Posts

Showing posts from December, 2021

அதிர்ச்சியூட்டும் வாழ்க்கை தத்துவம்!!!

 ஒருவர் எல்லோருக்கும் நல்லவனாக இருக்க முடியாது. இதில் அதிர்ச்சி என்ன? “It's impossible to satisfy everyone, and I suggest we all stop trying.”                                                                                                --Jennifer Aniston நாம் ஒதுங்கி போனாலும் பகை என்ற ஒன்று இருக்கவே இருக்கும்.…. நமக்கு ஒத்து வராது என்று மனதில் தோன்றும் ஒருவரோடு எவ்வளவு தான் நல்ல முறையில் பழகினாலும் அவர்கள் நமக்கு நல்ல நண்பர்கள் ஆக மாட்டார்கள். அவர் குணம் அப்படி; நமது குணம் இப்படி. இரண்டும் சேர்ந்து ஒத்து போகாது. ஆகவே எல்லோரிடமும் நல்ல பெயர் வாங்க முயற்சிகள் மேற்கொள்வது சரியல்ல. அது பலன் தராது. குறிப்பாக நமது உள்மனம் நம்மிடம் சொல்லும் விஷயத்திற்கு மதிப்பு கொடுத்து கேட்டு கொள்ள வேண்டும். சில எழுத்தாளர்...

The most admired Zen philosophy. மிகவும் ரசித்த ஜென் தத்துவம்.

 கட்டுப்படுத்தப்படாத உங்கள் எண்ணங்கள் உங்களுக்கு இழைக்கக்கூடிய தீங்கைவிட அதிகமாக உங்களுடைய மிக மோசமான எதிரியால் கூட உங்களுக்குத் தீங்கிழைக்க முடியாது. ஆனால், உங்கள் எண்ணங்களை எப்படிக் கட்டுப்படுத்துவது என்பதை நீங்கள் கற்றுக் கொண்டால், அதைவிட அதிகமாக யாராலும் உங்களுக்கு உதவ முடியாது. Your uncontrolled thoughts can do more harm than your worst enemy.  But, if you learn how to control your thoughts, no one can help you more than that.

வாழ வேண்டுமே என்று நினைக்காதீர்கள்...

 இப்படியே கடந்து போய்விடுமோ என்பது உணர்வு. இதையும் கடந்து வந்தோமே என நினையுங்கள் அதுவே சரித்திரம்.  நாளை எல்லாம் நல்லபடியாக மாறிவிடும் என்று நினைப்பது "நம்பிக்கை" மாறவில்லை என்றாலும் சமாளித்து விடலாம் என்பது "தன்னம்பிக்கை".  நீங்கள் தன்னம்பிக்கையை இழக்காமல் செயல்பட்டால் வாழ்வில் எதையும் சாதிக்கும் வல்லமை வந்து விடும்.  வாழ வேண்டுமே என்று நினைக்காதீர்கள். வாழ்ந்தே ஆக வேண்டும் என்று முடிவு எடுங்கள். துன்பமும் தூசியாய் தெரியும். நேரமும், வாய்ப்பும் எல்லாருக்கும் எப்பொழுதும் இருந்து கொண்டேதான் இருக்கின்றன.  முயற்சி எடுப்பவர்கள் மட்டுமே தாங்கள் நினைத்ததை அடைகின்றனர். தடைகளையே உற்றுப் பார்க்காதீர்கள், அதனால் உங்களால் எதையும் செய்யமுடியாமல் போகலாம். குறிக்கோளை உற்றுப் பாருங்கள், தடைகள் மறைந்துவிடும் உத்வேகம் தானாக வரும். வாழ்க்கை குத்துச்சண்டை போன்றது.விழுந்த போது தோல்வி அறிவிக்கப்படுவதில்லை. எழாத போதுதான் தோல்வி அறிவிக்கப்படுகிறது.

இக்கலியுலக வாழ்வில் புத்திசாலித்தனமாக வாழ்வது எப்படி?

