குழந்தைகளை வளர்ப்பது எப்படி

 ஒரு இளைஞனும் ஒரு வயதான ஓய்வு பெற்ற ஆசிரியரும் ஆளுக்கொரு செடி வாங்குகிறார்கள்.அந்த இளைஞன் அந்த செடியை நன்றாக வளர்க்க வேண்டும் என நினைக்கிறான். தினமும் தண்ணீர் விடுகிறான். இணையதளங்களில் தேடி நல்ல சிறந்த உரங்களை வாங்கி வைத்து கண்ணும் கருத்துமாக வளர்க்கிறான்.


அந்த ஆசிரியரோ அந்த செடிக்கு தினமும் தண்ணீர் விடுகிறார். மாட்டு சாணத்தை எப்போதோ ஒரு சில நேரம் மட்டும் உரமாக இடுகிறார்.இளைஞன் வளர்த்த செடி நன்றாக செழித்து வளர்ந்து புஸு புஸுவென்றுக் காணப்படுகிறது. ஆசிரியரின் செடி இரண்டு மூன்று கிளைகளுடன் சாதரணமாக உள்ளது.


அந்த இளைஞன் அடிக்கடி அந்த ஆசிரியரிடம், "என்ன பெருசு இப்படி இருக்கு உன் செடி.. என்னோடத பாரு. எப்படி புஸு புஸுன்னு இருக்கு. நல்ல உரம் வைக்க மாட்டியா?" என்று கேட்கிறான்.அதற்கு ஆசிரியர் கூறுகிறார், "உள்ளது போதும் ப்பா".


திடீரென்று ஒருநாள் கஜா புயல் போன்றதொரு கடுமையான புயல் வீசுகிறது. மறுநாள் இளைஞனின் செடி வேருடன் வீழ்ந்து கிடக்க ஆசிரியரின் செடி நன்றாக நிற்கிறது. ஆசிரியரிடம் செல்கிறான் இளைஞன்.


"நான் நல்ல உரமெல்லாம் வச்சு என் செடிய நல்லா பாத்துக்கிட்டேன். ஆனாலும் என் செடி எப்படி கீழ விழுந்துச்சு? உன் செடி மட்டும் நல்லா நிக்கிது. என்ன காரணம்?" என்று இளைஞன் ஆசிரியரிடம் கேட்க, அவர் கூறுகிறார்.


"நான் என் செடிய ரொம்ப ஸ்பெஷலா லாம் கவனிக்கல. அதுக்கு தேவையான தண்ணி விட்டேன். எப்போவாச்சும் எரு வைப்பேன். நான் உன்ன மாதிரி பொத்தி பொத்தி கவனிக்காதனால என் செடி என்ன நெனச்சுருச்சுன்னா,இந்தாளு நம்மள ஒழுங்கா கவனிக்க மாட்டான். நமக்கு தேவையானதை நம்ம தான் பாத்துக்கணும் ன்னு யோசிச்சு அதோட வேர்களை நல்லா மண்ணோட ஆழத்துக்கு அனுப்பி தேவையான சத்துக்களை தானே சேகரிச்சு, இந்த புயலுக்கு உறுதியா நின்னுச்சு.உன் செடி என்ன நெனச்சுருச்சுன்னா, இவன் தான் நம்மள இவளோ நல்லா கவனிக்கிறானே, நாம ஏன் கஷ்டப்படணுன்னு வேர்களை மண்ணுக்குள்ள வளரவே விடல. அது தான் காரணம்".


இது செடிகளை வளர்ப்பதை பற்றியது அல்ல. குழந்தைகளை வளர்ப்பது பற்றியது.


உலகம் மிகவும் கடுமையானது என்பது நமது பிள்ளைகளுக்கு தெரிய வேண்டும் என்றால் அளவாக கவனிக்கப்பட்ட செடி போல எந்த குழந்தைகள் வளர்கிறார்களோ அந்த குழந்தைகள் தான் வாழ்க்கையில் எந்த புயல் வந்தாலும் தைரியமாக உறுதியாக நிலைத்து நிற்பார்கள்.பெற்றோரின் நிழலில் வளர்ந்த குழந்தைகள், என்ன வந்தாலும் பெற்றோர் பார்த்து கொள்வார்கள் என்ற மனநிலையில் இருந்தால் ஒரு துன்பத்திற்கே கீழே விழுந்து விடுவார்கள்.


பேச்சாளர் பாரதி பாஸ்கர் கூறியது இந்த கதையும் கருத்தும்.


கோபப்படாமல் வளர்ப்பது எப்படி?


ஒரு குழந்தைக்கு நல்ல பழக்கங்களை மூன்று மாதங்கள் தொடங்கி கற்றுக்கொடுக்க வேண்டுமாம். ஒரு சிலர் சொல்லுவார்கள், குழந்தைக்கு காது கேட்கும் திறன் அம்மாவின் வயிற்றில் ஐந்தாம் மாதம் இருக்கும் போதே தொடங்கி விடுமாம். பாடமும் கற்றுக்கொள்ள தொடங்கிவிடும். அபிமன்யுவை போல.


Comments

Popular posts from this blog

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ

உயர்வு

சூழ்நிலை