குரங்குகள்

ஒரு அறையில் 6 குரங்குகளை வைத்து பூட்டினர் விலங்கியல் விஞ்ஞானிகள்.🐵🐵🐵 🐵🐵🐵

அந்த அறையின் சீலிங்கில் (ceiling) பழபழவென்று ப்ளாஸ்டிக் வாழைப்பழங்கள் 🍌 தொங்க விடப்பட்டிருந்தன.

அதனை அடையவேண்டும் என்றால் அங்கு வைக்கப்பட்டிருந்த ஏணியில் ஏறினால் மட்டுமே முடியும்...சும்மா இருக்குமா குரங்குகள்?

ஏணியில் ஏறி அந்த வாழைப்பழங்களை அடைய முயன்றன.எந்த குரங்காவது 🐵 அந்த ஏணியில் ஏறினால், ஐஸ் தண்ணீரை 🚿 பாய்ச்சியடித்தனர் அந்த விஞ்ஞானிகள்...

குளிர் தாங்காது வெடவெடத்து போய் இறங்கிவிட்டன.மீண்டும் குரங்குகள் 🐵 ஏறின... ஐஸ் நீர் 🚿பாய்ச்சியடிக்கப்பட்டன.குளிர் தாங்காது வெடவெடத்து போய் இறங்கிவிட்டன.

மீண்டும் குரங்குகள் 🐵 ஏறின... ஐஸ் நீர் 🚿பாய்ச்சியடிக்கப்பட்டன... குளிர் தாங்காது வெடவெடத்து போய் இறங்கிவிட்டன.

மீண்டும் குரங்குகள் 🐵 ஏறின... ஐஸ் நீர் 🚿பாய்ச்சியடிக்கப்பட்டன... குளிர் தாங்காது வெடவெடத்து போய் இறங்கிவிட்டன.

இப்படியே சில நாட்கள் சென்றன. குரங்குகளுக்கு வாழைப்பழத்தைத் தவிர்த்து மற்ற உணவுகள் 🥘🍝 குறிப்பிட்ட நேரத்தில் ⏰ வழங்கப்பட்டன என்பது தனி.

மீண்டும் ஒரு குரங்கு 🐵 ஏறியது... ஜஸ் நீருக்கு 🚿 பயந்து 😱 மற்ற 5 குரங்குகளும் 🐵🐵🐵🐵🐵 ஏறிய அந்த ஒரு குரங்கை அடித்து இறக்கி விட்டன.

இன்னொரு 🐵 குரங்கு ஏறியது... ஜஸ் நீருக்கு🚿பயந்து 😱 மற்ற 5 குரங்குகளும் 🐵🐵🐵🐵🐵 ஏறிய அந்த குரங்கை அடித்து இறக்கி விட்டன.

இன்னொரு 🐵 குரங்கு ஏறியது... ஜஸ் நீருக்கு🚿 பயந்து 😱 மற்ற 5 குரங்குகளும், ஏறிய அந்த குரங்கை அடித்து இறக்கி விட்டன.

இப்போதெல்லாம் விஞ்ஞானிகள் ஐஸ் நீரைபாய்ச்சியடிப்பதை முற்றலும் நிறுத்திவிட்டனர். 🚿🚫

அப்படியும்... இன்னொரு குரங்கு 🐵 ஏறியது... ஜஸ் நீருக்கு 🚿 பயந்து 😱 மற்ற 5 குரங்குகளும் 🐵🐵🐵🐵🐵 ஏறிய அந்த குரங்கை 🐵 அடித்து இறக்கி விட்டன.

இப்போ... அந்த 6 குரங்குகளில் ஒன்றை 🐵 எடுத்துவிட்டு புதிய குரங்கு 🐒 ஒன்றை வைத்தனர்.🐵 🐵🐵🐒.அந்த புதுக்குரங்கு 🐒 என்ன பண்ணும்?

கரெக்ட்!வாழைப்பழத்தை எடுக்க ஏணி வழியாக ஏறியது... மற்ற 5 பழைய குரங்குகளும் 🐵🐵🐵 🐵🐵 அந்த புதுக்குரங்கின் 🐒 மண்டையிலேயே போட்டு இறக்கிவிட்டன..

