Posts

டிஸ்னியின் இந்த அசத்தல் அனிமேஷன் படங்களைப் பார்த்திருக்கிறீர்களா?

அது என்னவென்று புரியவில்லை  இந்த செல்ஃபி யுகத்திலும் கார்ட்டூன்கள், அனிமேஷன் படங்கள் என்றால் குழந்தைகளுக்கு அவ்வளவு பிரியம். ஃப்ரோஸன், மினியன்ஸ், ஜூடொபியா, பைண்டிங் நீமோ போன்ற அனிமேஷன் படங்களை பார்த்துவளர்ந்த இன்றைய சுட்டிஸ் தவறவிட்டிருக்க வாய்ப்புள்ள டிஸ்னியின் சில பழைய கிளாசிக் அனிமேஷன் படங்களின் லிஸ்ட் இதோ. ஸ்நோ வொய்ட் அண்ட் தி செவன் டுவார்ஃப்ஸ் (1937) இன்றும் மிகவும் பிரபலமான கார்ட்டூன் கேரக்டர்களில் ஒன்றாகப் பார்க்கப்படும் கேரக்டர் ஸ்நோ வொய்ட். ஸ்நோ வொய்ட்டை வளர்க்கும் மோசமான மாற்றாந்தாய் ராணி, ஸ்நோ வொய்ட் தனது அழகை மிஞ்சிவிடுவளோ என எண்ணி  அடிமையாக வைத்திருக்கிறாள். ஒரு நாள் அவளது மாயக்கண்ணாடி, ‘ஸ்நோ வொய்ட் தான் இந்த ராஜ்ஜியத்தின் மிக அழகிய பெண்’ என ராணியிடம் கூறுகிறது. அதனால் ஸ்நோ வொய்ட்டைக் கொல்ல உத்தரவிடுவாள். அங்கிருந்து தப்பி காட்டில் உள்ள ஏழு குள்ள மனிதர்களின் அடைகலத்தில் வாழும் ஸ்நோ வொய்ட் எப்படி ராணியின் சூழ்ச்சிகளை வென்றாள் என்பதே இப்படத்தின் கதை. இது தான் டிஸ்னியின் முதல் முழுநீள அனிமேஷன் திரைப்படம். வெளியாகி 80 வருடங்கள்

இளம் வயதில் முன்னேற்றம்... 10 பாசிட்டிவ் வழிகள் !

“நாம் நினைத்த அளவுக்கு நம் வாழ்க்கையில் நம்மால் முன்னேற முடியவில்லையே என ஐம்பது வயதுக்குப் பிறகுதான் பலரும் உணர்கிறார்கள். ஆனால், இதனை இளம் வயதிலேயே உணர்ந்து,  நம்முடைய வளர்ச்சியைத் தடை செய்யும் பிரச்னைகள் என்னென்ன என்பதை அறிந்து மாற்றிக்கொள்வது நல்லது. மாற்றம் என்பது உள்ளுக்குள் இருந்துதான் வரவேண்டும். தொடர் சிந்தனையின் மூலமே இந்த மாற்றம் என்பது சாத்தியமாகும். இந்தத் தொடர் சிந்தனை என்பதைப் பழக்கத்துக்குக் கொண்டு வரும்போது உங்களை அறியாமலேயே நீங்கள் முன்னேறுவீர்கள்” என்கிறார் `பொட்டன்ஷியல் ஜெனிசீஸ்’ மனித வள நிறுவனத்தின் அறிவாற்றல் மாற்றலுக்கான பிரிவின் தலைமை அதிகாரி ராமமூர்த்தி கிருஷ்ணா. வளர்ச்சிக்கான தடைகளையும், அந்தத் தடைகளில் இருந்து எப்படி மேலே வருவது என்பது குறித்தும் அவர் பத்து வழிகளைச் சொல்கிறார். 1. சிந்தனையைச் சரிசெய்வோம் வாழ்க்கையில் நம் வளர்ச்சி தடைப்படுவதற்குக் காரணம், நம் சிந்தனைதான். குழந்தைப் பருவத்திலும், பால்ய பருவத்திலும் நம்மைச் சுற்றி நடைபெற்ற சம்பவங்களும், நம்மைப் பாதித்த விஷயங்களும் நம் மனதில் ஆழமாகப் பதிந்து, நம் சிந்தனையைத் தடை செய்கின்றன. இவ்வாறு சிந்

