனை கடைப்பிடித்து வாழ்வில் மேம்பட்டு வளர்ச்சி கண்டு சிறந்த பயன் அடைக.

Comments

Popular posts from this blog

சூழ்நிலை

எந்த சூழ்நிலையிலும் இறைவன் கைவிட மாட்டார்..!

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