Posts

மனம் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதற்கு ஒரு சின்ன உதாரணம்..

 ஒரு பெண், லண்டன் நகரத்தில் வாழ்பவர். அங்குள்ள கால நிலைக்கு ரோஜா மலர்கள் நன்கு வளரும். அவை எல்லோருக்கும் பிடிக்கும். ஆனால், இந்த பெண்ணிற்கு ரோஜா மலர்கள் என்றாலே அலர்ஜி. ஒரு பூ அருகிலிருந்தாலே, அவர் கண்களிலிருந்து கண்ணீர் வரும், தும்மல் வரும். ரொம்பவும் கஷ்டப்படுவார். அதனால் ரோஜா மலர்கள் அருகில் செல்லாமல் பார்த்துக் கொள்வார். இந்த சூழ்நிலையில் ஒருநாள், அவருடைய ஆபீசில் ஒரு மீட்டிங். கலந்து கொள்ளப் போனார். அந்த மீட்டிங் அறைக்குள் நுழைந்தவுடன் அவருக்கு ஒரே அதிர்ச்சி. ஒரு பெரிய டேபிளில் நூற்றுக்கணக்கான ரோஜா மலர்களை வைத்து அலங்கரித்திருந்தார்கள். ஒரு பூ அருகில் இருந்தாலே நமக்கு அலர்ஜியாச்சே, இவ்வளவு பூக்கள் மத்தியில் நாம் எப்படி மீட்டிங்கை அட்டென்ட் செய்யப் போகிறோம்’ என்று பயந்தார். ஆனால் வேறு வழியில்லாமல், அவருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் சென்று அமர்ந்தார். பூக்களைப் பார்த்ததுமே அவருக்கு கண்களில் இருந்து நீர் வந்தது, தும்மலும் வந்தது, முகமெல்லாம் சிவந்து விட்டது. மீட்டிங் இன்னும் ஆரம்பிக்கப் படவில்லை, இந்த சூழ்நிலையில், பின்னாலிருந்து ஒருவர் எழுந்து வெளியில் செல்கிறபோது “இந்த பூக்களைப் பாருங்

வல்லுனர் டிப்ஸ் ஒருவர் வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருக்கிறார் என்பதற்கான 12 அறிகுறிகள்!

 1. வீட்டிலும் வேலையிலும் ஒழுங்கின்மை வீட்டில் எந்தெந்த வேலைகளில் முதலில் முடிப்பது, எதற்கு முன்னுரிமை அளிப்பது என்று தெரியாமல் நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்வது, வீட்டில் உள்ள அறைகளில் எந்தப் பொருளையும் இருந்த இடத்தில் வைக்காமல் ஏனோ தானோவென கிடாசிவிட்டு, பின்னர் தேவைப்படும் பொருட்களைத் தேட அதிக நேரம் எடுத்துக்கொள்வது எல்லாமே ஒழுங்கின்மையின் கீழ்தான் வரும். அலுவலகத்திலும் அன்றாட வேலைகளை சரியாக திட்டமிடாமல் செய்வதும், பின்னர் குறிப்பிட்ட வேலைகளை செய்து முடிக்க முடியாமல் திணறுவதும் கூட ‘Disorganized’ என்று சொல்லக் கூடிய ஒழுங்கின்மைதான். இந்தப் பழக்கம் அதிகரிக்கத் தொடங்குவதும் நம் வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருக்கிறோம் என்பதற்கான முக்கிய அறிகுறியே. 2. நேரத்தை உண்ணும் விரல்! கையில் மொபைலை வைத்துக் கொண்டு எந்த நேரமும் சமூக வலைதளங்களில் விரல்களால் ஸ்க்ரால் செய்வது வருவது நம்மில் பலரிடமும் நம்மை அறியாமல் புகுந்துவிட்ட அடிக்‌ஷன் என்றே சொல்லலாம். ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டா போன்ற சமூக வலைதளங்களில் போஸ்டுகளை அடிக்கடி பார்ப்பது ஒரு பக்கம் என்றால், கிடைக்கிற சில நிமிட இடைவெளிகளில் ஷார்ட்ஸ், ர

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல்

 குறள் எண் – 645 பால் – பொருட்பால் இயல் – அமைச்சியல் அதிகாரம் – சொல்வன்மை சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து. மு. வரதராசன் உரை : வேறோரு சொல் அந்தச் சொல்லை வெல்லும் சொல்லாக இல்லாதிருந்தால் அறிந்த பிறகே சொல்லக்கருதியதைச் சொல்லவேண்டும். சாலமன் பாப்பையா உரை : தாம் சொல்லும் சொல்லை வெல்ல, வேறொரு சொல் இல்லை என்பதை அறிந்து சொல்லுக. கலைஞர் உரை : இந்தச் சொல்லை இன்னொரு சொல் வெல்லாது என்று உணர்ந்த பிறகே அந்தச் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்

ஆள் பார்த்து பேசணும்!