The mirror lesson

🖼*கண்ணாடி சொல்லும் மூன்று பாடங்கள்*🖼 🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃 🎀நம் *முகத்தில் ஏதேனும் அழுக்கோ கறையோ பட்டு விட்டால்* கண்ணாடியில் அது தெரிகிறது. அந்தக் கறையைக் கண்ணாடி, *கூட்டுவதும் இல்லை, குறைப்பதும் இல்லை*. உள்ளது உள்ளபடி காட்டுகிறது அல்லவா? அதே போல் உன் சகோதரனிடம்- நண்பனிடம்- கணவரிடம்/ மனைவியிடம் எந்த *அளவுக்கு குறை இருக்கிறதோ அந்த அளவுக்குத்தான்* அதனைச் சுட்டிக்காட்ட வேண்டும். எதையும் *மிகையாகவோ, ஜோடித்தோ சொல்லக் கூடாது*. துரும்பைத் தூண் ஆக்கவோ, கடுகை மலையாக்கவோ கூடாது. இது 🖼கண்ணாடி சொல்லும் முதல் பாடம்!" 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 🎀கண்ணாடிக்கு முன்னால் நீ நிற்கும்போதுதான் *உன் குறையைக் காட்டுகிறது*. நீ *அகன்று விட்டால் கண்ணாடி மௌனமாகிவிடும்*. அதே போல் மற்றவரின் குறைகளை அவரிடம் *நேரடியாகவே சுட்டிக்காட்ட வேண்டும்*.அவர் இல்லாத போது *முதுகுக்குப் பின்னால் பேசக்கூடாது*. இது 🖼கண்ணாடி தரும் இரண்டாவது பாடம்!” 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 🎀ஒருவருடைய முகக் கறையைக் கண்ணாடி காட்டியதால் *அவர் அந்தக்கண்ணாடி மீது கோபமோ, எரிச்சலோ படுகிறாரா*? இல்லையே…! அதே போல் *நம்மிடம் உள்ள குறைகளை யாரேனும் சுட்டிக

Practice makes a man perfect

Image
ஒரு ராஜாவுக்கு இரண்டு பஞ்சவர்ண கிளிக் குஞ்சுகள் வெகுமதியா வந்துன. ராஜா அந்த ரெண்டையும் பறக்க வைத்து பேசப் பயிற்சி கொடுக்கச் சொன்னாரு. அதுல ஒரு கிளி நல்லா பறந்து வார்த்தைகளும் கத்துக்க ஆரம்பிச்சது.  ஆனா இன்னொரு கிளி பறக்க கூடத் தெரியாம ஒரு கிளையில உட்கார்ந்தது உட்கார்ந்தபடியே இருந்தது. ராஜா பெரிய அமைச்சர்கள், ஆலோசகர்கள் எல்லோரையும் விட்டு, பயிற்சி கொடுக்க வச்சும் கிளி பறக்கல. இதைக் கேள்விப்பட்டு ஒரு வயசான விவசாயக் குடிமகன் வந்து "நான் பறக்க வைக்கிறேன்"னு சொன்னான். . ♥  அடுத்த நாள் காலை ராஜா கண் விழிக்கும்போது, பறக்காத அந்த பஞ்சவர்ணக்கிளி மரத்தைச் சுற்றி அங்கும் இங்கும் பறந்து சுத்திகிட்டிருப்பதைப் பார்த்தான். . ♥  அவனுக்கு ஒரே சந்தோஷம். "இந்த அற்புதத்தை எப்படி செய்தீங்க?"ன்னு கேட்க, அதுக்கு அந்த விவசாயி பணிவோட, "அது ரொம்ப சுலபமான காரியம் அரசே.! ♥  மரத்தில் ஏறி அந்த பறவை உட்கார்ந்திருந்த கிளையை நான் வெட்டி விட்டேன். வேறொன்றுமில்லை"ன்னாரு. . -  ♥  இறைவனும் சில சமயம் நம்மை நமது சக்தியை உணரச் செய்ய வேண்டி, நாம் அமர்ந்திருக்கும் கிளையை வெட்டிவிடுவான். அது நம்ம