 சற்று புத்திசாலித்தனமாக இருந்தால்தான் இந்த காலத்தில் நம்முடைய வாழ்க்கையை நளினமாக கொண்டு செல்ல முடியும் அதற்கான எனக்கு தெரிந்த சில வழிமுறைகள்.. இந்த வாழ்க்கை ஒரு மாயை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். இறைவனால் படைக்கப்பட்ட வாழ்க்கை என்னும் நாடகத்தில் ஒரு கதாபாத்திரம் என்பதை புரிந்துகொள்ளுங்கள். எங்கும் நேர்மை எதிலும் நேர்மை என்று இருக்கக்கூடிய உலகம் கிடையாது. குடும்பத்துக்குள் சொந்த பந்தத்திற்குள் நாம் வேலை செய்யும் அலுவலகத்தில் நம்மை சுற்றி சார்ந்து இருக்கக்கடிய சூழ்நிலையில் என பல இன்னல்கள்சந்திக்க வேண்டிய நிலைமை கலியுகத்தில் மிக அதிகமாகவே காண்கின்றோம். ஒரு குழந்தை பசியால் அழுகிறது என்றால் பால் வாங்க பணம் கொடுத்து பசியை ஆற்ற சொல்வது அக்காலம்.. நீங்களே பால் வாங்கிக் கொடுத்து புசியாற்ற வேண்டும் என்பது இக்காலம். மிக நேர்த்தியாய் செல்லக்கூடிய புத்திசாலித்தனம், எதிர்கொள்ளக்கடிய தைரியம் , நாளை என்ன நடக்கும் என்பதை முன்கூட்டியே தெரிந்து கொள்ளக்கூடிய அறிவுத்திறன் , அனைத்தும் இருந்தால்தான் இந்த கலியுகத்தில் நாம் நிம்மதியாக வாழ்வதற்கான சாத்தியம் உண்டு. பாசம் பந்தம் அனைத்திற்கும் ஒரு எல்லை உண்டு ...

Nine Personal Finance Rules we all must know

 Nine Personal Finance Rules we all must know 1) Rule of 72 (Double Your Money) 2) Rule of 70 (Inflation) 3) 4% Withdrawal Rule 4) 100 Minus Age Rule 5) 10, 5, 3 Rule 6) 50-30-20 Rule 7) 3X Emergency Rule 8) 40℅ EMI Rule 9) Life Insurance Rule 1) Rule of 72 No. of yrs required to double your money at a given rate, U just divide 72 by interest rate Eg, if you want to know how long it will take to double your money at 8% interest, divide 72 by 8 and get 9 years. At 6% rate, it will take 12 years At 9% rate, it will take 8 years 2) Rule of 70 Divide 70 by current inflation rate to know how fast the value of your investment will get reduced to half its present value.  Inflation rate of 7% will reduce the value of your money to half in 10 years. 3) 4% Rule for Financial Freedom Corpus Required = 25 times of your estimated Annual Expenses. Eg- if your annual expense after 50 years of age is 500,000 and you wish to take VRS then corpus with you required is 1.25 crore. Put 50% of this...

Earn monthly in Laks in Idly factory business - லட்சக் கணக்கில் மாத வருமானம் ஈட்டும் இட்லி தொழிற்சாலை

