பணம் இருக்கிறது என காட்டிக்கொள்ள சிலர் செய்யும் வேடிக்கையான விஷயம் என்ன?

தங்க சங்கிலியை வெளியே தெரியும்படி இரண்டு மூன்று பட்டன்களை அவுத்துவிடுவது..


ஒரே விரலில் 2 அல்லது 3 மோதிரம் மாட்டிக்கொள்ளுவது,, ( அதில் ஒன்று பாம்பு வடிவில் ).


வெள்ளை கதர் சட்டையில் 2000, 500 ரூபாய் தெரியும்படி வைப்பது..


குடும்பத்தோடு வெளியே செல்லும் போது காலையில் பெரிய ஹோட்டல்களில் சாப்பிடுவது அதை அக்கம் பக்கத்தினரிடம் பந்தாவா சொல்லி கொள்ளுவது..
எதாவுது வெளியூர் சென்றால் அங்கு உள்ள ஹோட்டலில் வைக்கப்படும் சோப்பு, ஷாம்பு, லாண்டரி பாக், சீப்பு இவையெல்லாம் ஆட்டைய போட்டு கொண்டு வந்து மற்றவர்களிடம் பெருமையா இந்த ஹோட்டலில் தங்கினோம் என்று இவர்களே வழிய வந்து கூறுவது.


தினமும் கறி சோறு இல்லாமல் சாப்பாடு இறங்ககாததை போல காட்டி கொள்ளுவது.


தமது சக்திகும் மீறி நம்ம சொந்தக்காரங்க வாய் அடைத்து போகும்படி அடுத்த வீட்டை பார்த்து பெரிய பள்ளிக்கூடத்தில் குழந்தைகளை சேர்ப்பது. ( பிறகு வருத்தபடுவது ).


வாங்கும் சம்பளதை விட வெட்டி பந்தா காட்டுவதற்கு கிரெடிட் கார்டு, ஹோம் loan, பர்சனல் லோன் இப்படி எல்லா லோன்யும் வாங்கிட்டு வெளியேயும் சொல்ல முடியாமல் மாட்டி கொண்டு அவஸ்தை படுவது.


எனக்கு அவனை தெரியும் இவனை தெரியும் என்று வாயிலே வடை சுடுவது..
பிராண்டட் ஆடைகளை போல டூப்ளிகேட் ஆடைகள் போட்டு கொண்டு பிராண்ட் வெளியே தெரியும்படி சுற்றுவது.


சோத்துக்கு வழியில்லைநாலும் கடன் வாங்கியாவுது வெட்டி பந்தா காட்டுவது.
வீட்டுக்கு காசு குடுக்காமல் தான் மட்டும் பத்து விரல்களில் மோதிரம் மாட்டி கொண்டு சுற்றுவது. இதுல வெள்ளை நிற செருப்பு, ஷு வேற !!!


அடுத்த மாதம் வீடு வாங்க போறேன், கார் வாங்க போறேன்னு சொந்தம் பந்தம் கிட்ட எல்லாம் சீன் காட்டுவது.


ஒரு பணக்கார பெண்ணை காதலித்து கையில் வைத்து கொண்டு பந்தாவுக்காக சக்திக்கு மீறி குடும்ப சூழ்நிலை புரிந்து கொள்ளாமல் பல லச்சங்களில் பைக் வாங்குவது..


மிக பெரிய நிறுவனத்தில் பெரிய போஸ்ட்,, லச்சங்களில் சம்பளம் என்று வாய் கூசாம போய் சொல்லுவது.


வீட்ல பழைய சோறு சாப்பிட்டு வெளியே பிரியாணி சாப்பிட்டேன் என்றும்,, அடுத்தவன் காசில் சரக்கு அடிச்சா விலை உயர்ந்த சரக்கு அடிச்சி தான் பழக்கம் போல காட்டி கொள்ளுவது..


சேற்றில் இது வரை வாழ்நாளில் நடந்ததே கிடையாது போல காட்டி கொள்ளுவது.


குறைந்த தொலைவு இருந்தாலும் கால் டாக்ஸி, ஆட்டோவில் தான் பயணம் செய்வது… பிறகு வரும்போது பஸ்சில் வருவது…


ரேஷன் கடை, அரசு மருத்துமனை, அரசு பேருந்து, இதில் எல்லாம் போகாத மாதிரியே பொய் சொல்லி ஊரை ஏமாற்றுவது.


விமானத்தில் பயணித்தால் அந்த விமான பாக்ஏஜ் டேக் ( Baggage tag ) ஒரு வருடம் ஆனாலும் கழட்ட மாட்டார்கள். அந்த டேக் வைத்த suitcase தைத்தே உள்ளூர்ளிலும் சுற்றி கொண்டிருபார்கள்.


ஹார்லிக்ஸ், பூஸ்ட், பால் இப்படி குடித்து தான் பழக்கம் என்றும்,, டீ, காபி இதெல்லாம் வாழ்நாளில் குடித்ததே இல்லாத மாதிரி காட்டி கொள்ளுவது.


5000/- ரூபாய் வாடகை வீட்டில் இருந்து கொண்டு 50, 000/- ரூபாய்க்கு செல்போன் வைத்து கொள்ளுவது. ( குடும்ப சூழ்நிலை அறியாமல் ).


ஜாக்கி ( Jockey ) உள்ளாடைகளை மட்டும் தான் போடுவார்கள் மற்ற இந்திய பிராண்ட் அவர்களுக்கு பிடிக்காதாம்.

Comments

Popular posts from this blog

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ

Nothing can compete with The knowledge gained from poor, confidence

EFFECTS OF NEGATIVE THOUGHTS ON YOUR MIND & BODY