ஒரு முதியவர் ஒரு.. ஹோட்டலுக்கு சாப்பிட சென்றார்..! வெயிலில் வந்த களைப்பு.. அவர் முகத்தில் தெரிந்தது..! அவர் அங்கு ஓர் இடத்தில் அமர்ந்து சர்வரை.. அழைத்து கேட்டார்..! " தம்பி இங்கு சாப்பாடு என்ன விலை..! என்று..! அதற்கு சர்வர் "50 ரூபாய்" என்றான்..! பெரியவர் தனது சட்டை பைக்குள்.. கை விட்டு பார்த்து சர்வரிடம் கேட்டார்.. "தம்பி அதற்கும் சற்று.. குறைவாக சாப்பாடு கிடைக்காதா.."? சர்வர் கோபமாக "யோவ் ஏன்யா இங்க வந்து எங்க உயிர எடுக்கிறிங்க.. இதை விட மலிவான ஹோட்டல் எவ்வளவோ.. இருக்கு அங்க போய் தொலைங்கயா..? என்றான்..! பெரியவர் சொன்னார்.. "தம்பி தெரியாமல் இங்கு வந்துவிட்டேன்.. வெளியே வெயில் வேறு..அதிகமா இருக்கு.. நான் இனி வேறு ஹோட்டலுக்கு செல்வது சற்று சிரமம்..! என்றார்..! சர்வர்.. சரி..சரி எவ்ளோ பணம் குறைவா வச்சுயிருக்க..! என்று கேட்டான்..! பெரியவர் என்னிடம் 45 ரூபாய் தான் இருக்கிறது..! என்றார்..! சர்வர் சரி..தருகிறேன் ஆனால் உனக்கு தயிர் இல்லை சரியா..? என்றான்..! பெரியவர் 'சரி' என சம்மதித்தார்..! சாப்பாடு கொடுத்தான்..! பெரியவர் சாப்பிட்டு ...
அமெரிக்க பாராளுமன்றத்தில், அதிபர் ஆப்ரஹாம் லிங்கன் உரை நிகழ்த்தும்போது, அவரை மட்டம்தட்டும் நோக்கில் எதிர் தரப்பு பிரமுகர் ஒருவர் எழுந்து, . ஆப்ரஹாம் ... ... . உங்கள் தந்தை தைத்துக்கொடுத்த செருப்பு இன்னும் என் கால்களை அலங்கரித்துக்கொண்டு இருக்கிறது என்றாராம் .... . அதற்கு ஆப்ரஹாம் லிங்கன் சொன்னாராம், . " நண்பரே என் தந்தை இறந்து பலவருடங்கள் ஆகிவிட்டது, இருப்பினும் அவர் தைத்து கொடுத்த செருப்பு உங்களின் காலை இன்னும் அலங்கரித்துக்கொண்டு இருக்கிறதென்றால், அது அந்த அளவுக்கு நேர்த்தியாக தைக்கப்பட்டுள்ளது ...... . இருப்பினும் அவர் தைத்த இடத்தில் ஏதேனும் பழுது ஏற்ப்பட்டிருந்தால் அதை என்னிடம் கொடுங்கள் நான் அதை உங்களுக்கு சரி செய்து தருகிறேன் . எனக்கு செருப்பு தைக்கவும் தெரியும் .... . நாட்டை ஆளவும் தெரியும் என்று பதிலுரைத்தாராம் ... . தன்னம்பிக்கை விடாமுயற்சி இவைகளில் இருந்து பெற்ற ஏழ்மையின் அனுபவ அறிவுக்கு நிகராக ... . வேறெதுவும் போட்டியிட முடியாது......... .
ஒருநாள் ரேசன் கடையிலிருந்து பத்து கிலோ பச்சரிசி வாங்கி வரச் சொன்னாள் மனைவி. வாங்கி வந்ததும் அதை ஒரு பெரிய அண்டாவில் போட்டு மொத்தத்தையும் இரண்டு மூன்று முறை தண்ணீர் விட்டு அலசச் சொன்னாள். அலசிக் கொடுத்தேன். ஒரு போர்வையை எடுத்துக் கொண்டு, "நீங்க அரிசிய தூக்கிட்டு மொட்டை மாடிக்கு வாங்க"ன்னு சொன்னா. போனேன். போர்வையை விரித்து அதில் அரிசியை தட்டி காயப் போட்டோம். "ஏங்க, கீழே போய் ஒரு நாக்காலியும் சின்னதா ஒரு குச்சியும் எடுத்துட்டு வாங்க" என்றாள். எடுத்து வந்து கொடுத்தேன். மொட்டை மாடியின் ஒரு மூலையில் கொஞ்சமாய் விழுந்திருந்த வேப்பமர நிழலில் நாற்காலியைப் போட்டு "உக்காருங்க " என்றாள். உட்கார்ந்தேன். குச்சியைக் கையில் கொடுத்து "காக்கா குருவி அரிசிய கொத்தி தின்னுடாம பாத்துக்குங்க " என்று சொல்லிவிட்டு கீழே போய்விட்டாள். விதியை நொந்துகொண்டு தேமே என்று உட்கார்ந்திருந்தேன். நிழலுக்கேற்றபடி நாற்காலி நகன்று கொண்டிருந்தது. ஒன்பதரைக்கு காலை உணவும் பதினோரு மணிக்கு ஒரு லெமன் ஜூஸும் ஒன்றரை மணிக்கு மதிய உணவும் நாலு மணிக்கு தேநீரும் என்னைத் தேடி வந்தன. அதே போல் அடுத்த நா...
Comments
Post a Comment