Image
  1 லட்சம் ரூபாய் கடனோடு திருச்சியில் இருந்து சென்னைக்கு பிழைக்க வழி தேடி வந்த ரமேஷ், மற்றும் சகோதரர்கள் தொடங்கிய இந்த இட்லி தொழிற்சாலையில் ஒரு நாளைக்கு 35ஆயிரம் இட்லிகள் தயாராகிறது. தமிழர்களின் பாரம்பரியமிக்க உணவு வகைகளில் முதலிடம் பிடிப்பது இட்லி, சட்னி, சாம்பார்தான். நம்மவர்கள் வெளிநாடு சென்றாலும் சரி, வெளிநாட்டவர்கள் இங்கு வந்தாலும் சரி, தேடிப்பிடித்து வாங்கிச் சாப்பிடுவதும் இந்த இட்லியைத்தான். அந்தளவுக்கு அனைவருக்குமான எளிதில் ஜீரணமாகும் நல்ல ஆரோக்கிய உணவாக இட்லி இருப்பதே அதன் தனிச் சிறப்பாகும். இச்சிறப்பு மிகுந்த இட்லியை விற்பனை செய்து மாதமொன்றுக்கு லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டுகிறார் சென்னை மறைமலைநகரைச் சேர்ந்த ஆர்.என். ரமேஷ். எம்.ஏ., படித்துள்ள இவர், இட்லி வியாபாரத்தில் இறங்கியதை கண்டு எள்ளி நகையாடிய நண்பர்களும், உறவுகளும் இன்று இவரது வளர்ச்சியைக் கண்டு வாய்பிளந்து நிற்கின்றனர். 1 லட்சம் ரூபாய் கடனோடு திருச்சியில் இருந்து சென்னைக்கு பிழைக்க வழி தேடி வந்த ரமேஷ், இன்று சென்னை மட்டுமின்றி பல்வேறு நகரங்களில் உள்ள பலதரப்பட்ட உணவகங்கள் மற்றும் விஷேசங்களுக்கு இட்லிகளை விற்பனை செய்...

முத்து வியாபாரி ஆன புத்தக வியாபாரி: ஆண்டுக்கு ரூ.4 லட்சத்தை அள்ளித் தரும் முத்துக்கள் வளர்ப்பு! - pearl farming

Image
  முத்துகளை பார்த்து பார்த்து வாங்கி மகிழ்ந்திருப்பீர்கள். வளர்த்து பார்க்க நினைத்ததுண்டா? ஆமெனில், ஆழ்கடலின் அழகான முத்துகளை வீட்டிலேயே சாகுபடி செய்து ஆண்டுக்கு ரூ4 லட்சம் வருவாய் ஈட்டும் நரேந்திர குமாரிடமிருந்து முத்து வளர்க்க கற்று கொள்வோம். வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம், ஆட்டுப் பண்ணை, கோழி வளர்ப்பு, வாத்து வளர்ப்பு என்கிற வரிசையில் முத்து வளர்ப்பு லாபம் கொழிக்கும் தொழிலாக உருவெடுத்துள்ளது. பயிற்சியுடன் முயற்சித்தால் எவரும் முத்து வளர்ப்பில் ஈடுபட்டு முத்தான வருவாயை பெற இயலும். இதற்கு உதாரணமாக திகழ்கிறார் நரேந்திர குமார் கார்வா. ஏனெனில், வேளாண் தொழிலுக்கு முற்றிலும் தொடர்பற்ற குடும்பத்தில் பிறந்த அவர், முத்துவளர்ப்பு பற்றி ஏ டூ இசட் கற்று இன்று, ஆண்டுக்கு ரூ.4 லட்சம் வருமானம் ஈட்டும் முத்து வியாபாரியாக ஜொலிக்கிறார். முத்துக்கள் - தூய்மை மற்றும் பூர்ணத்துவத்தின் சின்னம், அழகு மற்றும் அமைதியின் சின்னம். அவை நிலவுகளாக அங்கீகரிக்கப்பட்டு வைரங்களுக்குரிய மதிப்பு வாய்ந்தவை. எக்காலத்திலும் கிராக்கி இறங்காத முத்துகளை நம் நாடு, சீனா மற்றும் ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்ய ஒவ்வொரு ஆண்...

