யாரிடம் எப்போது எப்படிப் பேச வேண்டும்
மன்னருக்கு மீன் கொண்டு வந்தான் ஒரு மீனவன் ' அரிதான இந்த மீனை தாங்கள் வாங்குவது தான் பொருத்தமாக இருக்கும் ' என்றான் . மன்னரும் மகிழ்ந்து அவனுக்கு ஐந்தாயிரம் பொற்காசுகள் கொடுத்தார் . மகாராணி கொதித்து விட்டார் . ' ஒரு அற்ப மீனுக்கு இவ்வளவு பணமா ?' அதை திரும்ப வாங்குங்கள் என்றாள் . ' முடிந்தவியாபாரத்தை மாற்றுவது அழகல்ல ' என்று மன்னர் மறுத்தார் . ' சரி அவனை கூப்பிட்டு இந்த மீன் ஆணா பெண்ணா என்று கேளுங்கள் ஆண் மீன் என்று அவன் சொன்னால் பெண் மீன்தான் வேண்டும் என்றும் பெண் மீன் என்று சொன்னால் ஆண் மீன் தான் வேண்டும் என்றும் கேளுங்கள் . எப்படியும் அவனிடமிருந்து ...