Posts

Showing posts from September, 2022

தேவையான மருந்து எப்போதும் மருந்தகங்களில் கிடைப்பதில்லை

 தேவையான மருந்து எப்போதும் மருந்தகங்களில் கிடைப்பதில்லை* I. *உடற்பயிற்சி* என்பது மருத்துவம். ii *விரதம்* இருப்பது மருத்துவம். iii *இயற்கை உணவே* மருந்து. iv. *சிரிப்பு* ஒரு மருந்து. v. *காய்கறிகளே* உண்பது மருந்து. vi. *தூக்கமே* மருந்து. vii. *சூரிய ஒளியே* ‌ ‌மருந்து viii. ஒருவரை *நேசிப்பது* மருத்துவம். ix. *நேசிக்கப்படுவது* மருத்துவம். x. *நன்றியுணர்வு* என்பது மருத்துவம். xi குற்றத்தை *மன்னிப்பது* மருத்துவம். xi *தியானம்* என்பது மருத்துவம். xiii. புத்தகங்களை.... வரலாற்றை.... தத்துவங்களை... படிப்பதும் மருத்துவம். xiv. *பாடுவதும்* *ஆடுவதும்* மருத்துவம். xv *சரியான* நேரத்துக்குச் சாப்பிடுவதும் மருத்துவம். xvi சரியாகச் *சிந்திப்பதும்*, சரியான மனநிலையுடன் இருப்பதுவும் மருத்துவம். xvii. *தன்னை நம்புவதும்* மருத்துவம் xviii. *நல்ல நண்பர்கள்* இருப்பதும் மருத்துவம். xix. தன்னை *மன்னிப்பதும்* மற்றவர்களை *மன்னிப்பதும்* மருத்துவம். *இந்த மருந்துகளை போதுமான அளவு எடுத்துக் கொள்ளுங்கள், மருந்தகங்களின் மருந்து உங்களுக்கு அரிதாகவே தேவைப்படும்*

முன்னாள் நீதிபதி சா.நாகமுத்து அவர்களின் மனக்குமுறல்!

 # படித்ததில் வலித்தது # முன்னாள் நீதிபதி சா.நாகமுத்து அவர்களின் மனக்குமுறல்! "எனது நீதிமன்றத்தில் எத்தனையோ வழக்குகள் வந்திருக்கின்றன... அதில் ஒரு வழக்கு என்னை மிகவும் உணர்ச்சிவசப்பட வைத்தது!" என் எதிரே பரிதாபமே உருவெடுத்து வந்தது போல ஒரு நடுத்தர வயது பெண் நின்று கொண்டிருந்தார். வழக்கு தொடுத்தவரும், அவரே! ஐயா, "எங்களுக்கு ஒரே மகள்; என் வீட்டுக்காரருக்கு கைகால் வராது; நான் நாலைந்து வீட்டில் வீட்டு வேலைசெய்து அதில் வரும் சம்பாத்யத்தில் தான் கணவரையும் மகளையும் காப்பாற்றி வந்தேன்; வருகிறேன்! மகளைக் கஷ்டம் தெரியாமல் வளர்த்தேன்; பலரது கால்களில் விழுந்து நல்ல பள்ளியில் படிக்க வைத்தேன்; வேலை செய்யும் வீட்டில் நல்ல உணவு கொடுத்தால், அதை சாப்பிடாமல் மகளுக்கு கொண்டுவந்து கொடுத்து அவள் சாப்பிட்டு சந்தோஷப்படுவதை பார்த்து மகிழ்வேன்! அதே போல யார் யாரிடமோ கெஞ்சி வேலையும் வாங்கிக் கொடுத்தேன். அவள் இப்போது சம்பாதிக்க ஆரம்பித்து விட்டாள்; இனி எங்கள் கஷ்டம் எல்லாம் போய்விடும்; அவள் எங்களை பார்த்துக் கொள்வாள் எனறு நினைத்தபோது... திடீரென ஒருநாள் அவள் காணாமல் போய்விட்டாள்; அவளை அவளது விருப்பமின...