வாழ்க்கையை மாற்றிய நியூஸ் பேப்பர்; மாதம் 3 லட்சம் சம்பாதிக்கும் லலிதா!- Turning Point story

Image
  மாதம் 3-3.5 லட்சம் வரை வருமானத்தை ஈட்டுகிறார் லலிதா! மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் பிறந்தவர் லலிதா. இயற்பியல் பட்டதாரியான இவருக்கு 20 வயதில் திருமணம் முடிக்கப்பட்டது. தற்போது 35 வயதான அவர், தொழில்முனைவோராக வேண்டும் என்று முனைப்புடன் இருந்தார். இதன் ஒரு முயற்சியாக  'கராச்சி ஆத்வான்’  என்ற உணவுக்கடையை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இது முழுக்க முழுக்க வீட்டுச் சாப்பாட்டை போலவே இருக்கும் உணவகம். “கராச்சி ஆத்வன்”  என்ற பெயருக்கு மராத்தியில்  ‘வீட்டை நினைவில் கொள்வது’  என்று பொருள். பாரம்பரிய, எளிமையான முறையில், வீட்டில் சமைத்த, சுவையான உணவுகளைக் கொடுப்பது மட்டுமல்லாமல், குறைந்த விலையில் விற்று வருகிறோம், என்கிறார் கராச்சி ஆத்வானின் நிறுவனர் லலிதா. ”நான் பொருளாதார ரீதியில் சுதந்திரமாக செயல்பட விரும்பினேன். வாழ்வாதாரத்தை நடத்த டியூஷன் எடுத்தேன். பிறகு சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முழுநேர பணியில் சேர்ந்தேன். பின்னர் அதிலிருந்து விலகிவிட்டேன்,” என லலிதா தனது கடந்த காலத்தை நினைவுகூர்கிறார். தான் ஒரு முதலாளியாக வேண்டும் என்ற எண்ணம் தான் அவரை சொந்தத் தொழில் ஒன்றை தொடங்...

மகாபாரதம் பகுதி-10 - Mahabharatham story in Tamil

  பரசுராமருக்கும், பீஷ்மருக்கும் பத்து நாட்கள் கடும் போர் நடந்தது. பீஷ்மரின் பாணங்களை பரசுராமரால் தாங்க முடியவில்லை. தசரத புத்திரன் ராமன் எப்படி அம்பு மழை பொழிவானோ அதுபோல் பொழிந்தாராம் பீஷ்மர். தன் தோல்வியை சிஷ்யனிடம் ஒப்புக்கொண்ட பரசுராமர் அங்கிருந்து சென்று விட்டார்.அம்பா அழுகையும், கோபமும் ஒன்றையொன்று மிஞ்ச, தனக்கிருந்த ஒரே ஆதரவையும் இழந்து விட்ட நிலையில், அங்கிருந்து காட்டிற்குச் சென்றாள். அவள் கடும் தவம் ஒன்றை இருந்தாள்.இறைவனிடம், கடவுளே! பீஷ்மன் என்னும் அபாரசக்தி கொண்ட ஒருவனால் நான் ஏமாற்றப்பட்டேன். அவனால் என் வாழ்க்கை அழிந்தது. நான் இருக்கும் இந்த தவத்தை ஏற்று அவனை என்றேனும் ஒருநாள் போரில் ஜெயிக்கும் ஆற்றலைப் பெற வேண்டும், என வேண்டினாள். பத்தாண்டுகள் உண்ணாமல், தண்ணீர் கூட குடிக்காமல் பாதம் மீது மற்றொரு பாதத்தை வைத்து கைகளை தலை மேல் கூப்பிய நிலையில் செய்த அவளது தவம் பலித்தது. அவளது மறைவுக்குப் பின் யாகசேனன் என்பவனுக்கு மகனாகப் பிறந்தாள். சிகண்டி என்று அந்தக் குழந்தைக்கு பெயர் சூட்டினான் யாகசேனன். இந்த நிலையில் அம்பிகாவையும், அம்பாலிகாவையும் திருமணம் செய்த விசித்திரவீரியன் அவர...

