எந்த திறன்களை வளர்த்துக் கொண்டால் இரண்டாவது வருமானம் பார்க்க முடியும்?
கடும் உழைப்பு, நேர மேலாண்மை என்று பொதுவான ஒரு பதிலை கொடுத்து ஜல்லி அடிக்க விரும்பவில்லை. எனக்கு எப்பொழுதும் Measurable Results என்பதில் தான் நம்பிக்கை உண்டு. உங்கள் இளம் பிராயத்தில் விளையாட்டாய் கற்றுக் கொண்ட சில விஷயங்கள் உங்களுக்கு இரண்டாவது வருமானத்துக்கு பிள்ளையார் சுழி போடலாம். ஆனால் அந்த திறமையை நீங்கள் அறிந்து கொள்வது மிக முக்கியம். அப்பொழுது தான் "நாங்க இருக்கோம், நம்பி வாங்க!" என்று மற்றவரையும் நீங்கள் நம்ப வைக்க முடியும். சரி வாங்க, பதிலுக்கு போவோம். 1.ஸ்பானிஷ், ஜெர்மன், ஜப்பானிய மொழி என்று ஏதாவது ஒன்று சான்றிதழ் பெற்றிருந்தால், மாலை நேரத்தில் மொழி ஆசிரியராகி விடலாம். ஸ்கைப்பிலேயே பாடம் எடுத்து டாலரில் சார்ஜ் செய்யலாம். எனக்கு தெரிந்த ஒருவர் ஜெர்மன் மொழி பெயர்ப்பாளராக முழு நேர பணியே செய்தார். 2. நீங்கள் சிலம்பம், களரி என்று தெரிந்து வைத்திருந்தால், நான்கு நண்பர்களுடன் ஒரு சிறிய பயிற்சி நிறுவனத்தை தொடங்கி விடலாம். அமெரிக்க நேரத்துக்கு நீங்கள் சிலம்ப ஆசானாக மாறி, நிஜமாகவே கம்பு சுத்தலாம். வரும்படியும் வரும். மாதம் 50 டாலர் - 50 மாணவர்கள். இந்திய மதிப்பில் கணக்கிட்டு க...