பணக்காரர் ஆக வேண்டுமென்றால் நான் செய்யக் கூடாதது என்ன?
இன்றைய காலக்கட்டத்தில் கோடிகள் எல்லாம் ரஜினி ஸ்டைலில் சொல்ல வேண்டும் என்றால் ஜுஜுபி மேட்டர். 30 அல்லது 32 வயதுக்குள் ஒருவர் கோடீஸ்வரராக முடியுமா? என் அனுபவத்தில் முடியும் என்பதே பதில். இந்த உலகில் பணத்துக்கு மட்டும் எப்போதுமே பற்றாக்குறை வருவதில்லை. பணத்தைப் பற்றிய நம் எண்ணங்களுக்குத்தான் பற்றாக்குறை.
சரி கோடீஸ்வரராக என்ன செய்யவேண்டும் என்பதுக்கு பதில் என்ன செயக்கூடாது என்பதை இங்கே பார்ப்போம்.
சோம்பேறியாக இருக்கக்கூடாது: பணக்காரர் ஆவதற்கு , கடும்உழைப்பு அவசியம் உங்கள் தொழிலில் மிகவும் விருப்பத்துடன் கடின உழைப்பை செலுத்துவேண்டும். அதிர்ஷ்டத்தினால் பணக்காரர் ஆவது முடியாது என்பதை அறிந்திருக்கவேண்டும். நினைவில் கொள்ளுங்கள் நாளை என்றுமே வருவதில்லை.
கடனுக்கு ‘நோ’: உங்கள் வளர்ச்சியில் 'கடன்' என்ற வார்த்தையே இருக்கக் கூடாது. அது உங்களுக்கு மேலும் சம்பாத்தியத்தைப் பெற்றுத் தராது; வட்டித் தொகையை அதிகரித்து உங்களின் சேமிப்பையும் வளர்ச்சியையும் பதம் பார்த்து விடும். உங்கள் லட்சியத்தை அடைந்த பிறகு, கடன் வாங்கி அதை சுழற்சி செய்வது வேறு விஷயம். கடனுக்கு "நோ" என்றால் கடன் கொடுப்பதையும் சேர்த்து தான். நினைவில் கொள்க ஒருவருக்கு 100ரூ கடன் கொடுத்தால் உங்களுக்கு வருடம் 70 பைசா நட்டம், அந்த 100ரூ உங்களை வங்கியில் வைப்பு தொகையாக இருந்திருந்தால் அது ஒரு வருடத்தின் முடிவில் 70 பைசா கொடுத்திருக்கும். நீங்கள் பணக்காரர் ஆவதற்கு ஒவ்வொரு பைசாவும் முக்கியம்.
ஏழையாக இருக்க வேண்டாம்: எப்போதும் ஏழையாகவோ அல்லது போதும் என்ற மனத்துடனோ இருக்கக் கூடாது. விரைவில் பணக்காரனாக வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் மேலோங்கி இருக்க வேண்டும்.
பணத்தை வெறுக்காதீர்கள்: கோடீஸ்வரன் ஆக முதல் வழி, உங்கள் சம்பாத்தியத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பெருக்கிக் கொள்ள வேண்டும். பணத்துக்குப் பின்னால் போகக் கூடாது என்று சொல்வார்கள். இதை நம்பாதீர்கள். கண்டிப்பாகப் பணத்தை தேடி போங்கள். கவனமாகப் பணம் சேர்ப்பதற்கான வழிகளைத் தேடுங்கள். தேடல் உள்ள இடத்தில வெற்றி நிச்சயம்!
திருமணம்: திருமணத்தை தள்ளி போடாதீர்கள், முடிந்த வரை 25 முதல் 28 வயதுக்குள் கல்யாணம் செய்துக்கொள்ளுங்கள், கல்யாணம் உங்களுக்கு பொறுப்புகளை கற்றுத்தரும், அதே சமயத்தில் நண்பர்களுடன் சேர்ந்து செய்யும் வீண் செலவுகளை தடுக்கும். சாதிக்க வேண்டும் என்ற உந்துதலை கொடுக்கும்.
நண்பர்கள்: நண்பர்கள் வட்டம் சிறியதாக இருக்க வேண்டும், என்னுடைய 35 வயதில் என் நண்பர் வட்டம் ஆறு நபர்கள் மட்டும் தான். நான் கூற வருவது. வேலையில் உள்ள நண்பர்கள், வணிக நண்பர்கள் மற்றும் நண்பர்கள் இடையே வேறுபாடு உள்ளது அதை புரிந்து கொள்ளுங்கள்.
கண்மூடித்தனமான ரிஸ்க்: கண்மூடித்தனமான ரிஸ்க் எடுக்கக்கூடாது. உதாரணத்திற்க்கு வாரன் பாபட், ராகேஷ் ஜூன் ஜூன் வாளா போன்றவர்கள் பங்கு சந்தையின் மூலம் அல்லது ஆம்வே மூலம் பணக்காரார்கள் ஆனார்கள் ஆகையால் நீங்களும் பங்கு சந்தையில் அல்லது ஆம்வேயில் சேருங்கள் என்று யாராவது சொன்னால் அதை கண்மூடித்தனமாக நம்பாமல் ஆராய்ந்து செயல்படுவது.
ஆடம்பரம் வேண்டாம்: சிறுகச் சிறுகக் கஷ்டப்பட்டு சேமித்துக் கொண்டிருக்கும் போது, நீங்கள் ஆடம்பரத்தைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். உங்கள் தொழில் மற்றும் முதலீடுகளில் பணம் நன்றாக வரும் வரை ஆடம்பர வாட்ச், விலை உயர்ந்த கார் என்று எந்த ஆடம்பரமும் கூடாது.
கடைசியாக ஒரே நாளில் ரோமாபுரி கட்டப்படவில்லை என்பதை போல் பணக்காரன் ஆவது ஒரே நாளில் நடக்காது பொறுமை மிகவும் அவசியம் என்பதை உணர வேண்டும்.
Comments
Post a Comment