மகாபாரதம் பகுதி-9 - Mahabharatham story in Tamil

  அம்பா இப்படி சொன்னதும் பீஷ்மர் அவள் மேல் இரக்கம் கொண்டார்.மகளே! காதலை அழிக்கவல்லவர் யார்? காதலைக் கெடுப்பவர்கள் நன்றாக வாழ முடியாது. நீ விரும்பியபடி சாளுவதேசம் செல். உன் காதலனை மணந்து கொண்டு சந்தோஷமாக இரு, என வாழ்த்தி, தக்க படைபலத்துடன் அவளை சாளுவ தேசத்துக்கு அனுப்பி வைத்தார்.அம்பா மிகுந்த மகிழ்ச்சியுடன் சாளுவதேசத்துக்கு சென்றாள். அரண்மனைக்குச் சென்று பிரம்மதத்தனை அப்படியே அள்ளி அணைத்தாள்.மன்னவரே! பீஷ்மரிடம் பிடிபட்டவர்கள் தப்பித்த வரலாறு உண்டா? நான் உங்கள் மீது கொண்ட காதலை அவரிடம் தெரிவித்தேன். அவரது தம்பியை மணந்து நிம்மதியாக வாழ முடியாது. மனதில் ஒருவனையும், வீட்டில் ஒருவனையும் சுமந்து கொண்டு வாழ முடியாது என்றேன். என் கருத்தை பீஷ்மர் ஏற்றார். என்னை விடுவித்து விட்டார். பிரம்மதத்தரே! இனி நம்மை பிரிக்க யாருமில்லை. நம் மணநாளைக் குறியுங்கள், என படபடவென பொரிந்தாள். சீ மானம் கெட்டவளே! வெளியே போ, என அரண்மனையே அதிரும் வகையில் கத்தினான் பிரம்மதத்தன். அம்பா அதிர்ந்தாள். ஏ அம்பா! யாரை ஏமாற்றப் பார்க்கிறாய். அந்த பீஷ்மன் தன் தம்பி விசித்திர வீரியனுக்காக உன்னை அழைத்துச் சென்றான். அவன் உன்னிட...

மகாபாரதம் பகுதி-8 - Mahabharatham story in Tamil

  நாங்கள் அந்த மீனை தற்செயலாக அறுத்தோம். அதன் வயிற்றில் இரண்டு குழந்தைகள் இருந்தன. ஒன்று ஆண்; மற்றொன்று பெண். சேதி வம்சத்து மன்னன் வசு அந்த ஆண் குழந்தையைப் பெற்றுக்கொண்டான். அந்த குழந்தைக்கு மீனவன் என்று பெயர் வைத்தான். பெண் குழந்தையை என்னிடம் ஒப்படைத்துவிட்டான். அவளுக்கு யோஜனகந்தி என பெயரிட்டு நான் வளர்த்தேன். அவள்தான் இப்போது உங்களுக்கு மனைவியாகப் போகிறவள். இவளைமீனவப் பெண் என நினைக்க வேண்டாம். உங்களுக்கே உரித்தான அரசர்குலத்தில்தான் பிறந்தவள். எனவே இவளை நீங்கள் தயக்கமில்லாமல் திருமணம் செய்துகொள்ளலாம். இன்று மிகச்சிறந்த முகூர்த்தநாள். இந்த நாளிலேயே இவளை ஏற்றுக்கொள்ளுங்கள், என செம்படவர் தலைவன் சொல்லி முடித்தான். அன்றைய தினமே சந்தனுவுக்கும் யோஜனகந்திக்கும் திருமணம் நடந்தது. தந்தையார் புதிய மனைவியுடன் மகிழ்ச்சியுடன் வாழ்க்கை நடத்தியதால், அரசபதவியை பீஷ்மர் ஏற்றுக்கொண்டார். அவரது அரசாட்சியில் மக்கள் மகிழ்ச்சியுடன் இருந்தனர். சில ஆண்டுகளில் யோஜனகந்திக்கு இரண்டு மகன்கள் பிறந்தார்கள். இருவருமே சூரியனையும் சந்திரனையும் போன்று ஒளிமிக்கவர்களாக திகழ்ந்தனர். ஒருவனுக்கு சித்ராங்கதன் என்றும், மற்...

