Posts

இறைவனிடம் நம் வேண்டுதல்கள் எப்படி இருக்க வேண்டும்..??

 💗சிந்தனை கதை… வைர வியாபாரி ஒருவன் தன் வைரங்கள் அனைத்தையும் விற்றுவிட்டு பணத்தை ஒரு மூட்டையில் கட்டிக்கொண்டு தன் சொந்த ஊருக்கு வந்துகொண்டிருந்தான். அவன் தன் ஊருக்கு செல்ல ஒரு ஆற்றை கடக்க வேண்டி இருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக அந்த ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வெள்ளத்தை பொருட்படுத்தாத வைர வியாபாரி நீரில் இறங்கி எப்படியாவது ஆற்றை கடந்து சென்றுவிடலாம் என்று எண்ணி அந்த ஆற்றில் இறங்கினான். அப்போது வெள்ள நீர் அவனை நிலை தடுமாற செய்தது.   இதனால் அவன் தன் பண மூட்டையை வெள்ளத்தில் தவறவிட்டான். உடனே ஐயோ என் பண மூட்டையை வெள்ளம் அடித்து செல்கிறதே யாரேனும் காப்பாற்றுங்கள் என்று கதறினான். அந்த ஆற்றில் மீன் பிடித்துக்கொண்டிருந்த ஒரு மீனவனின் காதில் இந்த வைர வியாபாரியின் கதறல் சத்தம் கேட்டது. உடனே அவன் ஆற்றில் குதித்து கடுமையாக போராடி அந்த பணமூட்டையை எப்படியோ மீட்டு எடுத்துக்கொண்டு கரையை அடைந்தான். பின் இந்த பண முட்டையை காப்பாற்ற சொல்லி யாரோ கதறினீர்களே, நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் ? நான் உங்கள் பண முட்டையை மீட்டுக்கொண்டு வந்துவிட்டேன். வந்து பெற்றுக்கொள்ளுங்கள் என்று சத்தமாக அழைத...

பணம் சம்பாதிப்பது செலவு செய்யத் தான். ஆனாலும் எந்த ஒரு பொருளையும் தேவை இருந்தால் மட்டும் வாங்குங்கள்.

  மக்கள் சமீபகாலமாக அதிக அளவில் ரெஸ்டாரண்ட்டுக்கு போய் சாப்பிடுதல், மால்கள் மற்றும் பொழுதுபோக்கும் இடங்களில் தேவையற்ற செலவுகளை யோசிக்காமல் செய்வதைப் பார்க்கிறேன். பல திரையரங்குகளில் ஒரு டப்பா பாப்கார்ன் மனசாட்சியே இல்லாமல் நூறு ரூபாய்க்கு விற்கப்பட்டாலும் பலர் க்யூவில் நின்று வாங்கி பிள்ளைகளுக்குத் தருகிறார்கள். முன்பெல்லாம் வருடத்திற்கு ஒரு முறை பொருட்காட்சித் திடலில் மட்டும் சற்று செலவு செய்யும் தமிழ் குடும்பங்கள் இப்போது மாதத்தில் பல நாட்கள் இப்படி இஷ்டத்திற்கு வீண் செலவு செய்வது சாதாரணமாகி விட்டது. நடுத்தரக் குடும்பங்கள் ஏதோ நாளையோடு சரவணா ஸ்டோர்ஸ் போன்ற பெரும் கடைகள் மூடப்படுவதைப் போல என்னாளும் போய் அலைமோதுகிறார்கள். இதே போல துணிக்கடைகள், நகைக்கடைகள், விளம்பரத்தால் தூண்டில் போடும் ஆன்லைன் நிறுவங்கள் என நடுத்தர மக்களின் சேமிக்கும் பழக்கத்தைக் குழி தோண்டி புதைக்க பல வர்த்தக முதலைகள் வாயைப் பிளந்து கொண்டு காத்திருக்கின்றன. தேவைக்காகப் பொருள் வாங்கிய காலமெல்லாம் மலையேறி விட்டது போலும். இப்பொதெல்லாம் ஏதாவது வாங்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக மக்கள் பல சமயம் முட்டாள்தனமாக செ...

அணுகுமு​றை​ – வெற்றியின் வழி!

