Posts

கடவுளை கண்டவர் மற்றவர்களுக்கு காண்பிக்க முடியுமா - ராமகிருஷ்ண பரமஹம்சர்

 *ஒரு நாள் ராமகிருஷ்ண பரமஹம்சரைப் பார்க்க டாக்டர் ஒருவர் வந்தார்...!!* வந்தவர் கேட்டார்: ....    *“ஐயா நீங்கள் காளியைப் பார்த்திருக்கிறீர்களா?”* *பரமஹம்ஸர் சட்டென்று பதில் சொன்னார்:* *“ஓ....!*   *பார்த்திருக்கிறேனே...!!* *காலையில் கூட தாயுடன் பேசினேன்”* *“நீங்கள் பார்த்தது உண்மை என்றால் எனக்குக் காட்டுங்கள்”*  என்று டாக்டர் பதிலுக்குக் கேட்டவுடன் ,     *சுற்றி அமர்ந்திருந்தவர்கள் பரமஹம்ஸர் என்ன பதில் சொல்லப் போகிறார் என்று,*  ஆவலோடு காத்திருந்தனர். *பரமஹம்சர் சிறிதும் அலட்டிக் கொள்ளாமல் கேள்வி எழுப்பிய டாக்டரிடம்,*       *“நீங்கள் என்ன வேலை பார்க்கிறீர்கள்?”*  என்று கேட்டார்.....!! அவர் சொன்னார்:       *“நான் டாக்டர் வேலை செய்கிறேன்”...!!* *“டாக்டர் தொழில் உங்களுக்கு நன்றாகத் தெரியும் தானே...?”* *“நன்றாகத் தெரியும்”* “அப்படியானால்,     *என்னை ஒரு டாக்டர் ஆக்குங்கள்”* *“அது எப்படி....?* *நீங்கள் டாக்டருக்குப் படிக்க வேண்டுமே....?”* *“டாக்டராவதற்கே ஒரு படிப்பு வேண்டும் என்றால்,* *கடவுளைப் பார்க்க ஒரு...

பயமாக இருக்கிறது.... இன்றைய தலைமுறையினரின் போக்கு.....

பிடித்த பேச்சாளர் - ஒரு அரசியல்வாதி  பிடித்த இயக்குனர் - பல படங்களில் திருடி படமெடுக்கும் ஒரு இளம்  இயக்குனர் பிடித்த இசையமைப்பாளர் - பத்து நாள்களில் மறந்து போகும் பாடல்களுக்கு சொந்தக்காரர்  பிடித்த சாப்பாடு - புரோட்டா& நூடுல்ஸ் பிடித்த விளையாட்டு - பப்ஜி, ப்ளூ வேல் பிடித்த வரலாற்றுப் புத்தகம் - வாட்ஸ்அப் பிடித்த சொல் - மொக்கை பிடித்த ஒரே பொருள் - செல்ஃபோன் படிக்காமல் பாஸ் ஆக வேண்டும்.கஷ்டப்படாமல் வேலை கிடைக்க வேண்டும்... யாருக்குமே மரியாதை தரக்கூடாது.. தனக்கு தெரியாத விஷயம் எதுவுமே இல்லை என்ற மனநிலை... எல்லாமே உடனே கிடைக்க வேண்டும்..  காசுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம்... விழுமியங்களே (சுயசிந்தனை, பண்பாடு) தேவையில்லை,  சாதி, மதம்தான் எல்லாம்... சினிமா, கிரிக்கெட், செல்ஃபோன் இவைதான் உலகம்.. பெண்கள் மீது மரியாதையே இல்லை.. ஆசிரியர்கள், மூத்தோர்கள் எல்லாம் புழு பூச்சி மாதிரி... வரலாறு, பண்பாடு, கலை, இலக்கியம், அரசியல் குறித்த அடிப்படை புரிதல்கள் கூட இல்லை‌.. ஒரு பேங்க் செலான் கூட நிரப்பத் தெரியாது.. ஒரு நாளில் ஒரு வரி கூட வாசிப்பதில்லை.. தப்பில்லாமல் தமிழோ...

பணம் மட்டுமே தேவைகளை பூர்த்தி செய்கிறது என நினைப்பவர்களுக்கு...

