The Power of Knowledge - Rajaji

சமயோசித அறிவு வேண்டும் ! இது ஒரு உண்மைச் சம்பவம் !!

ஒரு ரயில் மிக வேகமாகச் சென்று கொண்டிருந்தது. அப்போது ரயில் ஜன்னல் வழியே காற்று ‘குபுகுபு’வென்று வீசிக் கொண்டிருந்தது. பெட்டியில் இருந்த பயணிகள் அனைவரும் காற்றின் ஜிலுஜிலுப்பை நன்றாக அனுபவித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்தப் பெட்டியில் ஜன்னல் ஓரமாக இருந்த ஒருவர் சந்தோஷத்தில் ஜன்னலுக்கு வெளியே தன் கையை நீட்டி ஆட்டி அசைத்து மகிழ்ச்சியை அனுபவித்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அவர் கையில் அணிந்திருந்த விலை உயர்ந்த கைக்கடிகாரம் சட்டென்று கழன்று கீழே விழுந்துவிட்டது.

பதறிப்போன அந்த மனிதர் தன் கைக்கடிகாரம் கீழே விழுந்துவிட்டதாகக் கூச்சல் போட்டுக் கத்தினார்.

இதனையடுத்து அந்தப் பெட்டியில் இருந்த சகப் பயணிகள் அனைவரும் பதற்றத்தோடு என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தனர். சிலர் ஜன்னல் வழியே கைக்கடிகாரம் தெரிகிறதா என்று பார்த்தனர். சிலர் எமர்ஜென்சி செயினைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தலாம் என்று யோசனை தெரிவித்தார்கள்.

இவ்வாறு அந்தப் பெட்டி முழுவதுமே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தபோது, கைக்கடிகாரத்தைத் தவற விட்டவருக்கு நேரெதிர் இருக்கையில் அமர்ந்திருந்த ஒருவர் மட்டும் எதனைப் பற்றியும் கவலைப்படாமல் ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக்கொண்டே இருந்தார். இதனைப் பார்த்தவர்கள் அவர் மீது கடுப்பில் இருந்தனர்.

இதற்குள் அடுத்த ரயில் நிலையம் வந்துவிட்டது. இந்தப் பெட்டி அருகே நிறைய அதிகாரிகள் காத்திருந்தனர்.

இதனைப் பார்த்ததும் மற்றவர்கள் பரபரப்புடன் அந்த அதிகாரிகளிடம் கைக்கடிகாரம் தொலைந்துபோனதைப் பற்றி வருத்தத்துடன் கூறி, ஏதாவது உதவி செய்யுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தனர்.

இந்நேரத்தில் அந்த எதிர் இருக்கையில் அமர்ந்திருந்தவரோ, அந்த அதிகாரிகளிடம் இங்கிருந்து இருபத்தயிந்து கம்பங்களுக்குப் பின்னால் இவரது விலை உயர்ந்த கடிகாரம் விழுந்துவிட்டது. அதனைக் கண்டுபிடித்து இவரிடம் சமர்ப்பித்து விடுங்கள்” என்றார்.

அந்த எதிர் இருக்கைக்காரர் ராஜாஜி!

நீதி : பரபரப்பான சூழலில் பதற்றப்படாமல் சமயோசிதமாகச் சிந்தித்து நடந்து கொள்ளவேண்டும்.

Comments

Popular posts from this blog

சூழ்நிலை

எந்த சூழ்நிலையிலும் இறைவன் கைவிட மாட்டார்..!

ரசவாதி - The Alchemist (Tamil) : பாலோ கொயலோ