பணம்தான் எல்லாமா? - மெக்ஸிகன் மீனவன் கதை
நீங்கள் மெக்ஸிகன் மீனவன் கதையை அறிந்துள்ளீரா?
ஒரு அமெரிக்க முதலீட்டு வங்கி அதிகாரி மெக்ஸிகோவில் உள்ள சிறிய கடற்கரை கிராமத்திற்கு சென்றார். அப்போது ஒரு மீனவர் சிறிய படகு முழுக்க சூரை (Tuna fish ) மீன்களுடன் கடலில் இருந்து திரும்புவதை பார்த்தார்.
அந்த மீன்களின் தரத்தை கண்டு வியந்த அந்த அமெரிக்கர், இதை பிடிக்க எவ்வளவு நேரம் ஆனது என கேட்டார்.
அதற்கு அந்த மீனவர், “சிறிது நேரம் தான் ஆனது" என கூறினார்.
நீங்கள் ஏன் கடலில் அதிக நேரம் செலவிட்டு அதிக மீன்களை பிடிக்கலாமே? என வினவினார்.
அதற்கு அந்த மீனவன், அவன் குடும்பத்தை காப்பாற்ற இதுவே போதுமானது என்றான்.
“ அப்படியானால் மற்ற நேரம் என்ன செய்கிறீர்கள்” என அமெரிக்கர் கேட்டார்.
மீனவனோ “நான் காலை தாமதமாக எழுவேன். சிறிது நேரம் மீன் பிடிப்பேன், குழந்தைகளுடன் விளையாடுவேன், மதியத்தில் மனைவியுடன் குட்டி தூக்கம், பிறகு மாலை கிராமத்தில் சற்று மது அருந்துவேன். சில நேரங்களில் நண்பர்களுடன் guitar வாசிப்பேன். எனது நாள் முழுக்க மும்முரமாக இருக்கும்”
அமெரிக்கர் ஒரு ஆலோசானை கூறினார்
“ நான் ஹார்வர்ட் இல் MBA கற்றேன். உனக்கு நான் உதவ நினைக்கிறன். நீங்கள் செய்ய வேண்டியது:
அதிக நேரம் கடலில் மீன் பிடித்து, அப்பணத்தை வைத்து இன்னும் பெரிய படகை வாங்க வேண்டும்.
பெரிய படகில் மீன் பிடித்து, மேலும் பல பெரிய படகுகள் வாங்குங்கள்.
இவ்வழியே, நீங்கள் பல படகுகளுள்ள பெரிய மீனவர் ஆவீர்.
பிறகு, சிறிய வியாபாரிகளுக்கு விற்பதற்கு பதிலாக, நேரடியாக, சந்தைக்கு விற்கலாம்.
நீங்களே மீனின் விலை, அளவு, பகிர்மானம் என அனைத்தையும் இயக்க முடியும்.
நீங்க இச்சிறிய கிராமத்தை விட்டு, மெக்ஸிகோ சிட்டி பிறகு லாஸ் ஏஞ்சல்ஸ்(LA) , நியூ யார்க் என அடுத்தடுத்து மேலே செல்லலாம்.”
“இதற்கு எவ்வளவு நாட்கள் ஆகும்" என மீனவன் கேட்டான்.
அமெரிக்கனோ “ 15–20 வருடங்கள்" என்றான்.
“பிறகு" என மீனவன் கேட்க
அமெரிக்கன் சிரித்தவாறு “அப்போது நேரம் பார்த்து உனது நிறுவனத்தை, பங்கு சந்தையில் IPO அறிவித்து, நிறுவன பங்குகளை பொது மக்களுக்கு விற்று நீ பெரும் பணக்காரன் ஆகலாம். பல கோடிகள் சம்பாதிக்கலாம்!”
“கோடிகள் சம்பாதித்து? பிறகு” என மீனவன் கேட்க
அதற்கு அமெரிக்கன் சொன்னான், “நீ பணி ஓய்வு பெற்று, உன் ஊருக்கு திரும்பி, காலை தாமதமாக எழுந்து, சிறிது மீன் பிடித்து, உனது பேர பிள்ளைகளுடன் விளையாடி, மனைவியோடு குட்டி தூக்கம், மாலையில் மது அருந்தி, நண்பர்களுடன் guitar வாசிக்கலாம்.”
பணம் முக்கியமே. ஆனால் அதுவே எல்லாமா?
இல்லை .
Comments
Post a Comment