லெபனானின் பெரும் பணக்காரர்களில் ஒருவர் எமில் புஸ்தானி. பெய்ரூத்தில் தமக்காக ஓர் அழகிய கல்லறையை பார்த்துப் பார்த்துக் கட்டினார். சொந்தமாக ஒரு ஜெட் விமானம் உள்ளது. ஒருநாள் அது கடலில் விழுந்தது. அவரது உடலைக் கண்டுபிட்டிக்க மில்லியன் கணக்கில் டாலர்கள் செலவு செய்யப்பட்டன. இறுதியில் விமானம் மட்டுமே கிடைத்தது. அவர் கட்டி வைத்த கல்லறையில் அடக்கம் செய்ய கடைசிவரை அந்த உடல் கிடைக்கவே இல்லை. பிரிட்டனைச் சார்ந்த பெரும் பணக்கார யூதர் ரூட் சைல்ட். அவரிடமிருந்த அபரிதமான செல்வச் செழிப்பால் சிலபோது பிரிட்டன் அரசுக்கே கடன் கொடுப்பாராம். ரொக்கமாக இருக்கும் செல்வத்தை சேமித்து வைக்க பாதுகாப்பு அம்சங்களுடன் தனியாக ஓர் அறையைக் கட்டினார். ஒருமுறை அங்கு நுழைந்தவர் அறியாமல் கருவூலக் கதவை அடைத்துவிட்டார். அவ்வளவுதான்! கடைசிவரை கதவு திறக்கவே இல்லை. சப்தமிட்டார்.. கத்தினார்.. யாருக்கும் கேட்கவில்லை. காரணம், அவர் தங்குவது வீடல்ல.. அரண்மனை. பெரும்பாலும் அரண்மனையிலிருந்து பலநாள் உல்லாசப் பயணம் சென்றுவிடுவார். அன்றும் அவ்வாறே சென்றிருப்பதாக குடும்பத்தார் நினைத்தனர். பசியாலும் தாகத்தாலும் கத்திக் கத்தி கூச்சலிட்டு பணக்க...

ஒரு தாயாக உங்களின் மகளுக்கு, பெண்களில் பொருளாதார தன்னிறைவு (Financial Autonomy) மற்றும் அதன் தேவை பற்றி என்னென்ன கற்று கொடுப்பீர்கள்?

Image
 சுருக்கமாக சொல்வதென்றால், பெண்களுக்கு பொருளாதார தன்னிறைவின் அவசியம் சுய பாதுகாப்பு. நேர்மையான வாழ்க்கை. குடும்பத்தில் அங்கீகாரம். சமுதாயத்தில் மரியாதை. கல்வியும், வேலைக்குச் செல்வதும், பொருளீட்டுவதுமே பொருளாதார தன்னிறைவு பெற வழியென்றும், தன்னுடைய கிரெடிட் கார்டில் விருப்பப்படி துணிமணிகள், பியூட்டி பார்லரில், ஹோட்டலில் செலவு செய்வதுமே பொருளாதார தன்னிறைவு, சுதந்திரம் என்று நினைத்தால்.… என்னுடைய பதில் திருப்தியைத் தராது. நானறிந்த வரை இந்தியாவில் பெண்களின் பொருளாதார நிலை. எனக்கு பொருளாதார தன்னிறைவு அறிமுகமான விதம். என் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுத்த விதம். நம் பெண்களின் பொருளாதார நிலை. சேத்த பணத்த சிக்கனமா செலவு பண்ண பக்குவமா அம்மா கையில கொடுத்து போடு அவங்க ஆற நூறு ஆக்குவாங்க என்று மருதகாசி மட்டுமா, அதற்கு முன்னே சங்கப்பாடல்களில் புலவர் பெருஞ்சித்திரனார் நின் நயந்து உறைநர்க்கும், .... ................என்னோடும் சூழாது ......என் மனை கிழவோயே...... என்று பாட்டினூடே சொல்லி விட்டார். நம் பெண்கள் பொருளாதார தன்னிறைவுவும், சமத்துவமும், சுதந்திரமும், அதிகாரமும் இயல்பாகவே பெற்றவர்கள். மேற்கத்திய ...

அணுகுமுறை என்றால் என்ன?