 ஒரு அறிஞருக்கு இலக்கண சுத்தமாகப் பேசுபவர்களை மிகவும் பிடிக்கும். மாற்றிப் பேசுபவர்களைக் கண்டால் கோபப்படுவார். ஒருநாள் இரவில், அவர் ஒரு கிணற்றுக்குள் விழுந்து விட்டார். உள்ளே தண்ணீர் இல்லை. அடிப்பாகத்தில் மணல் கிடந்ததால், காயமில்லாமல் தப்பி விட்டார். ஆனால், வெளியே வரும் உபாயம் தெரியவில்லை. ""யாராவது என்னைக் காப்பாற்றுங்கள்,'' என்று ஓலக்குரல் இட்டார். இதை அவ்வழியாகச் சென்ற ஒருவன் இதைக் கேட்டான். கிணற்றுக்குள் எட்டிப்பார்த்தான். அவனால், அவரை தனியாக மீட்க முடியாதென புரிந்து விட்டது. ""ஐயா! சற்றுப் பொறுங்கள். ஊருக்குள் சென்று உதவிக்கு ஆட்களைக் கூட்டி வருகிறேன். இருளாக வேறு இருக்கிறது. விளக்கிற்கும் ஏற்பாடு செய்கிறேன்,'' என்றான். ஆபத்தில் கிடந்தவர், ""நன்றியப்பா! விரைந்து வா,'' என்று சொல்லியிருந்தால் பரவாயில்லை. யாரிடம் என்ன சொல்வது என்று இல்லாமல், ""தம்பி! நீ பேசியதில் இலக்கணப்பிழை இருக்கிறது. "ஆட்களைக் கூட்டி வருகிறேன்' என்பது நிகழ்காலம். "கூட்டி வருவேன்' என்றால் தான் எதிர்காலம். எதிர்காலத்தில் நடக்கப் போவதை

பெரிய பணக்காரர்களால் கூட காசு கொடுத்து வாங்க முடியாதது என்ன/எது?

 இளமை. உலகின் மிகப்பெரிய பணக்காரரான ராக்பெல்லர் தினமும் காலையில் காலாற நடைப்பயிற்சி செய்வது வழக்கம். அப்போது, ஒரு இளைஞன் விரக்தியுடன் நடப்பதை கவனித்தார். என்னவென்று விசாரித்தபோது, அவனுக்கு வாழ்க்கையில் பல்வேறு பிரச்சனைகள். அவன் தற்கொலை செய்துக்கொள்வதற்காக செல்வதாக கூறினான். அவர் அவனை பல்வேறு விதங்களில் தேற்ற முயற்சித்தார். அவன் கூறினான். "உங்களுக்கென்ன, நீங்கள் உலகின் பணக்காரர். உங்களுக்கு எல்லாம் எளிதில் கிடைக்கும். உங்களுடைய எல்லா சொத்துக்களையும் எனக்குத் தர முடியுமா ? " என்றான். "தாராளமாக தருகிறேன். ஆனால், அதற்கு பதிலாக, எனக்கு நீ ஒன்று மட்டும் கொடு. உனது இளமை. உன்னுடைய இளமையை எனக்கு நீ தந்துவிட்டால், நான் மறுபடி உழைத்து, இத்தகைய சாம்ராஜ்யத்தை உருவாக்க முடியும்." என்றார் ராக்பெல்லர். இளைஞன், தனது பிரச்சனையை சமாளிக்கும் தன்னம்பிக்கையை அடைந்து, உழைத்து வாழ்வதென்று முடிவெடுத்தான். உலகத்தின் மிகப்பெரிய பணக்காரரும், கடந்த இளமையை மறுபடி பெற இயலாது. வாழ்க்கையில் மறுபடி இளமை திரும்பி வராது. அந்தந்த காலகட்டங்களை அப்போதே பயன்படுத்திக் கொள்ள வேண்டும். காலம் பொன் போன்றது.

