வல்லுனர் டிப்ஸ் ஒருவர் வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருக்கிறார் என்பதற்கான 12 அறிகுறிகள்!
1. வீட்டிலும் வேலையிலும் ஒழுங்கின்மை வீட்டில் எந்தெந்த வேலைகளில் முதலில் முடிப்பது, எதற்கு முன்னுரிமை அளிப்பது என்று தெரியாமல் நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்வது, வீட்டில் உள்ள அறைகளில் எந்தப் பொருளையும் இருந்த இடத்தில் வைக்காமல் ஏனோ தானோவென கிடாசிவிட்டு, பின்னர் தேவைப்படும் பொருட்களைத் தேட அதிக நேரம் எடுத்துக்கொள்வது எல்லாமே ஒழுங்கின்மையின் கீழ்தான் வரும். அலுவலகத்திலும் அன்றாட வேலைகளை சரியாக திட்டமிடாமல் செய்வதும், பின்னர் குறிப்பிட்ட வேலைகளை செய்து முடிக்க முடியாமல் திணறுவதும் கூட ‘Disorganized’ என்று சொல்லக் கூடிய ஒழுங்கின்மைதான். இந்தப் பழக்கம் அதிகரிக்கத் தொடங்குவதும் நம் வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருக்கிறோம் என்பதற்கான முக்கிய அறிகுறியே. 2. நேரத்தை உண்ணும் விரல்! கையில் மொபைலை வைத்துக் கொண்டு எந்த நேரமும் சமூக வலைதளங்களில் விரல்களால் ஸ்க்ரால் செய்வது வருவது நம்மில் பலரிடமும் நம்மை அறியாமல் புகுந்துவிட்ட அடிக்ஷன் என்றே சொல்லலாம். ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டா போன்ற சமூக வலைதளங்களில் போஸ்டுகளை அடிக்கடி பார்ப்பது ஒரு பக்கம் என்றால், கிடைக்கிற சில நிமிட இடைவெளிகளில் ஷார்ட்ஸ...