Fear man changing his activities - Story

மரம் வெட்டும் தொழிலாளி ஒருவன், மரத்தில் ஏறி விறகு கட்டைகளை வெட்டுவதை வாடிக்கையாக கொண்டிருந்தான் . ஒருமுறை மரத்தில் ஏறியவன் கிளைகளை வெட்டிக் கொண்டே மேல் நோக்கி சென்றான் . சிறிது நேரத்தில் மரத்தின் உச்சிக்கு சென்றுவிட்டான் .

அப்போதுதான் கீழே கவனித்தான் . கால் வைத்து இறங்குவதற்கு கூட கிளை இல்லாமல் எல்லாவற்றையும் வெட்டிவிட்டு மேலே சென்றிருந்தான் . அந்த உயரத்தில் இருந்து கீழே பார்ப்பதற்கு அவனுக்கு பயமாக இருந்தது. கீழே இறங்க முடியாதே என கவலைப்பட்ட அவனுக்கு பயம் குடலைப் புரட்டியது.


உடனே கடவுளிடம் வேண்டினான். 'கடவுளே , நீ என்னை பத்திரமாக தரையிறக்கினால், நான் என் பசுவை உன் கோவிலுக்கு தானமாக தருகிறேன் ' என்றான். வேண்டிக் கொண்டிருக்கும்போதே லேசாக சறுக்க, மரத்தில் இருந்து வழுக்கி சற்று கீழே வந்தான்.

இப்போது முன்போல உயரம் தெரியவில்லை . இப்போது அவனுக்கு கொஞ்சம் தைரியம் வந்தது . 'பசு இல்லை கடவுளே , நான் உனக்கு எனது ஆட்டைத் தருகிறேன் ' என மீண்டும் வேண்டினான். இப்போதும் சறுக்கியது. இன்னும் கீழே வந்தான். 'ஆட்டை என்னால் தர முடியாது கடவுளே , நான் உனக்கு கோழியை தருகிறேன் ' என்றான் .

 மீண்டும் சறுக்கி வழுக்க , ரொம்பவே கீழே இறங்கிவிட்டான் . இப்போது அவனுக்கு பயம் போய்விட்டது. 'என்னால் கோழியும் தர முடியாது கடவுளே , நான் உனக்கு ஒரு முட்டையை படைக்கிறேன்' என்றான். இப்போதும் சறுக்கல் எடுக்க இன்னும் கீழே இறங்கினான்.

 இப்போது அவன் தரையில் இருந்து சில அடிகள் உயரத்தில் இருந்தான் . உடனே அவன், 'உனக்கு எதையும் தர முடியாது கடவுளே, நானே கீழே இறங்கிக் கொள்கிறேன்' என்று மரத்தில் இருந்து கீழே குதித்தான் . விறகு கட்டைகளை பொறுக்கிக் கொண்டு மகிழ்ச்சியாக பாடிக்கொண்டு வீடு திரும்பினான் .

 பயம் விலக விலக மனிதனின் நடவடிக்கைகள் எப்படி மாறும் என்பதை விளக்குகிறது கதை!

Comments

Popular posts from this blog

சூழ்நிலை

எந்த சூழ்நிலையிலும் இறைவன் கைவிட மாட்டார்..!

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