புதிய குரங்குக்கு 🐒 ஒன்றும் புரியல...‘என்னடா இது? அந்த வாழைப்பழத்தை இவங்களும்எடுக்க மாட்டேங்குறானுங்க... நம்மளையும் எடுக்க விட மாட்டேங்குறானுங்க’ என்று நினைத்தது...

மீண்டும் வாழைப்பழத்தை எடுக்க ஏணி வழியாக ஏறியது... மற்ற 5 பழைய குரங்குகளும் 🐵🐵🐵 🐵🐵 அந்த புதுக்குரங்கின் 🐒 மண்டையிலேயே போட்டு இறக்கிவிட்டன..

அடுத்த நாள், இன்னொரு பழைய குரங்கை 🐵எடுத்துவிட்டு இரண்டாவது புதிய குரங்கை 🐒 நுழைத்தனர் விஞ்ஞானிகள்.🐵🐵🐵 🐵🐒🐒அந்த இரண்டாவது புதுக்குரங்கு 🐒 என்ன பண்ணும்?

ம்... வெரி குட்! இரண்டாவது புதுக்குரங்கு 🐒 வாழைப்பழத்தை எடுக்க ஏணி வழியாக ஏறியது... மற்ற 4 பழைய குரங்குகளும் 🐵🐵🐵 🐵 அந்த முதல் புதுக்குரங்கும் 🐒,புதிதாக வந்த இரண்டாவது குரங்கின் 🐒 மண்டையிலேயே போட்டு இறக்கிவிட்டன..

மீண்டும் அந்த இரண்டாவது புதுக்குரங்கு வாழைப்பழத்தை எடுக்க ஏணி வழியாக ஏற... மற்ற 4 பழைய குரங்குகளும் 🐵🐵🐵 🐵 அந்த முதல் புதுக்குரங்கும் 🐒, புதிதாக வந்த இரண்டாவது குரங்கின் 🐒 மண்டையிலேயே போட்டு இறக்கிவிட்டன.

இப்படியே நாட்கள் போச்சு. விஞ்ஞானிகளும் ஒவ்வொரு பழைய குரங்காக 🐵 வெளியே எடுத்துவிட்டு அதற்கு பதிலாக ஒரு புதிய குரங்கை 🐒வைத்தனர்.

புதிதாக வந்த ஒவ்வொரு குரங்கும் 🐒 அந்த வாழைப்பழத்தை எடுக்க ஏணியில் ஏற... ஏற்கனவே இருந்த மற்ற குரங்குகள் அதனை அடித்து கீழே இறக்கிவிட, இப்படியே போனது.

ஒரு கட்டத்தில் அந்த அறையில் கடைசி பழைய குரங்கை 🐵 நீக்கிவிட்டு... 6வது புதிய குரங்கை 🐒 வைத்தனர்...இப்போ ஆறும் புதிய குரங்குகள்... 🐒🐒🐒 🐒🐒🐒என்னாச்சு?

ம்... அதே தான்...!ஆறாவதாக வந்த புதுக்குரங்கு 🐒 வாழைப்பழத்தை எடுக்க ஏணி வழியாக ஏறியது. மற்ற 5 புதிய குரங்குகளும் புதிய-தாக வந்த 6வது குரங்கின் 🐒 மண்டையிலேயே போட்டு இறக்கிவிட்டன.

இப்போ'எதற்காக அந்த 5 குரங்குகளும் 🐒🐒🐒🐒🐒 இறக்கிவிட்டாங்க' என்று அந்த 6வது புதிய குரங்கிற்கும்🐒 தெரியாது.

'எதற்காக அந்த 6வது புதிய குரங்கை 🐒 இறக்கிவிட்டோம்' என அந்த 5 புதிய குரங்குகளுக்கும் 🐒🐒🐒🐒🐒 தெரியாது.

*இந்த குரங்கு கதையில் வருவது போல் மனிதர்களும் சிலவற்றை ஏன், எதற்கு என்று தெரியாமல் ஆராயாமல் செய்து கொண்டு இருக்கிறார்கள்…*

Comments

Popular posts from this blog

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ

உயர்வு

சூழ்நிலை