மகாபாரதம் பகுதி-7 - Mahabharatham story in Tamil

  இளவரசர் தேவவிரதன் வந்திருக்கிறார் என்ற தகவல் செம்படவர் தலைவனுக்கு எட்டியது. அவன் ஓடிவந்து இளவரசனின் பாதங்களில் விழுந்து நமஸ்கரித்தான். இளவரசே! தாங்கள் மீன்வாடை வீசும் எங்கள் பகுதிக்கு வந்தது நாங்கள் செய்த நற்பாக்கியம். இளவலே! தாங்கள் வந்த நோக்கம் தெரிவித்தால், அதன்படி செயல்பட காத்திருக்கிறோம், என்றான்.தேவவிரதன் ஆரம்பித்தான்.பாட்டனாரே! தாங்கள் இவ்வளவு பணிவுடன் என்னுடன் பேச வேண்டிய அவசியமில்லை. ஏனெனில், நான் உங்கள் பேரன். என்னை ஒருமையில் பேசும் உரிமை தங்களுக்கு உண்டு, என்ற தேவவிரதனை ஆச்சரியமாகப் பார்த்தான் செம்படவத்தலைவன்.தாத்தா! நேரடியாகவே விஷயத்திற்கு வருகிறேன். தங்கள் மகள் யோஜனகந்தி இனி என் தாய். என் தந்தை தங்களிடம் அவளைப் பெண் கேட்டு வந்த போது, தாங்கள் விதித்த நிபந்தனையை சாரதி மூலமாக அறிந்தேன். உங்களுக்கு என்னைப் பற்றிய பயம் வேண்டாம். இனி நான் கங்காதேவியின் மகனல்ல. யோஜனகந்தியின் மகன். அவளுக்கு ஒரு குழந்தை பிறக்குமானால், அந்தக் குழந்தையே இந்த நாட்டை ஆளட்டும். நான் என் தம்பிக்கு இந்த நாட்டை விட்டுத் தருகிறேன்.நீங்கள், யோஜனகந்தியை தயங்காமல் என் தந்தைக்கு திருமணம் செய்து வையுங்கள்....

மகாபாரதம் பகுதி-6 - Mahabharatham story in Tamil

  மகன் கிடைத்து விட்டான் என்ற சந்தோஷத்திலும், மனைவியின் பிரிவைத் தாங்க முடியாமல் சந்தனு கண்ணீர் விட்டான். கங்காதேவியின் செயலிலுள்ள நியாயத்தைப் புரிந்து கொள்ள முடியாமல், சூழ்நிலைக் கைதியாகி விட்ட தன் நிலையை எண்ணி வருந்தினான்.பின்னர் தன் மகனை தேரில் ஏற்றிக் கொண்டு ஹஸ்தினாபுரம் வந்து சேர்ந்தான். மன்னன் தன் மகனுடன் வருகிறான் என்ற செய்தி ஊருக்குள் பரவி விட்டதால் முக்கியஸ்தர்களும், நாட்டு மக்களும் ஊர் எல்லையில் வந்து தங்கள் இளவரசரை வரவேற்க காத்திருந்தனர். அவர்கள் வந்தவுடன் இளவரசர் தேவவிரதன் வாழ்க என்ற கோஷம் விண்ணைப் பிளந்தது.சந்தனு தன் மகனுக்கு இளவரசு பட்டம் சூட்டினான். இருவருமாக இணைந்து நல்லாட்சி நடத்தி வந்தனர்.ஒரு சமயம் சந்தனு வேட்டைக்குச் சென்றான். இளைப்பாறுவதற்காக யமுனைக்கரைக்கு வீரர்களுடன் வந்த அவனது நாசியில் சந்தன மணம் பட்டது. வரவர மணத்தின் அளவு கூடியது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை சந்தன மரங்கள் ஏதும் காணப்படவில்லை. பிறகெப்படி வாசம் வருகிறது? சந்தனு குழம்பினான்.கிட்டத்தட்ட ஒரு யோஜனை தூரம் (8கி.மீ.) நடந்தான். நதிக்கரையில் ஒரு பெண் நின்றாள். அவள் பரிசல் ஓட்டுபவள். அவள் நின்ற இடத்தில் இர...