குருதேவர் சொன்ன குட்டிக் கதை - நல்லது கேட்டது - ராமகிருஷ்ண பரமஹம்சர்

 குருதேவர் ராமகிருஷ்ணர் சீடர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார். “எல்லாம் நாராயணன்தான்; எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். நல்லவர்களிடமும் அவர் இருக்கிறார்; கெட்டவர்களிடமும் அவர் இருக்கிறார். இருந்தாலும் தீயவர்களிடமிருந்து நாம் சற்று விலகியே இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நமக்குத் துன்பம்தான் வரும்” என்று கூறியவர், அதை விளக்க கதை ஒன்றைச் சொல்ல ஆரம்பித்தார். ஒரு குருவினிடத்தில் சீடன் ஒருவன் இருந்தான். அந்தச் சீடரிடம் குரு “அனைத்தும் நாராயணன் தான், அதனை மறந்து விடாதே” என்று அடிக்கடி கூறிக் கொண்டிருப்பார். குருவின் வாக்கையே திருவாக்காக எடுத்துக் கொண்ட சீடன், அதனையே பின்பற்ற ஆரம்பித்தான். மண்புழுவிலிருந்து மனிதன் வரை அனைத்தையும் நாராயணனாகவே பார்க்க ஆரம்பித்தான். ஒரு முறை புதிய ஊர் ஒன்றுக்குச் சென்று கொண்டிருந்தான் அந்தச் சீடன். திடீரென மக்கள் அங்கும் இங்கும் சிதறி ஓட ஆரம்பித்தனர். சீடனையும் ஓடி ஒளிந்து கொள்ள சொல்லினர். சீடன் என்ன காரணம் என்று கேட்டான். அதற்கு மக்கள், “யானைக்கு மதம் பிடித்து விட்டது. அது ஆவேசமாக வந்து கொண்டிருக்கிறது. ஓடிப்போய் உடனே உன் உயிரைக் காப்பாற்றிக் கொள்” என்று கூறி...

மூன்று மாமனிதர்களின் பெற்றோர்கள்!

 *முதல் மாமனிதர் :* 150 ஆண்டுகளுக்கு முன்பு குதிரை வண்டி தான் போக்குவரத்துக்கு பயன்பட்டது. அப்படியொரு குதிரை வண்டியில் ஒரு சிறுவன் பள்ளிக்கு செல்வது வழக்கம். *ஒரு முறை வகுப்பில் ஆசிரியர் மாணவர்களிடம் நீங்கள் பெரியவனானதும் என்னவாக ஆசைப்படுகிறீர்கள் என்று கேட்டார்.* அதற்கு ஒவ்வொரு மாணவரும் வக்கீல், ஆசிரியர், மருத்துவர் என சொல்லி கொண்டே வந்தனர், அப்போது *ஒரு மாணவன் கூறினான் “நான் குதிரை வண்டிக்காரனாவேன் ”.* சுற்றியிருந்த மாணவர்கள் எல்லாம் சிரித்தனர், ஆசிரியரும் அவனை கேலி செய்து உட்கார சொன்னார். அந்த சிறுவன் வீட்டிற்கு சோகமாக வந்ததை பார்த்து தாய் என்னவென்று கேட்க, நடந்ததை கூறினான் அந்த சிறுவன். அதை கேட்ட அந்த தாய் மகன் மீது கோபம் கொள்ள வில்லை, அந்த தாய் கேட்டார் *“ நீ ஏன் குதிரை வண்டிக்காரனாக ஆசைப்படுகிறாய், அதற்கு என்ன காரணம்”.* அந்த சிறுவன் கூறினான் “தினமும் பள்ளிக்கு செல்லும் போது குதிரை வண்டிக்காரன் குதிரை ஓட்டுவதை பார்ப்பேன், அவர் குதிரை ஓட்டுவது அழகாக இருக்கும். *எனக்கும் அதுபோல் குதிரை வண்டி ஓட்ட வேண்டும் என்று ஆசை, அதனால் தான் அப்படி கூறினேன்”.* இதை கேட்ட தாய் வீட்டினுள் சென்று...

