Posts
இளநீர் கூட்டில் செடி வளர்ப்பு
- Get link
- X
- Other Apps
இளநீர் கூட்டில் செடி வளர்ப்பு. வளர்ந்த பிறகு குழி தோண்டி அப்படியே புதைச்சிடலாம்! பிளாஸ்டிக் இல்லாமல் யோசிப்போம்! வேர்கள் வெளிவர சிறிய துளைகள் இட்டு மரக்கன்றுகள் வளர்ந்த பிறகு அப்படியே நட்டுவிடலாம். பலா(Atrocarpus heterophyllus) மழைக்கவர்ச்சிக்காக மகிழம்(Mimusops elengi) தலைவலி போக்கும் காற்றுக்காக.. துருக்க வேம்பு(Melia azadirachta) மருத்துவ குணத்திற்காக..
Plan following trees around our homes
- Get link
- X
- Other Apps
ஒவ்வொரு வீட்டை சுற்றியும் பத்து வகை மரங்கள் இருக்க வேண்டும். வீட்டுக்கு முன் ஒரு வேப்பமரம் இருக்கவேண்டும், பக்கத்தில் ஒரு முருங்கை மரம் இருக்க வேண்டும், ஒரு பப்பாளி மரம் இருக்க வேண்டும், குளிக்கும் தண்ணீர் போகும் இடத்தில் வாழை மரம் இருக்க வேண்டும், பாத்திரங்கள் கழுவும் இடத்தில் தென்னை மரம் இருக்க வேண்டும், ஒரு எலுமிச்சை மரம் இருக்க வேண்டும்., அதன் நிழலில் ஒரு கறுவேப்பிலை செடி இருக்க வேண்டும், ஒரு நெல்லிச் செடி இருக்க வேண்டும். வேலியில் நான்கு இடத்தில் சீதா மரம் இருக்க வேண்டும். இடம் இருந்தால் ஒரு பலா மரம் இருக்க வேண்டும். ஒரு மா மரம் வைக்க வேண்டும். இப்படி இருந்தால் ஒருவர்கூட பசியுடன் தூங்க மாட்டார்கள். - நம்மாழ்வார்.
EFFECTS OF NEGATIVE THOUGHTS ON YOUR MIND & BODY
- Get link
- X
- Other Apps
The moment negative thought enters in your mind, 1 - Your body releases acid. 2 - Your aura decreases. 3 - Your resistance power decreases. 4 - Your system's functions are affected. 5 - Your heart beat increases. 6 - Your blood pressure increases. 7 - Unwanted hormones are released. With that negative thought you may or may not harm others...but you definitely harm yourself. Think positive remain healthy. ENJOY....Seven Amazing Benefits of Clapping : 👏“Clapping” a Simple Striking of Hands but it’s much more than you Think. 👏Normally People clap to Appreciate others for their Good works and achievements or when they are in mood of Joy. 👏People also Clap while Singing songs, Bhajans, and Prayers at Holy places. 👏It is Scientifically proved that Clapping is very effective Exercise to cure many Human Diseases. 👏Clapping activates the Receptors in the Palms and cause activation of the large area of the Brain which leads the improvement in Health. ...
ஜெஃப் பேஜோஸ்... உலகின் நம்பர் 1 பிக் பாஸ்!
- Get link
- X
- Other Apps
உ லகின் நம்பர்1 பணக்காரராக இத்தனை நாளும் இருந்தார் மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் பில் கேட்ஸ். அந்த இடத்துக்கு இப்போது வந்திருக்கிறார் அமேசானின் ஜெஃப் பேஜோஸ். நியூயார்க் பங்குச் சந்தையில் அமேசான் பங்கின் விலை கணிசமாக உயர்ந்ததால், பில்கேட்ஸைவிட பெரிய பணக்காரராக மாறியிருக்கிறார் பேஜோஸ். அமேசானின் பங்கு விலை 1,065.92 டாலரை எட்டியது. இதனால் பேஜோஸின் நிகர சொத்து மதிப்பு 90.9 பில்லியன் டாலராக உயர்ந்தது. ஆனால், பில்கேட்ஸின் நிகர சொத்து மதிப்பு 90.7 பில்லியன் டாலர் மட்டுமே. நம்பர் 1 இடத்தைத் தொடர்ந்து தக்க வச்சுக்குவீங்களா பிக்பாஸ்?
