நல்லவற்றை நமக்குள் நிரப்பி வைப்போம்
( அர்த்தமுள்ள வாழ்க்கையை அழகாகச் சொல்கிறது இந்தச் சிறிய கட்டுரை ) * நீங்கள் ஒரு கப் காபியைக் கையில் வைத்திருக்கிறீர்கள் .* அந்த நேரத்தில் அங்கு வரும் ஒருவர் உங்கள் மீது மோதி , உங்கள் கைகளைத் தட்டி விடுகிறார் . காபி வெளியே சிதறிவிடுகிறது . நீங்கள் ஏன் காபியைச் சிந்தினீர்கள் ? ஒருவர் தட்டிவிட்டதால் காபி சிந்திவிட்டது ” என்பது உங்கள் பதிலாக இருக்கலாம் . ஆனால் அந்தப் பதில் ஒருவகையில் தவறானது . அப்படியென்றால் என்ன காரணம் ? உங்கள் கப்பில் காபி இருந்தது . அதனால் காபி சிதறிவிட்டது . ஒருவேளை அந்தக் கப்பில் தேநீர் இருந்திருக்குமானால் தேநீர்தான் சிதறியிருக்கும் . கப்பின் உள்ளே என்ன இருக்கிறதோ ...