The teaching way is important

ஒரு ஆசிரியர் நினைத்தால் ஒரு மாணவனுக்கு மிக சுலபமாக பாடத்தை சொல்லிக் கொடுக்க முடியும்.நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது என் ஆசிரியர் என்னிடம் 'உனக்கு எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் தெரியுமா?' என கேட்டபோது நான் படித்ததை மறந்துபோய் திருதிருவென விழித்தேன்.அப்போது என் ஆசிரியர் சொன்னது 'எட்டு எட்டா போனா நாலு எட்டுல எவரெஸ்ட் சிகரத்துக்கு போய்டலாம்! ஞாபகம் வச்சிக்கோ தம்பி!'. அவர் அப்போது 8848 மீட்டர் எவரெஸ்ட்டின் உயரம் என சாதாரனமாக சொல்லி கொடுத்திருந்தால் நான் அப்போதே மறந்திருப்பேன்! ஆனால் இப்போதுவரை என் நினைவில் இருப்பது 'எட்டு எட்டா போனா நாலு எட்டுல எவரெஸ்ட் சிகரத்துக்கு போய்டலாம்!' என்பது மட்டுமே.