தொழில் முனைவோர் (Entrepreneur), தொழில் அதிபர் (Business man) வேறுபாடு என்ன?
மேலே குறிப்பிட்ட படத்தில் உள்ளது போல் ஒரு வணிகர் அதாவது தொழிலதிபர் அவரின் என்னங்கள் எப்போதும் பணப்புழக்கம், இலாபம் இவைகளை சுற்றியே கவனம் இருக்கும்.
இவர்கள் பாரம்பரிய வியாபாரம் அல்லது தொழில் செய்பவர்கள். இங்கே ரிஸ்க் குறைவு. உதாரணம்: திருபாய்/முகேஷ் அம்பானி, அல்லது டாடா, பிர்லா போன்றோர்கள்.
ஒரு தொழில்முனைவோராக இருக்கும்போது: ஆக்கபூர்வமான சந்தைப்படுத்தல், புதிய யோசனைகள், ஒரு குழுவை உருவாக்குதல், மக்களுடன் இணைத்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்துவது முக்கியம்.
இவர்கள் பாரம்பரிய வியாபாரம் முறையில் இருந்து வேறுப்பட்டு தனக்கென ஒரு தனித்துவமையுடன் அதே நேரம் மக்களின் தேவை புரிந்து செயல் படுபவர்கள். இதில் ரிஸ்க் அதிகம். மேலே படத்தில் குறிப்பிட்டது போல், கொய்யா பழத்தை கொள்முதல் செய்து, அதில் உப்பு, மிளகாய் சேர்த்து விற்பவர்.
இங்கே மக்கள் இடத்தில் அவர் கொடுக்கும் உப்பு மிளகாய் கலந்த கொய்யாப்பழம் பிடித்து விட்டால், அதிரி புதிரி ஹிட். இல்லை என்றால் அவர் வாங்கிய உப்பு மிளகாய் வீனாக போவதுடன், முதலுக்கே மோசம் ஆகி, தொழிலையே மூடும் நிலமை வரும். உலகின் தலை சிறந்த சில தொழில் முனைவர்கள்: பில் கேட்ஸ், ஜெப் பெஸோஸ், லாரி பேஜ், எலான் மஸ்க்.
நீங்கள் தொழிலதிபராக விரும்பினால், உங்களுக்கு தொழில் முனைவோர் பண்புகள் தேவை. நீங்கள் ஒரு தொழில்முனைவோராக இருக்க விரும்பினால், உங்களுக்கு தொழிலதிபர் பண்புகள் தேவை. இவை பல வழிகளில் ஒன்றுடன் ஒன்று தொடர்புடயவை, இரண்டையும் சிறப்பாக எவ்வாறு செய்வது என்பதைக் கற்றுக்கொள்வதே மிகச் சிறந்த விஷயம்.
தொழில்முனைவோர் அதிக ஆபத்துக்களை எடுத்து புதிய விஷயங்களை முயற்சி செய்கிறார்கள், அதே நேரத்தில் வணிகர்கள் பாதுகாப்பாக வேலை செய்வதில் கவனம் செலுத்த விரும்புவர்கள். இவ்விருவருக்குமான குணனலங்களின் இடையில் ஒரு வலுவான சமநிலை ஏற்ப்படும் போதுதான் பல அற்புதங்கள் நடக்கின்றது.
Comments
Post a Comment