Marketing tricks - வியாபார தந்திரம்

Image
தந்திரம் 1: பேருந்து நிலையத்தில் பழ வியாபாரம் செய்யும் ஒரு முதியவர் அந்தப் பேருந்தில் பழக் கூடையுடன் ஏறினார். இவர் ஐந்து பழங்கள் பத்து ரூபாய்!’ என்று கூவி, பழங்களை விற்க முயன்றார். எவரும் பழங்களை வாங்க முன்வரவில்லை. இந்த முதியோர் பலக்கூடையயை சுமக்க முடியாமல் சுமந்தபடி முதியவர் கீழே இறங்கியதும், மீண்டும் ஒரு இளைஞர் பேருந்தில் ஏறினார். ‘ஆறு பழங்கள் பத்து ரூபாய்!’ என்று கூவினான். அவனுக்கு நல்ல விற்பனை. மற்றொரு பேருந்தில் ஏறிய முதியவர் அங்கும், ‘ஐந்து பழங்கள் பத்து ரூபாய்!’ என்று விற்க முயன்றார். அங்கும் பலன் இல்லாமல் போகவே, கீழே இறங்கி விட்டார். அடுத்து, ‘ஆறு பழங்கள் பத்து ரூபாய்’ என்று கூவியபடி அந்தப் பேருந்தில் ஏறிய இளைஞன், ஏகத்துக்கு விற்பனை செய்தான். மிகப் பெரிய கம்பெனியின் விற்பனை ஆலோசகரான ஒருவர் இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தார். முதியவரை அருகில் அழைத்தவர், “அந்த இளைஞனின் சாமர்த்தியம் உங்களிடம் இல்லையே! அவனுக்குப் போட்டியாக நீங்களும் ‘ஆறு பழம் பத்து ரூபாய்’ என்று விற்றால்தானே உங்களுக்கு விற்பனை ஆகும். அதிகக் கொள்முதல் மூலம் குறைந்த விலைக்குப் பழங்களை வாங்கி,

Change Yourself, Not The World!

ஒரு ஊரில் ஒரு கோடீஸ்வரன் இருந்தான். அவனுக்குக் கடுமையான தலைவலி ஏற்பட்டது. பல ஊர்களிலிருந்து மிகப் பெரிய வைத்தியர்கள் வந்து பார்த்தும், வண்டி வண்டியாக மருந்துகள் சாப்பிட்டும் அந்தத் தலைவலி குணமாகவில்லை. ஒருநாள் அந்த ஊருக்கு ஒரு சன்யாசி வந்தார். அவர் பணக்காரனை வந்து பார்த்தார். பார்த்துவிட்டு, அவருக்கு ஏற்பட்ட தலைவலிக்குக் கண்ணில் இருக்கும் ஒரு நோயே காரணம் என்று கூறினார். அந்தக் கண்ணைக் குணப்படுத்த ஒரே ஒரு வழிதான். அந்தப் பணக்காரன் பச்சை நிறத்தைத் தவிர வேறெதையும் பார்க்கக்கூடாது என்று கூறிவிட்டுப் போய்விட்டார். பணக்காரன் முதலில் தன் வீட்டில் இருக்கும் எல்லாவற்றையும் பச்சையாக மாற்றினான். தலைவலி குணமாகி விட்டது. சன்னியாசி கூறியது சரிதான். உடம்பு சரியாகவே வீட்டைவிட்டு வெளியே போகத் தொடங்கினான். வெளியே போனால், இயற்கை எல்லா வண்ணங்களையும் அள்ளித் தெளித்திருந்தது. ஆனால், அவற்றைத்தான் அவன் பார்க்கக்கூடாதே! நிறையப் பச்சைப் பெயிண்டையும் பிரஷ்ஷையும் கொடுத்து சில ஆட்களை நியமித்தான். அவன் போகும் வழியில் இருக்கும் ஆடு, மாடு, மனிதர், குடிசை, வண்டி, மேசை, நாற்காலி எல்லாவற்றுக்கும் பச்சை நிறத்தை அ

Get Service - Change Your Thinking, Change Your Life.

This 4 minute eye-opening video is a great reminder to us all that there's more to the story than we realize.