ஐ.டி துறையில் கிராமத்துப் பெண்கள்... - வெற்றிவாசல் திறக்க வழிகள்!
- Get link
- X
- Other Apps
உன்னால் முடியும்! ஆர். ஜெயலெட்சுமி கி ராமத்துப் பெண்களுக்குக் கல்வி தரும் முன்னேற்றம்... கண்ணுக்கும் கருத்துக்கும் பேரழகு! குறிப்பாக, ஐ.டி துறைப் பணிகளில் சேரும் சிறுநகரங்கள் மற்றும் கிராமப்புறத்தைச் சேர்ந்த பெண்கள், குறுகிய காலத்திலேயே கைநிறைய சம்பளத்துடன் ஊருக்குள் தங்கள் குடும்பங்களை உயர்த்திக்காட்டும் காட்சிகள் இப்போது காணக்கிடைக்கின்றன. ஆனாலும், மெட்ரோபாலிட்டன் நகரத்து ஹைடெக் அலுவல் சூழல், இந்தப் பெண்களுக்குத் தரும் தயக்கங்களும் தடைகளும் பிரச்னைகளும் நிறைய. கலாசார அதிர்ச்சி, ஆடை மற்றும் ஆங்கில அறிவு விஷயத்தில் கொள்ளும் தாழ்வுமனப்பான்மை, சக ஊழியர்களுடன் இயல்பாகப் பழகுவதில் உள்ள இடைவெளி... ஐ.டி பணியில் இருக்கும் கிராமத்துப் பெண்களின் பிரதானப் பிரச்னைகள் இவை. இந்தப் பிரச்னைகளைக் களையும் வழி சொல்கிறார்கள், அனுபவசாலிகளும் துறைசார்ந்த நிபுணர்களும். ``திறமையை நிரூபிச்சுட்டா அங்கீகாரம் நிச்சயம்!’’ ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த முத்துராஜி, ``இதுவரை பிரபலமான மூன்று ஐ.டி நிறுவனங்கள்ல வேலைபார்த்திருக்கேன். இப்போது குழந்தைக்காகக் கொ...
டிஸ்னியின் இந்த அசத்தல் அனிமேஷன் படங்களைப் பார்த்திருக்கிறீர்களா?
- Get link
- X
- Other Apps
அது என்னவென்று புரியவில்லை இந்த செல்ஃபி யுகத்திலும் கார்ட்டூன்கள், அனிமேஷன் படங்கள் என்றால் குழந்தைகளுக்கு அவ்வளவு பிரியம். ஃப்ரோஸன், மினியன்ஸ், ஜூடொபியா, பைண்டிங் நீமோ போன்ற அனிமேஷன் படங்களை பார்த்துவளர்ந்த இன்றைய சுட்டிஸ் தவறவிட்டிருக்க வாய்ப்புள்ள டிஸ்னியின் சில பழைய கிளாசிக் அனிமேஷன் படங்களின் லிஸ்ட் இதோ. ஸ்நோ வொய்ட் அண்ட் தி செவன் டுவார்ஃப்ஸ் (1937) இன்றும் மிகவும் பிரபலமான கார்ட்டூன் கேரக்டர்களில் ஒன்றாகப் பார்க்கப்படும் கேரக்டர் ஸ்நோ வொய்ட். ஸ்நோ வொய்ட்டை வளர்க்கும் மோசமான மாற்றாந்தாய் ராணி, ஸ்நோ வொய்ட் தனது அழகை மிஞ்சிவிடுவளோ என எண்ணி அடிமையாக வைத்திருக்கிறாள். ஒரு நாள் அவளது மாயக்கண்ணாடி, ‘ஸ்நோ வொய்ட் தான் இந்த ராஜ்ஜியத்தின் மிக அழகிய பெண்’ என ராணியிடம் கூறுகிறது. அதனால் ஸ்நோ வொய்ட்டைக் கொல்ல உத்தரவிடுவாள். அங்கிருந்து தப்பி காட்டில் உள்ள ஏழு குள்ள மனிதர்களின் அடைகலத்தில் வாழும் ஸ்நோ வொய்ட் எப்படி ராணியின் சூழ்ச்சிகளை வென்றாள் என்பதே இப்படத்தின் கதை. இது தான் டிஸ்னியின் முதல் முழுநீள அனிமேஷன் திரைப...