 சின்ன சின்ன விஷயத்திற்காக கூட ​வேத​னைப்பட்டுக் ​கொண்டு, அடுத்தவ​ரையும் காயப்படுத்துகிற பல​ரை இன்று நாம் நம் கண்முன்​னே பார்க்கின்​றோம். நா​மே கூட சில ​நேரங்களில் காரணங்க​ளை அறியாமல் ஆராயாமல் அடுத்தவர் மீது பழியி​னைப் ​போட்டு ​கோபத்தால் ​கொப்பளிக்கின்​றோம். இத​னை நி​னைக்கும் ​போது சமீபத்தில் நான் வாசித்து ரசித்த சீன ​தேசத்துக் க​தை​யொன்று நி​னைவுக்கு வருகிறது. ம​லைக்​கோவில் ஒன்றில் வழிபடுவதற்காக ஒரு தந்​தை தன் மக​னை குதி​ரையில் அ​ழைத்துக் ​கொண்டு ​​சென்றார். ​செங்குத்தான ம​லைப்பா​தையில் ஒரு இடத்தில் குதி​ரை சற்றுத் தடுமாற​வே குதி​ரையின் மீது அமர்ந்திருந்த ​சிறுவன் கீ​ழே விழுந்து விட்டான். அவனது ​கை கால்களில் நன்கு சிராய்ப்பு ஏற்பட்ட வலியினால் அவன் “ஐ​யோ!” என்று கத்தினான். மறுகண​மே “ஐ​யோ!” என்று ம​லையில் அந்த சப்தம் எதி​ரொலித்தது. தன்​னை ம​லை ​கேலி ​செய்வதாக நி​னைத்துக் ​கொண்டு அந்தச் சிறுவன் ம​லையி​னை ​நோக்கி “உன்​னைக் ​கொன்று விடு​வேன்” என்று கத்தினான். மறுக​ண​மே ம​லையும் “உன்​னைக் ​கொன்று விடு​வேன்” என்று எதி​ரொலித்தது. “நான் யார் ​தெரியுமா?” என்று சிறுவன் உறுமி...

With only one "yes" - uneducated surgeon Mr. Hamilton

  Cape Town's uneducated surgeon Mr. Hamilton, was awarded an honorary degree of Master of Medicine; but, he could neither read nor write - he was illiterate. Let's examine how this was possible. Cape Town Medical University is a leading university in the medical world. The world's first heart-bypass operation took place at this university. The honorary degree of Master of Medicine, was awarded to someone who had never seen the inside of a school, in his life. He could neither read an English word nor write ..... But one morning in 2003, world-renowned surgeon Professor David Dent announced in the university auditorium: "Today we are awarding an honorary degree in medicine to the man who produced the most surgeons in the world". He is an extraordinary teacher, an amazing surgeon and studied medical science and surprised the human mind. With this announcement, the professor said the name: "Hamilton" and the entire auditorium stood-up and cheered the Docto...

மூடநம்பிக்கை

  1. நாங்க பாக்குற மரத்திலெல்லாம் மஞ்சத் துணிய சுத்தி பூ பொட்டு வச்சிருந்த வரைக்கும் ஒரு பயலும் மரத்த வெட்டாமத் தான் இருந்தான். பனைமரம் கிழே பனையடி கருப்பு ஆலமரம் கிழே ஆலடி கருப்பு வேப்பமரம் கிழே வேம்படி கருப்பு மாமரம் கிழே மாவடி கருப்பு நாவல் மரம் கிழே நாவலடி கருப்பு இப்படி சொல்லிக் கிட்டே போகலாம். என்றைக்கு இதெல்லாம் மூடநம்பிக்கைன்னு கூவ ஆரம்பிச்சானோ அன்றைக்கே இருக்குற மரத்த பூராத்தையும் வெட்ட ஆரம்பிச்சிட்டான். 2. நாங்க ஆலமரத்துக்கு கீழேயும், அரசமரத்துக்கு கீழேயும் பிள்ளையார வச்சி வழிபட்டுக்கிட்டு இருக்கும் போதெல்லாம் மனுச மக்க சுத்தமான காத்த சுவாசிச்சிட்டு இருந்தான். இதையெல்லாம் மூடநம்பிக்கைன்னு என்றைக்கு பினாத்த ஆரம்பிச்சானோ அன்றைக்கே சுத்தமான காத்த தேடி ஓடிட்டு இருக்கான். 3. நாங்க விளையுற நிலத்த சாமியா நினைச்சு பூஜை பண்ணிட்டு இருந்தப்போ மனுஷ மக்க சுத்தமான இயற்கையான சாப்பாட்ட சாபிட்டுட்டு ஆரோக்கியமா இருந்தான். இதையெல்லாம் மூடநம்பிக்கைன்னு என்றைக்கு பொலம்ப ஆரம்பிச்சானோ அன்றைக்கே இரசாயன சாப்பாட சாப்பிட்டுட்டு ஆஸ்பத்திரிக்கு ஓடிட்டு இருக்கான்.