குழந்தைகளை வளர்ப்பது எப்படி

 ஒரு இளைஞனும் ஒரு வயதான ஓய்வு பெற்ற ஆசிரியரும் ஆளுக்கொரு செடி வாங்குகிறார்கள்.அந்த இளைஞன் அந்த செடியை நன்றாக வளர்க்க வேண்டும் என நினைக்கிறான். தினமும் தண்ணீர் விடுகிறான். இணையதளங்களில் தேடி நல்ல சிறந்த உரங்களை வாங்கி வைத்து கண்ணும் கருத்துமாக வளர்க்கிறான். அந்த ஆசிரியரோ அந்த செடிக்கு தினமும் தண்ணீர் விடுகிறார். மாட்டு சாணத்தை எப்போதோ ஒரு சில நேரம் மட்டும் உரமாக இடுகிறார்.இளைஞன் வளர்த்த செடி நன்றாக செழித்து வளர்ந்து புஸு புஸுவென்றுக் காணப்படுகிறது. ஆசிரியரின் செடி இரண்டு மூன்று கிளைகளுடன் சாதரணமாக உள்ளது. அந்த இளைஞன் அடிக்கடி அந்த ஆசிரியரிடம், "என்ன பெருசு இப்படி இருக்கு உன் செடி.. என்னோடத பாரு. எப்படி புஸு புஸுன்னு இருக்கு. நல்ல உரம் வைக்க மாட்டியா?" என்று கேட்கிறான்.அதற்கு ஆசிரியர் கூறுகிறார், "உள்ளது போதும் ப்பா". திடீரென்று ஒருநாள் கஜா புயல் போன்றதொரு கடுமையான புயல் வீசுகிறது. மறுநாள் இளைஞனின் செடி வேருடன் வீழ்ந்து கிடக்க ஆசிரியரின் செடி நன்றாக நிற்கிறது. ஆசிரியரிடம் செல்கிறான் இளைஞன். "நான் நல்ல உரமெல்லாம் வச்சு என் செடிய நல்லா பாத்துக்கிட்டேன். ஆனாலும் என்

கண்ணனின் மனதில் யார் இருக்கிறார்?

 அபிமன்யுவின் மனைவி உத்தரைக்கு முனிவர் ஒருவர், மாயக்கண்ணாடி ஒன்றை பரிசாக வழங்கினார். அந்தக் கண்ணாடி முன் ஒருவர் வந்து நின்றால், அவர் மனதில் யார் இருக்கிறாரோ, அவர் அதில் தெரிவார். உத்தரையே முதலில் அதை சோதனை செய்தாள். திருமணமானதில் இருந்து, அவளது அன்புக்கணவன் அபிமன்யுவைத்தவிர அவளது உள்ளத்தில் வேறு யாருமில்லை. எனவே, அபிமன்யு கண்ணாடியில் தெரிந்தான். அபிமன்யுவும், மனைவி மீது தீராக்காதல் கொண்டிருந்தான். அவனை கண்ணாடி முன்னால் நிறுத்தினர். அப்போது, உத்தரை அதில் தெரிந்தாள். அந்த சமயத்தில் மாயக்கண்ணன் அங்கு வந்தார். அவர் மனசுக்குள் யார் இருக்கிறார் என்று பார்க்க எல்லாருக்கும் ஆசை. அர்ஜுனன் என்னை விட்டால் யார் இருப்பார்? எனச்சொல்ல, போடா! அவன் மனதில் நான் தான் இருப்பேன், என பீமன் வம்புக்குப்போக, இருவருமே இல்லை! நான் தான் இருப்பேன், என தர்மர் பிடிவாதமாய்ச்சொல்ல, ஏன்... அவனது தந்தை வசுதேவனின் தங்கையான நானல்லவா இருப்பேன், என மனதுக்குள் நினைத்துக் கொண்டாளாம் குந்தி. எல்லாரும் ஆர்வமாயினர். கண்ணனைக் கையைப் பிடித்து இழுக்காத குறையாக கண்ணாடி முன் கொண்டு வந்து நிறுத்தினர். என்ன ஆச்சரியம்! யாருக்கு கண்ணனை அ