மனம் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதற்கு ஒரு சின்ன உதாரணம்..

 ஒரு பெண், லண்டன் நகரத்தில் வாழ்பவர்.

அங்குள்ள கால நிலைக்கு ரோஜா மலர்கள் நன்கு வளரும்.

அவை எல்லோருக்கும் பிடிக்கும். ஆனால், இந்த

பெண்ணிற்கு ரோஜா மலர்கள் என்றாலே அலர்ஜி.


ஒரு பூ அருகிலிருந்தாலே, அவர் கண்களிலிருந்து கண்ணீர்

வரும், தும்மல் வரும். ரொம்பவும் கஷ்டப்படுவார்.

அதனால் ரோஜா மலர்கள் அருகில் செல்லாமல் பார்த்துக்

கொள்வார்.


இந்த சூழ்நிலையில் ஒருநாள், அவருடைய ஆபீசில் ஒரு மீட்டிங்.

கலந்து கொள்ளப் போனார். அந்த மீட்டிங் அறைக்குள்

நுழைந்தவுடன் அவருக்கு ஒரே அதிர்ச்சி. ஒரு பெரிய டேபிளில்

நூற்றுக்கணக்கான ரோஜா மலர்களை வைத்து

அலங்கரித்திருந்தார்கள்.


ஒரு பூ அருகில் இருந்தாலே நமக்கு அலர்ஜியாச்சே,

இவ்வளவு பூக்கள் மத்தியில் நாம் எப்படி மீட்டிங்கை அட்டென்ட்

செய்யப் போகிறோம்’ என்று பயந்தார்.


ஆனால் வேறு வழியில்லாமல், அவருக்கு ஒதுக்கப்பட்ட

இடத்தில் சென்று அமர்ந்தார். பூக்களைப் பார்த்ததுமே

அவருக்கு கண்களில் இருந்து நீர் வந்தது, தும்மலும் வந்தது,

முகமெல்லாம் சிவந்து விட்டது.


மீட்டிங் இன்னும் ஆரம்பிக்கப் படவில்லை, இந்த சூழ்நிலையில்,

பின்னாலிருந்து ஒருவர் எழுந்து வெளியில் செல்கிறபோது

“இந்த பூக்களைப் பாருங்கள். நிஜமான பூக்கள் போலவே

இருக்கின்றன..” என்று வியந்தபடி கூறிக்கொண்டே சென்றார்.


அப்பொழுதுதான் இவருக்கு தெரிந்தது, அந்த பூக்கள்

உண்மையான பூக்கள் அல்ல. எல்லாமே காகிதத்தால்

செய்யப்பட்ட செயற்கை மலர்கள் என்று.


இவர் யோசித்தார்..

“இந்த பூக்கள் எப்படி எனக்கு அலர்ஜியை ஏற்படுத்த முடியும்..?”


இப்படி நினைத்த மறுவினாடியே அவருடைய

அலர்ஜிக்குண்டான அறிகுறிகள் அனைத்துமே மறைந்து விட்டன.


இதுதான் நமது மனம்..


இந்த மனதால் நோய்களை உருவாக்கவும் முடியும்..

குணப் படுத்தவும் முடியும்..


இந்த மனதால்


பிரச்னையை உருவாக்கவும் முடியும்..

அதற்கு தீர்வையும் தர முடியும்.


எனவே,


நேர்மறை எண்ணங்களை மட்டும் எண்ணி, மனதை நல்ல

முறையில் பயன்படுத்துவோம்.


பொறுமையைவிட மேலான தவமும் இல்லை. திருப்தியை விட

மேலான இன்பமும் இல்லை. இரக்கத்தை விட உயர்ந்த அறமும்

இல்லை . மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!


தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல

அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து

வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை

அடையும் வரை, விவேகத்துடன் ஒவ்வொரு பிரச்சனைக்கும்

முடிவு காண முயலுங்கள். இந்த விடியல் உங்கள் வாழ்விலும்

விடியட்டும்!


Comments

Popular posts from this blog

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ

EFFECTS OF NEGATIVE THOUGHTS ON YOUR MIND & BODY

Nothing can compete with The knowledge gained from poor, confidence