Healthy list

 ஆரோக்கியதிற்கான வழிகள்  1 நீண்ட நேரம் தூங்குங்கள் 2 உடற்பயிற்சி செய்யுங்கள் 3 அதிக தண்ணீர் குடிக்கவும் 4 சர்க்கரை குறைவாக சாப்பிடுங்கள் 5 எதிர்மறைக்கு பதிலளிக்க வேண்டாம் 6 அதிகமாக எழுதுங்கள்  7 ஒழுங்கீனத்தை அகற்றவும் 8 பொறுமையாக இருங்கள் 9 அதிகமாக கேளுங்கள் 10 சத்தமாக சிரிக்கவும் 11 ஆழமாக சுவாசிக்கவும் 12 அமைதியாக இருங்கள் 13 நேர்மையாக இருங்கள்

முண்டு மிளகாய்... ராமநாதபுரத்தின் தனித்துவ அடையாளம்! புவிசார் குறியீடு வழங்கப்படுமா?

Image
  தமிழ்நாட்டில் விளையக்கூடிய மஞ்சள், மலைப்பூண்டு உள்ளிட்ட விளைபொருள்களுக்கு ஏற்கெனவே புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் ராமநாதபுரம் மாவட்டத்தின் தனித்துவ அடையாளமாகத் திகழும் முண்டு மிளகாய்க்கும் புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என இம்மாவட்ட விவசாயிகள் கோரிக்கை எழுப்புகிறார்கள். தங்கள் மாவட்டத்தில் மட்டுமே நீண்டகாலமாக அதிகளவில் விளைவிக்கப்படும் முண்டு மிளகாய்க்குப் புவிசார் குறியீடு கிடைத்தால், உலக அளவில் இதற்குப் பெரும் வரவேற்பு கிடைக்கும் என்கிறார்கள் இப்பகுதி விவசாயிகள். காரம், சுவை, மணம் அதிகம் ராமநாதபுரம் முண்டு மிளகாயின் சிறப்புகள் மற்றும் இதற்கான புவிசார் குறியீடு பெறுவதற்கான அவசியம் குறித்து அறிந்து கொள்ள, இம்மாவட்டத்தில் இயங்கி வரும் வேளாண் அறிவியல் நிலையத்தின் தோட்டக்கலை உதவிப் பேராசிரியர் பாலசுப்பிரமணியனை சந்தித்துப் பேசினோம். ‘‘முண்டு மிளகாயில் காரத்தன்மை, சுவை, மணம் அதிகமாக இருக்கும். இது வறட்சி தாங்கி வளரக்கூடிய பயிராகும். இம்மாவட்டத்தில் உள்ள கடலாடி, முதுகுளத்தூர், பரமக்குடி ஆகிய வட்டங்களில் பல்லாயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மானாவாரி பயிராக முண்டு மிளகாய...

ஒரு ஏக்கர்... ரூ.1,35,000... அசத்தல் வருமானம் தரும் 'அழகிவிளை' நாட்டு ரக முருங்கை!

Image
  தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி பாலகிருஷ்ணன் ஒரு ஏக்கரில் ‘அழகிவிளை’ என்ற நாட்டு ரக முருங்கையை இயற்கை முறையில் சாகுபடி செய்து நிறைவான வருமானம் பார்த்து வருகிறார். 25.02.2016 தேதியிட்ட இதழில், “15 சென்ட்... 150 நாள்... 70 ஆயிரம் லாபம்” என்ற தலைப்பில் இவரைப் பற்றி ஏற்கெனவே கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. வெள்ளைப் பாகல் சாகுபடி குறித்த தன் அனுபவத்தை அதில் பதிவு செய்திருந்தார். தற்போது இவர் சாகுபடி செய்துள்ள அழகிவிளை நாட்டு ரக முருங்கை அனுபவம் குறித்து அறிந்துகொள்ள மீண்டும் இவரைச் சந்திக்கச் சென்றோம். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் இருந்து 9 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது நடுவக்குறிச்சி கிராமம். இங்குதான் பாலகிருஷ்ணனின் முருங்கை தோட்டம் உள்ளது. நாம் சென்றபோது சுறுசுறுப்பாகக் காய்களைப் பறித்துக்கொண்டிருந்த பாலகிருஷ்ணன் மிகுந்த மகிழ்ச்சியோடு நம்மை வரவேற்றார். முருங்கைக்காய் விற்பனைக்கு அனுப்புதல் ‘‘சாத்தான்குளம் சுத்து வட்டாரப் பகுதிகள்ல நல்ல வளமான செம்மண் நிலம் அதிகம். இங்கவுள்ள விவசாயிங்கள்ல பெரும்பாலானவங்க, நீண்ட காலமா முருங்கை சாகுபடி செஞ்சிக்கிட்டு வர்றாங்க. இந்த மண் ...

