பணக்காரர் ஆக வேண்டுமென்றால் நான் செய்யக் கூடாதது என்ன?
இன்றைய காலக்கட்டத்தில் கோடிகள் எல்லாம் ரஜினி ஸ்டைலில் சொல்ல வேண்டும் என்றால் ஜுஜுபி மேட்டர். 30 அல்லது 32 வயதுக்குள் ஒருவர் கோடீஸ்வரராக முடியுமா? என் அனுபவத்தில் முடியும் என்பதே பதில். இந்த உலகில் பணத்துக்கு மட்டும் எப்போதுமே பற்றாக்குறை வருவதில்லை. பணத்தைப் பற்றிய நம் எண்ணங்களுக்குத்தான் பற்றாக்குறை. சரி கோடீஸ்வரராக என்ன செய்யவேண்டும் என்பதுக்கு பதில் என்ன செயக்கூடாது என்பதை இங்கே பார்ப்போம். சோம்பேறியாக இருக்கக்கூடாது: பணக்காரர் ஆவதற்கு , கடும்உழைப்பு அவசியம் உங்கள் தொழிலில் மிகவும் விருப்பத்துடன் கடின உழைப்பை செலுத்துவேண்டும். அதிர்ஷ்டத்தினால் பணக்காரர் ஆவது முடியாது என்பதை அறிந்திருக்கவேண்டும். நினைவில் கொள்ளுங்கள் நாளை என்றுமே வருவதில்லை. கடனுக்கு ‘நோ’: உங்கள் வளர்ச்சியில் 'கடன்' என்ற வார்த்தையே இருக்கக் கூடாது. அது உங்களுக்கு மேலும் சம்பாத்தியத்தைப் பெற்றுத் தராது; வட்டித் தொகையை அதிகரித்து உங்களின் சேமிப்பையும் வளர்ச்சியையும் பதம் பார்த்து விடும். உங்கள் லட்சியத்தை அடைந்த பிறகு, கடன் வாங்கி அதை சுழற்சி செய்வது வேறு விஷயம். கடனுக்கு "நோ" என்றால் கடன் கொடுப்பதைய...