 ஒரு விளம்பரம் குறும்படம். பத்து செகண்ட்தான். ஒரு பெண் மாடல் மேடையில் நடந்து வருகிறாள். மிகவும் அழகு. பொம்மை போல. அவள் தான் வெற்றி பெறுவாள் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள். துரதிருஷ்டவசமாக,பாதி தூரம் கம்பீரமாக வந்து கொண்டிருக்கும் போது அவள் ஒரு செருப்பின் ஹை ஹீல் உடைந்து தடுமாறி கீழே விழுந்து விடுகிறாள். மொத்த பார்வையாளர்களும் உச்சு கொட்டி பரிதாபப்பட்டார்கள். அந்த பெண் கண்ணில் நீர் தளும்பியது. ஒரே ஒரு செகண்ட்தான். தன் கையை தானே மகிழ்ச்சியாக தட்டிக் கொண்டாள்,, மெல்ல எழுந்தாள். மீதமுள்ள செருப்பையும் தூக்கி எறிந்து விட்டு, கம்பீரமாக வெறும் காலுடன் நடந்து மீதி தூரத்தையும் கடந்தாள். பார்வையாளர்கள் அதிசயித்தனர் .அந்தப் பெண்ணுக்குத்தான் முதல் பரிசு. இது தான் ஒரு பிரச்னை வரும் போது நம் அணுகுமுறை. கீழே விழுந்து விட்டோம். அவமானத்தால் கூனி குறுகி, யாராவது தூக்கி விட மாட்டார்களா என்றில்லாமல் துணிச்சலாக இலக்கு நோக்கி பயணித்தாலே விடாமுயற்சி. சச்சின் டெண்டுல்கர் வாழ்வில் நடந்தது. அப்பா இறந்து இரண்டு நாள்தான். அஸ்தி கூட கரைக்கவில்லை. ஆட வேண்டிய நிர்ப்பந்தம். சென்றவர் சதம் அடித்தார். செஞ்சுரி அட...

வியாபார நுணுக்கம் என்றால் என்ன?

 16ம் நூற்றாண்டு வாக்கில் - பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணத்திலிருந்து ஒரு பாடல் அன்றைய வணிகர்களின் வியாபார மேலாண்மை குறித்து மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது. 'புல்லிஓர் பண்டம் கொள்வார் வினவின் அப்பொருள் தம் பக்கல்,  இல் எனின் இனமாய் உள்ள பொருள் உரைத்து எதிர் மறுத்தும்;  அல்லது அப் பொருள் உண்டு என்னின், விலை சுட்டி அறுத்து நேர்ந்தும் சொல்லினும் இலாபம் கொள்வார் - தொன்மரபு இருக்கை சொல்வாம்' மளிகை கடைக்கு வாடிக்கையாளர் ஒருவர் வருகிறார், ‘பச்சரிசி இருக்கிறதா?’ என கடைக்காரரிடம் வினவுகிறார். வாடிக்கையாளர் கேட்ட அரிசி கடையில் இல்லாத நிலையிலும் கூட கடைக்காரர் ‘இல்லை’ என்று சொல்லமாட்டாராம். மாறாக, ‘புழுங்கல் தான் உள்ளது’ என்று சொல்லி விற்பனையைத் தொடர்வாராம். மேலும் ‘பச்சரிசி இல்லை’ என்று எதிர்மறையாகச் சொல்வதால் நேரவிரயம் தவிர இலாபம் என்று எதுவுமில்லையென்பதால் ‘புழுங்கல் உள்ளது’ என நேர்மறையாகச் சொல்லி அவரிடம் அதனை விற்க முயல்வாராம். அதே போல அவர் கேட்ட அரிசியே இருந்தால் கூட - ‘இருக்கிறது’ எனச் சொல்லமாட்டாராம், மாறாக ‘கிலோ இத்தனை ரூபாய்’ என்று உரைப்பாராம். ‘பச்சரிசி இருக்...

Health Tips உடல் நலம்: தயிரின் மகத்துவம்!

  தினமும் கொஞ்சம் தயிர் சாப்பிட்டு வந்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா? தயிரை தினமும் உணவின் ஒரு அங்கமாக சேர்த்துக்கொள்வதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்க பெறுகின்றது. 💥 தயிரில் வாழும் பாக்டீரியாக்கள் குடலுக்கு நல்லது. இதனால் 70% நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்துவிடும். 💥 தயிரில் விட்டமின் B-12, கால்சியம் , பாஸ்பரஸ் , மெக்னீசியம் மற்றும் மினரல்கள் உள்ளன. இவை உடலுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துகளாகும். 💥 தயிரில் நிறைவாக உள்ள கால்சியம் சத்து எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு உதவும். மூட்டு வலி, எலும்பு தேய்மானம் போன்ற பிரச்னை இருப்போர் தினமும் ஒரு பவுல் தயிர் சாப்பிடலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். 💥 தயிரில் இயற்கையான முறையில் ப்ரோபயோடிக்ஸ் என்னும் அமிலம் உள்ளது. இது தயிரில் வாழும் பாக்டீரியாக்களினால் சுரப்பதால் குடலுக்கு நல்லது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். குடல் ஆரோக்கியமா இருந்தாலே 70% நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்துவிடும். 💥 தயிரில் புரோட்டீன் அதிகம் உள்ளதால் தோல் மற்றும் தலை முடி வளர்ச்சிக்கு நல்லது. தசைகள் இறுக்கமாகவும் தயிர் உதவும். 💥 அசைவ உணவுக்க...