புரியும்படி பேச வேண்டும் - Clarity in speech

 ' புரியும்படி பேச வேண்டும்..''

சிலர் பேசும் போது மத்தவங்களுக்குப் புரியுதா? புரியலையா? அப்படிங்கறதப் பத்தியெல்லாம் கவலைப்படாம படபடன்னு பேசிக்கிட்டே இருப்பாங்க.

இத்தகையப் பேச்சு கேட்பவருக்கு எரிச்சலைத் தரும். அதனால, அவங்க கேட்பதைப் பாதியிலேயே நிறுத்திடுவாங்க.

அதனால, மத்தவங்களுக்குப் புரியும்படி தெளிவாகப் பேசணும். அப்ப தான் நமது பேச்சை விரும்பிக் கேட்பாங்க.

ஒரு தலைச்சிறந்த ஆன்மீகப் பேச்சாளர் இருந்தார்..பல பட்டங்கள் பெற்றவர்.. தத்துவங்களை கரைத்துக் குடித்தவர்..

அவரை ஒரு ஊரில் சொற்பொழிவு ஆற்ற கூப்பிட்டு இருந்தார்கள். பத்தாயிரம் பேர் வருவார்கள் என்றும் அவரிடம் சொல்லி இருந்தார்கள்.

அவரை அழைத்துண்டு செல்ல ஒரு குதிரைக்காரர் சென்றிருந்தார். அன்றைக்கு என்று பார்த்து ஊரில் பயங்கர மழை.

கூட்டம் ரத்து ஆகி விட்டது. எல்லோரும் கலைந்து சென்று விட்டார்கள். பேச்சாளர் வந்த போது அங்கே யாருமே இல்லை.

பேசறதுக்காக நிறையத் தயார் செய்து வந்த பேச்சாளருக்கு பெருத்த ஏமாற்றம்..

இருக்கிற குதிரைக்காரருக்காக மட்டும் பேசலாம் என்றால் மனசு இல்லை.'குதிரை வண்டிக்காரரைப் பார்த்து ''என்னப்பா செய்யலாம்?’னு கேட்டார்.

அய்யா! நான் குதிரைக்காரன்... எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க. ஆனா ஒண்ணே ஒண்ணு தெரியுங்க... நான் முப்பது குதிரை வளர்க்கிறேன்.

புல்லு வைக்கப் போறப்போ எல்லாக் குதிரையும் வெளியே போயி, அங்கே ஒரே ஒரு குதிரை மட்டும் தான் இருக்குதுனு வெச்சுக்கோங்க.

நான் அந்த ஒரு குதிரைக்குத் தேவையான புல்லை வெச்சிட்டுத்தாங்க திரும்புவேன்’னான்.

செவிட்டில் அறைந்த மாதிரி இருந்தது அவருக்கு.. அந்தக் குதிரைக்காரருக்கு ஒரு ‘சபாஷ்’ போட்டு விட்டு, அவனுக்கு மட்டும் தன் பேச்சை ஆரம்பித்தார்.

தத்துவம், மந்திரம், பாவம், புண்ணியம், சொர்க்கம், நரகம்னு சரமாரியாச் சொல்லிப் பிரமாதப்படுத்தினார் அந்தப் பேச்சாளர்...

பேச்சு முடிந்தது. ‘எப்படிப்பா இருந்தது என் பேச்சு?’னு அவரைப் பார்த்துப் பெருமையாகக் கேட்டார்...

அய்யா... நான் குதிரைக்காரன். எனக்கு ஒண்ணும் தெரியாது.. ஆனா ஒண்ணே ஒண்ணு தெரியுங்க... நான் புல்லு வைக்கப் போற இடத்தில் ஒரு குதிரை மட்டும் இருந்தால் , நான் அதுக்கு மட்டும் தான் புல்லு வெப்பேன். முப்பது குதிரைக்கான புல்லையும் அந்த ஒரு குதிரைக்கே கொட்டிட்டு வர மாட்டேன்!’னான்.

அவ்வளவு தான்... மறுபடியும் செவிட்டில் அறைந்ததைப் போன்று இருந்தது அந்தப் பேச்சாளருக்கு..

ஆம்.,நண்பர்களே..,

இவங்க இன்னும் கொஞ்சம் பேச மாட்டாங்களா, என்ற உணர்வினை நமது பேச்சைக் கேட்பவருக்குத்

தோற்றுவிக்க வேண்டும். அப்படிப் பேசுவது தான் நாம் பேசும் பேச்சின் வெற்றிக்கு அடிப்படை..

மற்றவங்களுக்கு என்ன தேவையோ, அல்லது எதைச் சொன்னால் புரியுமோ, அதை மட்டும் சொன்னால் போதும்.

புரியாத, தேவை இல்லாத செய்திகளை மெனக்கெட்டு சொல்வது நம்மைத் தான் முட்டாளாக்கும்..

வாழ்க🙌வளமுடன்

Comments

Popular posts from this blog

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ

உயர்வு

சூழ்நிலை