பைத்தியம்

  நண்பர் ஒருவர் மனநல மருத்துவர். அவரிடம் ” ஏன் டாக்டர், ஒருத்தருக்குப் பைத்தியம் குணமாயிடுச்சான்னு எப்படிக் கண்டு பிடிப்பீங்க?” என்று கேட்டேன். “சின்னச் சின்ன டெஸ்ட் இருக்கு அதுக்கு” என்றார். “for example?” “ஒரு பக்கெட் நிறைய தண்ணி வச்சிட்டு பக்கத்துல ஒரு ஸ்பூன், ஒரு மக் ரெண்டும் வச்சிடுவோம். போய் அந்தப் பக்கெட் தண்ணியைக் காலி பண்ணுன்னு சொல்வோம்” “ஓ.. புரியுது. குணமாகாத ஆளா இருந்தா ஸ்பூன்ல தண்ணியை எடுத்து எடுத்து வெளியில ஊத்திக் காலி பண்ணிக்கிட்டு இருப்பான், சரியா?” “எக்ஸாட்லி. உங்க கிட்ட சொன்னா நீங்க என்ன பண்ணுவீங்க?” “நான் மக்குல எடுத்து மளமளன்னு காலி பண்ணுவேன்” “ இது மாதிரி கேஸ்களை நாங்க செமின்னு சொல்வோம்” “என்ன டாக்டர் இப்படிச் சொல்லிட்டீங்க! அப்ப குணமானவன் என்ன பண்ணுவான்?” “ பக்கெட்டை எடுத்துக் கவுத்துட்டுப் போய்க் கிட்டே இருப்பான்”

இன்றைய மருத்துவ உலகம்

இந்தியாவிலிருந்து கனடா நாட்டிலுள்ள வாங்கோவேர் நகரத்துக்குச் சென்ற ஒரு திறமையான இளைஞன், அங்குள்ள மிகப் பெரிய சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்று அதன் முதலாளியைச் சந்தித்து, தனக்கு ஒரு விற்பனையாளர் வேலை தருமாறு கேட்டான். இந்தியாவில் ஏற்கெனவே விற்பனையாளராகப் பணிபுரிந்த அனுபவம் உண்டென்றும் சொன்னான். அவனது தோற்றத்தால் கவரப்பட்ட முதலாளி அவனை வேலையில் அமர்த்திக் கொண்டார். குண்டூசி முதல் வானூர்தி வரை கிடைக்கும் சூப்பர் மார்க்கெட் அது. முதல் நாளன்று அவனுக்கு மிகவும் கடுமையான வேலை. மாலையில் பணி முடிந்ததும் அவனை வரவழைத்த முதலாளி கேட்டார், "இன்று உன்னால் எத்தனை வாடிக்கையாளருக்கு விற்பனை செய்ய முடிந்தது". இளைஞன், ஒருவருக்கு விற்பனை செய்ததாக சொன்னான். முதலாளிக்கு கோபம் வந்து விட்டது. "இங்கே சராசரியாக ஒவ்வொரு விற்பனையாளரும், இருபது வாடிக்கையாளர்களுக்குப் பொருட்களை விற்பனை செய்ய வேண்டும். விரைவில் உன்னுடைய விற்பனையை அதிகரிக்கா விட்டால், உன் வேலை பறி போய் விடும்" என்று எச்சரித்தார். "சரி, அந்த ஒரு வாடிக்கையாளருக்கு எத்தனை பவுண்டுக்கு விற்பனை செய்தாய் ?" இளைஞன் சொன்னான், "...