மிளகு, காபி, வாழை, கிராம்பு, காய்கறிகள்... சிங்கப்பூர் to கொல்லிமலை

Image
 நாமக்கல் மாவட்டத்தில் அமைந்திருக்கும் கொல்லிமலை தமிழகத்தின் புகழ்பெற்ற மலை வாசஸ்தலம். மலை அடிவாரமான காரவள்ளி யில் இருந்து மேல் நோக்கி 70 கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்து சென்றால், கொல்லி மலையை அடையலாம். இங்குள்ள சோளக்காடு பேருந்து நிலையத்திலிருந்து, படகு இல்லம் வழியே 3 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள வாசலூர் பட்டி கிராமத்தில் அமைந்திருக்கிறது இந்தத் தம்பதியின் தோட்டம். விவசாயத்தில் எவ்வித முன் அனுபவமும் இல்லாத இவர்கள், அதுவும் மலைப்பிரதேசத்தில் தங்களுடைய கடும் உழைப் பாலும், தன்னம்பிக்கை யாலும் இங்கு வெற்றிகர மாக விவசாயம் செய்து வருகிறார்கள். இவர் களுடைய தோட்டத்தில் மிளகு, காபி, வாழை, கிராம்பு, பழ மரங்கள், காய்கறிகள் எனப் பலவித மான பயிர்கள் செழிப்பாக விளைந்துகொண்டிருக்கின்றன. ஒரு பகல்பொழுதில் இத்தோட்டத்துக்குச் சென்றோம். இவர்களுடைய வீடும் இங்கு தான் அமைந்துள்ளது. விளைபொருள்களைப் பேக்கிங் செய்து வெளியூர்களுக்கு அனுப்பும் பணியில் மும்மூரமாக ஈடுபட்டிருந்த இவர்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு நம்மை வரவேற்றனர். தங்களுடைய வாழ்க்கை பயணம் குறித்து முன்னுரை கொடுத்தார் புனிதா, “என்னோட ஊர் கோயம்புத்தூர். இவர்...

ஒரு ஏக்கர்... ரூ.2.45 லட்சம்... செழிப்பான வருமானம் தரும் செம்பருத்தி!

Image
  விருதுநகரைச் சேர்ந்த வனவியல் பட்டதாரியான சாந்தி சுப்புலெட்சுமி இயற்கை முறையில் செம்பருத்தி சாகுபடி செய்து வருகிறார். இதில் கிடைக்கும் பூக்களை, உலர் பூக்களாக மதிப்புக்கூட்டி விற்பனை செய்வதன் மூலம் நிறைவான லாபம் பார்த்து வருகிறார். விருதுநகர் மாவட்டம் சாத்தூரிலிருந்து 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது நள்ளி என்ற கிராமம். இக்கிராமத்தின் தொடக்கத்திலேயே செழிப்பாகக் காட்சி அளித்துக்கொண்டிருக்கிறது, சாந்தி சுப்புலெட்சுமியின் செம்பருத்தித் தோட்டம். எங்க குடும்பத்துக்கு நாலு ஏக்கர் நிலம் இருக்கு. ஒரு ஏக்கர் பரப்புல செம்பருத்தி பயிர் பண்ணினேன். கடந்த 6 மாசமா, தொடர்ச்சியா வருமானம் கிடைச்சுக்கிட்டு இருக்கு. மீதி மூணு ஏக்கர்ல மருதாணி, துளசி, ஆடாதொடை சாகுபடி செய்ய நிலத்தைத் தயார் படுத்திக்கிட்டு இருக்கேன்” என்று சொன்ன சாந்தி சுப்புலெட்சுமி, செம்பருத்தி சாகுபடி மூலம் கிடைக்கும் வருமானம் குறித்து விவரித்தார். “ஒரு ஏக்கர் பரப்புல மொத்தம் 1,800 செம்பருத்தி செடிகள் இருக்கு. கடந்த 6 மாசமா பூ பறிச்சுகிட்டு இருக்கேன். இதுவரைக்கும் 1,700 கிலோ பூ கிடைச்சிருக்கு. அதை நிழல்ல உலர வச்சி பதப்படுத்தியது மூலமா, 3...